தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 19: 9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் பொய்யாக நடந்துக்கொள்ளக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிநில், மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் ஜனங்களை தவறான பாதையில் நடத்து தேவனுக்கு துரோகம் பண்ணாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 15:7-13
நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.
கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியாதேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனைபண்ணினேன் என்றான்.
அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்குப் போனான்.
அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.
அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.
அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப் பற்றிப்போகிறது என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலில் அநேக ஜனங்களின் மனதை அப்சலோம் கவர்ந்துக்கொண்டான். பின்பு நாற்பது வருஷம் சென்ற பின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி; நான் கர்த்தருக்கு பண்ணின பொருத்தனையை எப்ரோனிலே செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும். கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வர பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியேனாகிய நான் சீரியா தேசத்தில் கேசூரிலே குடியிருக்கும் போது, பொருத்தனை பண்ணினேன் என்றான். அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான். அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான். அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுக்காரரை அனுப்பி, நீங்கள் வேவுக்காரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியை கேட்கும் போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான். எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறு பேர் அப்சலோமோடேக் கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.
பிரியமானவர்களே, அப்சலோம் தன் தகப்பனாகிய தாவீது ராஜாவுக்கு விரோதமாக மறைமுகமாக செயல்படுகிறதை பார்க்கிறோம். எப்படியெனில் எப்ரோனுக்கு பொருத்தனையை நிறைவேற்றும்படியாக போக உத்தரவு வேண்டும் என்ற ராஜாவிடம் பொய்யாக பேசி, அனுமதி வாங்கிக்கொண்டு எருசலேமிலிருந்து இருநூறு பேரை தன்னோடு அழைத்து செல்கிறான். இதற்கு காரணம் ராஜா ஸ்தானத்தைப்பெற்றுக்கொள்ளும்படியாக மோகம் கொண்டவனாக காணப்படுகிறான். இப்படிதான் நம்மில் அநேகர் கர்த்தருக்கு விரோதமாக பரஸ்திரீயினால் வஞ்சிக்கபட்டு, உள்ளத்தில் தான் ராஜா தான் என்று கிறிஸ்துவின் இடத்தை பெற்றுக்கொள்ள முற்படுவார்கள்;
அப்படியாக வருகிற ஆத்துமாவை குறித்து
ஏசாயா 14:11- 15
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் அப்படியாக தேவனை போல் தன்னை ஆக்கிக்கொள்ள நினைப்பவர்கள் அகாதமான பாதாளத்தில் தள்ளுண்டு போவார்கள். இப்படிபட்டவர்கள், அறியாமையினால் வஞ்சகம் இல்லாமல் இருக்கிறவர்களை தங்கள் வசப்படுத்தி அவர்களையும் பாதாளத்தில் தள்ளிப்போடுவார்கள். ஆதலால் நாம் எப்போதும் தேவ ஞானத்தோடும், கிருபையோடும், மனதாழ்மையோடும் நடந்துக்கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.