தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மத்தேயு 18:21,22
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடையவர்களிடத்தில்(சபையாம் சகோதரர்கள்) தாங்கலடையக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்குதியில், மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் குற்றமில்லாமல் தண்டிக்கமட்டார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 14:1-10
ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு,
அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவு கொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப்போலக் காண்பித்து,
ராஜாவினிடத்தில் போய், அவரை நோக்கி: இன்ன இன்ன பிரகாரமாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவள் வாயிலே போட்டான்.
அப்படியே தெக்கோவா ஊராளான அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள்.
ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் சென்றுபோனான்.
உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றுபோட்டவனை ஒப்பி; அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடிக்கு, எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள்.
ராஜா அந்த ஸ்திரீயைப் பார்த்து: நீ உன் வீட்டுக்குப் போ, உன் காரியத்தைக்குறித்து உத்தரவு கொடுப்பேன் என்றான்.
பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள்.
அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடராதிருப்பான் என்றான்.
மேற்கூறபட்ட வசனங்களில் சொல்லபட்டிருக்கிறது என்னவென்றால் தாவீதின் இருதயம் அப்சலோமின் மேல் தாங்கலாயிருக்கிறதை செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற ஒரு புத்தியுள்ள ஸ்திரீயை அழைத்து நீ இழவு கொண்டாடுகிறவளைப்போல, துக்க வஸ்திரம் உடுத்துக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்து போனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயை போல காண்பித்து, ராஜாவினிடத்தில் போய் , அவரை நோக்கி இன்னின்ன பிரகாரமான வார்த்தைகளை சொல்ல வேண்டும் என்று அவளுடைய வாயிலே போட்டான். அப்படியே அந்த ஸ்திரீ ராஜாவினிடததில் போய் முகங்குப்புற விழுந்து வணங்கி , ராஜாவே இரட்சியும் என்றாள். ராஜா அவளை பார்த்து அவளிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, நான் விதவையானவள், என் புருஷன் சென்று போனான். எனக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வெளிய சண்டைப்பண்ணி, விலக்க ஒருவரும் இல்லாதிருந்ததால் ஒருவன் ஒருவனை அடித்துக்கொன்றுப்போட்டான். வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி தன் சகோதரனை கொன்றுபோட்டவனை ஒப்பி; அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக அவனையும் கொன்றுப் போடுவோம்; சுதந்தரவாளனாயினும், அவனையும் அழித்து போடுவோம் என்றார்கள். இப்படியாக என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின் மேல் வைக்காதபடிக்கு; எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப் போட மனதாயிருக்கிறார்கள் என்றாள். இவ்விதம் அவள் சொன்னதற்கு ராஜா அந்த ஸ்திரீயைப் பார்த்து; நீ உன் வீட்டுக்கு போ; உன் காரியத்தை குறித்து உத்தரவு கொடுப்பேன் என்றான். பின்னும் அந்த தெக்கோவா ஸ்திரீ ராஜாவைப் பார்த்து; ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவாகிய என் ஆண்டவன் மேலும், அவர் சிங்காசனத்தின் மேல் குற்றம் இல்லாதபடி, அந்த பழி என் மேலும், என் தகப்பன் வீட்டின் மேலும் சுமரக்கடவது என்றாள். அதற்கு தாவீது ராஜா, உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டு வா; அப்போது அவன் இனி உன்னை தொடராதிருப்பான் என்றான்.
பின்னும் அவள் ராஜாவிடம் சொன்னது
2 சாமுவேல் 14:11-17
பின்னும் அவள்: இரத்தப்பழிவாங்குகிறவர்கள் அழிம்புசெய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல உத்தரவாகவேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர், துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே, ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல் இருக்கிறார்.
நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மைவிட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்.
இப்போதும் நான் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையைப் பேசவந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாக்கினதினால், நான் ராஜாவோடே பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை.
என்னையும் என் குமாரனையும் ஏகமாய் தேவனுடைய சுதந்தரத்திற்குப் புறம்பாக்கி, அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்கலாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார்.
ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றாள்.
