தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 21: 15

நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் குற்றமில்லாமல் தண்டிக்கமட்டார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய மாம்ச சிந்தைகளால் வந்த பாவத்தை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது  என்னவெனில், 

2 சாமுவேல் 13: 33- 39 

இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான்.

ஜாமக்காரச் சேவகன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேகம் ஜனங்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாய் வருகிறதைக் கண்டான்.

அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜகுமாரர் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.

அவன் பேசி முடிந்தபோது, ராஜகுமாரர் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரரும் மிகவும் புலம்பி அழுதார்கள்.

அப்சலோமோ அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான்.

தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதலடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.

மேற்கூறிய வசனங்களில்  தாவீதின் குமாரர்களாகிய ராஜகுமாரர்களையெல்லாம் கொன்றுபோட்டார்கள் என்ற செய்தி தவறான செய்தி தாவீதுக்கு வந்ததை, தாவீதின் தமையானாகிய சிபியோனுடைய குமாரன் யோனதாப் சொல்கிறான், இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்ற செய்தியை ராஜா மனதில் வைக்க வேண்டாம்.  அம்னோன் மாத்திரம் செத்தான் என்றும் அப்சலோம் ஓடி போனான் என்றும் கூறுகிறான்.  ஜாமக்கார சேவகன் தன் கண்களை ஏறெடுத்து பார்த்த போது, அநேக ஜனங்கள் மலைஓரமாய் வருகிறதை கண்டான்.  அப்போது யோனதாப் ராஜாவிடம் ராஜகுமாரர்கள் எல்லாரும் வருகிறார்கள், அடியேன் சொன்னது போல் ஆயிற்று என்று யோனதாப் சொல்லி முடிந்த பின்பு, ராஜகுமாரர் எல்லாரும் புலம்பி அழுதார்கள்; அப்பொழுது ராஜாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களும் மிகவும் புலம்பி அழுதார்கள்.  பின்பு அப்சலோம் அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்தில் ஓடிப்போனான்.  தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காக துக்கித்துக் கொண்டிருந்தான்.  அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று வருஷம் இருந்தான். தாவீது ராஜா அம்னோன்,  செத்தபடியினால் அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்த போது, அப்சலோமை பின்தொடருகிறதை விட்டு விட்டான்.  

பிரியமானவர்களே முந்தின வசனங்களை நாம் தியானிக்கையில், ராஜகுமாரர்கள் என்றால் கர்த்தரால் அபிஷேகிக்கிற நம்முடைய ஆத்துமாவுக்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  மேலும் யாரானாலும் கர்த்தர் ஒன்று போல் நியாயந்தீர்க்கிறவர்.  எப்படியென்றால் அம்னோன் தான் பாவ மோக இச்சையில் விழுந்து விட்டான்; ஆனால் மற்ற தாவீதின் ராஜகுமாரர்கள் செத்தார்கள் என்ற செய்தி தவறான செய்தியாக இருந்தது.  ஆதலால் குற்றம் செய்யாதவர்களை கர்த்தர் தண்டிக்கிறவர் அல்ல என்பதை அறிய முடிகிறது.  அல்லாமலும் நாம் புரிந்துக்கொள்வது என்னவென்றால் கர்த்தரால் அபிஷேகித்தாலும், ஆத்துமாவை சத்துரு பாவ மோகத்தில் இழுத்துக் கொள்ளும்.  ஆதலால் நாம் வஞ்சிக்கப்படாதபடிக்கு காத்துக்கொள்ள வேண்டும். எப்படியென்றால் நம்முடைய ஆத்துமா வஞ்சிக்கப்பட்டு, அழிக்கப்பட்டால் கர்த்தர் நமக்காக மிகவும் துக்கப்படுகிறவர் என்பதனை உணர்ந்து நாம் ஜாக்கிரதையோடு பரிசுத்தத்தை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.