தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 59:2

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தமாக மிகுந்த ஜாக்கிரதையோடு பரிசுத்த விருந்தில் பங்குக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடையவர்களிடத்தில் (சபையாம் சகோதரர்கள்) தாங்கலடையக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 14: 24 - 33

ராஜா அவன் என் முகத்தைப்பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப்போகட்டும் என்றான், அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.

இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை; உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது.

அவன் தன் தலைமயிர் தனக்குப் பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும்.

அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்திருந்தார்கள்; இவள் ரூபவதியான பெண்ணாயிருந்தாள்.

அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்.

ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தான்; அவனோ அவனிடத்திற்கு வரமாட்டேன் என்றான்; இரண்டாம்விசையும் அவன் அழைத்தனுப்பினான்; அவன் வரமாட்டேன் என்றான்.

அப்பொழுது அவன் தன் வேலைக்காரரைப் பார்த்து: இதோ என் நிலத்திற்கு அருகே யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர் அந்த நிலத்தை தீக்கொளுத்திப்போட்டார்கள்.

அப்பொழுது யோவாப் எழுந்திருந்து, அப்சலோமிடத்தில் வீட்டிற்குள்போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர் தீக்கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.

அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன்; இப்போதும் நான் ராஜாவின்முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.

யோவாப் ராஜாவினிடத்தில் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமை அழைப்பித்தான், அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில்  யோவாப் அப்சலோமை கேசூரிலிருந்து எருசலேமுக்கு அழைத்துக் கொண்டு வந்த பின், ராஜா சொன்னது என்னவென்றால் அவன் என் முகத்தை பார்க்க வேண்டியதில்லை; தன் வீட்டுக்கு திரும்பி போகட்டும் என்று சொன்னதினால் அப்சலோம் ராஜாவின் முகத்தை பார்க்காமல் தன் வீட்டுக்கு திரும்பி போனான்.  இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமை போல் சவுந்தரியமுள்ளவனும், மெச்சிகொள்ளப்பட்டவனும் இல்லை; உள்ளல்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது.  அவன் தன் தலைமயிர் தனக்கு பாரமாயிருந்ததினால் வருஷாந்தரம் சிரைத்துக் கொள்வான்; அதனை சிரைக்கும் போது ராஜாவின் நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும்.  அப்சலோமுக்கு மூன்று குமாரரும்,தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்திருந்தார்கள்; இவள் ரூபவதியான பெண்ணாயிருந்தாள்.    அப்சலோம் ராஜாவின் முகத்தை காணாமலே இரண்டு வருஷம் எருசலேமில் குடியிருந்தான்.  அப்சலோம் யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தான்.  ஆனால் யோவாப் வரமறுத்து விட்டான்.  ஆதலால் அப்சலோம் தன் வேலைக்காரரைப் பார்த்து; இதோ என் நிலத்தின் அருகே யோவாபுடைய வயல் நிலம், வாற்கோதுமை அறுப்புக்கு விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதை தீக்கொளுத்தி போடுங்கள் என்று சொல்ல; அவர்களும் அப்படியே போய் யோவாபுடைய நிலத்தை தீக்கொளுத்திப் போட்டார்கள்.  அப்பொழுது யோவாப் எழுந்து அப்சலோமுடைய வீட்டிற்குள் வந்து; என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர் தீக்கொளுத்தி போட்டது என்ன என்று கேட்டதற்கு; அப்சலோம் யோவாபை பார்த்து நான் கேசூரிலே ஏன் வந்தேன், அங்கேயிருந்திருந்தால் நலமாயிருக்கும் என்று ராஜாவினிடத்தில் சொல்வதற்கு உம்மை அழைப்பித்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தை பார்க்கட்டும்; என் மேல் குற்றமிருந்தால் அவர் என்னை கொன்று போடட்டும் என்றான்.  அப்போது யோவாப் அதனை ராஜாவினிடத்தில் அறிவித்தபோது, ராஜா அப்சலோமை அழைப்பித்தான்; அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டவைகள் எல்லாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையையும், அந்த சபைக்குள் அநியாயமான கிரியைகள் எப்படி உருவாகுதென்றும், அதனால் என்ன நிகழ்கிறது என்றும், கர்த்தர் அதனை எவ்விதம் காண்கிறார் என்றும், அவரின் செயல்களையும், நாம் மனந்திரும்பி புதுப்பிக்குதலையும் எடுத்துக்காட்டி திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அதென்னவென்றால் அம்னோனுடைய உள்ளம் ஒரே கிறிஸ்துவின் சரீரமாகிய அவயவத்தில் ஒன்றை இச்சித்ததால் அங்கு மனகிலேசம் உண்டாகிறது; மேலும் ஆத்துமா கொல்லப்படுகிறது.  ஆனால் ஆத்துமா கொலைக்கு காரணமானவன் அங்கு ராஜாவாகிய கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்க முடியாமல் மறைந்து கர்த்தருக்கு தூரமாய் சென்று விடுகிறான்.  ஆனால் அதனை சீர்திருத்துகிற தேவன் அழைத்து வைத்து, தம்முடைய முகத்தை மறைத்து, அந்த ஆத்துமா மனந்திரும்பும்படியாக எருசலேமில் குடியிருக்க செய்கிறார்.  அதன்பின் இரண்டு வருஷம் எருசலேமில் இருந்தபின் தன் தகப்பனை காணவேண்டும் என்ற வாஞ்சை உள்ளத்தில் ஏவப்படுகிறது.  அவ்விதம் உள்ளத்தில் ஒரு பாரமான காரியம் என்னவென்றால் கர்த்தரை தரிசிக்க வேண்டும் என்பதற்கு திருஷ்டாந்தம்.  அப்போது எப்படியாவது அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதால், கர்த்தர் அந்த எண்ணத்தை நிறைவேற்றுகிறார்; காரணம் அவர் அன்பினால் என்பதனை நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்.

  பிரியமானவர்களே இவ்விதம் கர்த்தர் தம்முடைய முகத்தை மறைக்க காரணம் என்னவென்றால்  தீமையான நினைவோடுகூட விருந்துக்கு அழைத்து, அங்கு ஆத்துமா கொல்லப்படுவதால் கர்த்தர் மிகுந்த துக்கம் உடையவராயிருக்கிறார்.  அதுபோல அநேக கர்த்தரின் ஊழியக்காரர்கள் அப்சலோமை போல, துர் சிந்தைகளோடு பரிசுத்தபடுத்தாத பந்தி விருந்து ஆயத்தப்படுத்தி வைத்திருப்பதால் உலக இச்சைகளில் வாழ்கிறவர்களும் வந்து பங்குபெற்று தங்கள் ஆத்துமாவை கெடுத்துக்கொள்கிறார்கள்.  

ஆதலால் தேவ வசனம்

1 கொரிந்தியர் 11:30

இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் கர்த்தர் நம்மை நியாயந்தீர்க்கிறார்.  ஆனால் பரிசுத்த பந்தி விருந்து ஆயத்தப்படுத்துகிறவர்களிடத்தில், ஆத்துமா கொல்லப்படுவதற்கு காரணமாய் அவர்கள் இருக்கிறதால் தம்முடைய முகத்தை மறைக்கிறார் என்பதனை தெரிந்துக்கொண்டு, நம்முடைய குற்றங்களை அறிக்கை செய்து முகங்குப்புற விழுந்துஅவரை  வணங்கினால் கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்கிறார்.  இவ்விதமாக நம்மிடம் உள்ள குற்றங்களை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து, கர்த்தர் தம்முடைய முகத்தை நமக்கு நேராக்கி நம்மை அவர் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.