மேற்கூறப்படுகிற வார்த்தைகள் அந்த ஸ்திரீ ராஜாவோடக்கூற வந்த காரணம் என்ன என்பதை விளக்கும் போது ராஜா அப்சலோமிடம் தாங்குதலாயிருக்கிறதை மாற்றும் படியாக யோவாப் அந்த ஸ்திரீயினுடைய வாயிலே வார்த்தைகளை போட்டு அனுப்புகிறான். என்னவெனில் துரத்துண்டவர்களை சேர்த்துக்கொள்ளாவிட்டால், உலகத்தில் நாம் மரித்தபிறகு கர்த்தர் நம்முடைய ஜீவனை அவரோடு சேர்த்துக்கொள்ளமாட்டார் என்பதும், நாம் துரத்துண்டதை சேர்த்துக்கொள்ளாவிட்டால் அந்த நாளில் கர்த்தர் அதனை நினைக்கிறார் என்பதும் புரிய வருகிறது. அல்லாமலும் ராஜா அந்த ஸ்திரீயிடம்; நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம். அதற்கு அந்த ஸ்திரீ; ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள்.
அப்போது ராஜா:
2 சாமுவேல் 14:18 - 20
அப்பொழுது ராஜா அந்த ஸ்திரீக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்கவேண்டாம் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ, ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள்.
அப்பொழுது ராஜா: இதிலெல்லாம் யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு ஸ்திரீ பிரதியுத்தரமாக, ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னதற்கெல்லாம் வலதுபக்கத்திலாவது இடதுபக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் கூடாது என்று ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப்தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலே போட்டான்.
நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.
மேற்கூறப்ட்ட வார்த்தைள் ராஜா, ஸ்திரீயிடம் யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்க அவள் எல்லா உண்மையையும் சொல்லுகிறாள். அப்போது ராஜா யோவாபை பார்த்து; இதோ இந்த காரியத்தையெல்லாம் செய்கிறேன். அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான்.
அப்போது யோவாப்
2 சாமுவேல் 14:22-23
அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்ணில் எனக்குத் தயை கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகள் யோவாப் ராஜாவின் வார்த்தையின் படி எழுந்து கேசூருக்கு போய் அப்சலோமை அழைத்துக்கொண்டு வந்தான். அப்போது ராஜா: அவன் என் முகத்தை பார்க்க வேண்டாம்; தன் வீட்டுக்கு திரும்பி போகட்டும் என்று சொல்ல, அவன் தன் வீட்டுக்கு திரும்பி போனான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, யார் யார் எதை செய்தாலும், நாம் யாரிடத்திலும் தாங்குதலாயிருக்கக்கூடாது என்பதனை வாசிக்கிறோம். தேவனுடைய வார்த்தையானது, நாம் யாரிடத்திலாவது, குறிப்பாக சகோதரரிடத்தில் தாங்குதலாயிருப்போமானால் கர்த்தர் அவரோடு நம்மை சேர்த்துக்கொள்ள மாட்டார். ஆனால் இந்நாளிலும் அநேகர் தாங்கலடைகிறார்கள், நாம் அறிந்தோ அறியாமலோ அப்படியிருக்கிறோம். மேலும் இந்த கர்த்தருடைய வார்த்தையை வாசிக்கிற தேவ பிள்ளைகள் யாரானாலும், நம்முடைய வாழ்வில் யார் எந்த தீவினைகள் நமக்கு செய்தாலும் அதனை மனதில் வைத்து வைராக்கியம் கொள்ளாமல் விட்டு விட்டால் கர்த்தர் அவருடைய ராஜ்யத்தில் அவரோடு நம்மை சேர்த்துக்கொள்வார். இல்லையென்றால் கர்த்தர் நம்மை கைவிட்டு விடுவார். ஏனென்றால் கர்த்தர் நம்முடைய குற்றத்தை மன்னிக்கிறபடியால் ; நாமும் மற்றவர்களுடைய குற்றத்தை மன்னிக்க வேண்டும். ஆனால் நாம் மன்னிக்காவிட்டால், பரம பிதாவும் நம்முடைய குற்றத்தை மன்னிக்கமாட்டார் என்பது நிச்சயம். இதனைக்குறித்து தான் கர்த்தர் தாவீதை வைத்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் பிரியமானவர்களே, நம்மில் வந்து போன குற்றங்களை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து, நாம் யாரிடத்திலும் தாங்கலடையாதபடி நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.