தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 10:28

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய மாம்ச சிந்தைகளால் வந்த பாவத்தை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து ஆத்துமாவை காத்துக்கொள்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் எந்த துர்சிந்தைகளுக்கும் இடம்கொடாதபடி நம்முடைய மனதை விலக்கி காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது  என்னவெனில் 

2 சாமுவேல் 13:23-27 

இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான்.

அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.

அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான்.

அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான்.

மேற்கூறிய வசனங்களில்  அம்னோன், அப்சலோமின் சகோதரியை கற்பழித்ததினால் அம்னோனை அப்சலோம் பகைத்தான். இரண்டு வருஷம் சென்ற பின்பு அப்சலோம் எப்பிராயீமுக்கு அருகான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து ஆடுகளை மயிர் கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான். அவன் ராஜாவினிடததில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர் கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறான்.  அப்போது ராஜா அப்சலோமை பார்த்து அப்படி வேண்டாம், எல்லாரும் வரும் போது அதிக செலவு வரும் என்றான்; அவனை வருந்தி கேட்டாலும் அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.  பின்பு அப்சலோம் அப்படியில்லையென்றால் என் சகோதரனாகிய அம்னோனாவது  எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா அம்னோனிடம் அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்ற போது; அப்சலோம் பின்னையும் வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால் அவன் அம்னோனையும், ராஜ குமாரர் அனைவரையும் அவனோடே போக விட்டான்.  

அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி

2 சாமுவேல் 13:28-30 

அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.

அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து, அவரவர் தம்தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள்.

அவர்கள் வழியில் இருக்கிறபோதே, அப்சலோம் ராஜகுமாரரையெல்லாம் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீந்திருக்க விடவில்லை என்கிறதாய், தாவீதுக்குச் செய்தி வந்தது.

மேற்கூறபட்ட வசனங்களில் அப்சலோம், தன் வேலைக்காரர்களிடம் சொன்னது போல் அம்னோனுக்கு செய்தார்கள். அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து அவரவர் கோவேறுகழுதையின் மேல் ஏறி ஓடிப்போனார்கள்.  மேலும் வழியில் இருக்கும் போது அப்சலோம் ராஜகுமாரரையெல்லாம் அடித்துக் கொன்றப் போட்டான். அவர்களில் ஒருவரும் மீந்திருக்க விடவில்லை என்று தாவீதுக்கு செய்தி வந்த போது ராஜா எழுந்திருந்து தன் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு தரையிலே விழுந்து கிடந்தான்.  அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு நின்றார்கள். அப்போது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் சொன்னது 

2 சாமுவேல் 13:32  

அப்பொழுது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் வந்து: ராஜகுமாரரான வாலிபரையெல்லாம் கொன்றுபோட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன்மாத்திரம் செத்துப்போனான்; அவன் தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் நெஞ்சில் இருந்தது.

மேற்கூறப்ட்ட வார்த்தைகளினால் ராஜகுமாரரையெல்லாம் கொன்று போடவில்லை என்றும்  அம்னோன் மாத்திரம் செத்தான் என்றும், அவன் தன் சகோதரியாகிய தாமாரை கற்பழித்த நாள் முதற்கொண்டு அவன் நெஞ்சில் இருந்தது என்றும் யோனதாப் தாவீது ராஜாவினிடத்தில் சொல்கிறான்.  

பிரியமானவர்களே, மாம்சத்திலே வந்த துர்சிந்தைகளினால் மனதிலே அம்னோனுக்கு மனப்போராட்டம்  உண்டாகிறது. அந்த மனப்போராட்டத்தினால் கற்பழிக்கப்பட்ட தாமார் தன்னுடைய ஆத்மீக வாழ்விலும், மற்றும் அவளுடைய  வாழ்விலும் மனகிலேசமடைகிறாள்.  ஆதலால் அங்கு ஒரு ஆத்துமா கொல்லப்படுகிறதை பார்க்கிறோம்.  இதிலிருந்து தெரியப்படுவது என்னவென்றால் நாம் மாம்சீக சிந்தைகளுக்கு அடிமைப்படுவோமானால், மனது அலைகழிக்கப்பட்டு, நம்முடைய ஆத்துமா கொலைசெய்யப்படுகிறது.  மேலும் நாம் செய்த குற்றத்தை  கர்த்தரிடத்தில் அறிக்கைப்பண்ணாமல் இருப்போமானால் கர்த்தர் அவருடைய மனதிலிருந்து நம் குற்றத்தை மறக்கிறவர் அல்ல. நாம் செய்த செய்கைக்கு தக்க பதிலளிப்பார் என்பது நிச்சயம்.  ஆகலால் கர்த்தருக்குள் பிரியமானவர்களே, நாம் எங்கு கர்த்தரை விட்டு தூரமாய் போய் மாம்சத்துக்குரியவைகளை செய்தோமோ, அந்த காரியத்தை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.