தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 11:19
நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எந்த துர்சிந்தைகளுக்கும் இடம்கொடாதபடி நம்முடைய மனதை விலக்கி காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய மாம்சமும், மனதும் விரும்புகிறதை செய்யாமல் தேவனுடைய சித்தம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 13:16-22
அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப்பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,
தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப்பூட்டு என்றான்.
அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.
அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவருணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள்.
அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப் பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.
தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான்.
அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது அம்னோன் தாமாரை மிகவும் வெறுத்தான். அவன் விரும்பின விருப்பத்தை பார்க்கிலும் வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால் நீ எழுந்து போய் விடு என்று அம்னோன் அவளோடு சொன்னதற்கு, அவள் எனக்கு முந்தி செய்த அநியாயத்தை பார்க்கிலும், இப்பொழுது என்னை துரத்தி விடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள். ஆனாலும் அவன் அவளுடைய சொல்லை கேட்க மனதில்லாமல், தன் வேலைக்காரனிடம் இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவை பூட்டு என்று சொல்ல, அவன் அவ்விதமே செய்தான். தாமார் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக் கொண்டிருந்தாள். ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிகொத்த சால்வைகளை தரித்துக்கொள்வதுண்டு. அப்போது தாமார் தன் தலையின் மேல் புழுதியை போட்டு கொண்டு, அவள் தரித்திருந்த பலவர்ண வஸ்திரத்தை கிழித்துக்கொண்டு, தன் கையைத் தன் தலையின் மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுக்கொண்டு போனாள். அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளை பார்த்து; உன் சகோதரன் அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே நீ மவுனமாயிரு; அவன் உன் சகோதரன்; இந்த காரியத்தை மனதில் வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்து கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள். இந்த காரியங்களையெல்லாம் ராஜா கேள்விப்பட்டு, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம், அம்னோனோடே நன்மையாகிலும், தீமையாகிலுது பேசவில்லை, தன் சகோதரியான தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனை பகைத்தான்.
பிரியமானவர்களே; கிறிஸ்துவின் சிங்காசனம் உள்ளத்தில் தேவன் அமைத்த பிறகு நீதியும், நியாயமும் சிங்காசனத்தின் ஆதாரம்; ஆனால் இஸ்ரவேல் யூதாவுக்கு ராஜாவாகிய தாவீதின் குமாரனாகிய அம்னோனுடைய மனது தாமாரின் மேல் மோகங்கொண்டதால், ஒரு பெரிய பாவத்திற்குள்ளாக குமாரனும், குமாரத்தியும் விழுந்து விடுகிறார்கள். இவற்றை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால் நம்முடைய மாம்சம் விரும்புகிறதை மனதுசெய்யாமல் இருக்குமானால் நம்முடைய உள்ளான மனுஷனுடைய பரிசுத்தம் காக்கப்படும். ஆனால் அம்னோனை போல கட்டாயப்படுத்தி மனதை வஞ்சித்து இச்சையில் விழ செய்வோமானால்; பிசாசானவன் நம்மை அசுத்திபடுத்தி நாம் நம்முடைய பரிசுத்தத்தை இழந்து விடுவதற்கு ஏதுவாகிவிடும். அல்லாமலும் மாம்ச சிந்தையால் மனதை கறைப்படுத்துவோமானால், பின் அந்த மனசு எப்போதும் மாம்ச கிரியைகளுக்கே அடிமையாகி விடும். இவைதான் அம்னோன், தாமாருடைய வாழ்விலும் வந்தது. எப்படியெனில் அம்னோன் வெறுத்து துரத்தின பின்பும் போக மனதில்லாமல், அவன் வேலைக்காரனை வைத்து தாமாரை துரத்துகிறான். அந்த மனதில் வந்த துர் எண்ணம் நம் யாருடைய வாழ்விலும் வராதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு இச்சைக்கும் நம் உள்ளத்தில் இடம் கொடுக்கக்கூடாது. அப்படி துர் இச்சைக்கு உள்ளத்தில் இடம் கொடுப்போமானால் நம்முடைய ராஜ குமாரத்தியின் ஸ்தானத்திலிருந்து மாற்றப்பட்டு நம்முடைய வாழ்வு தனிமையாக்கப்பட்ட வாழ்வாக கிலேசப்பட்டுக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கும். கர்த்தர் நம்மை கைவிட்டு விடுவார். ஆதலால் எந்த உலக இன்பங்களுக்கும் இடம் கொடுக்காதபடி நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் நம் ஆத்துமா எப்போதும் பரிசுத்தமாக காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.