தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எசேக்கியேல் 37: 22
அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் கிறிஸ்து ஒருவரே நம்முடைய ராஜாவாக இருக்கவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் பொய்யாக நடந்துக்கொள்ளக்கூடாது என்பதை குறித்து நாம் தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 15:12-13
அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.
அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப் பற்றிப்போகிறது என்றான்.
மேற்கூறிய வார்த்தைகளில் அப்சலோம் பலிகளை செலுத்தும்படி எப்ரோனுக்கு போகும் போது தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகிதோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோயனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான். அப்படியே கட்டுபாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள். அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமை பற்றி போகிறது என்றான்.
அப்பொழுது தாவீது, தன் ஊழியக்காரனிடம்
2 சாமுவேல் 15:14
அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.
மேற்கூறிய வார்த்தைகளை, தாவீதினிடத்திலிருந்து கேட்ட தாவீதின் ஊழியக்காரர்கள், தாவீதிடம் சொன்னது ராஜாவிடம், ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியானாகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அப்படியே ராஜாவும், அவனுடைய வீட்டாரும் கால்நடையாய் புறப்பட்டார்கள்: வீட்டைகாக்க தாவீதின் மறுமனையாட்டிகள் பத்து ஸ்திரீகளை வைக்கிறான். பின்பு ராஜாவும், சமஸ்த ஜனங்கள் எல்லோரும் கால்நடையாய் புறப்பட்டு, சற்று தூரமாய் போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள். மேலும் அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்: காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த கித்தியர் ராஜாவுக்கு முன்னாக நடந்தார்கள்.
மேலும் ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து சொன்னது
2 சாமுவேல் 15:19-21
அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப் போகலாம்.
நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.
ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை ஈத்தாயிடம் ராஜா சொன்னலும், அவன் ராஜாவை பிரிந்து போக விருப்பமில்லாமல் இருந்ததால் தாவீது அழைத்துக்கொண்டுப் போகிறான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் கர்த்தர் ஒருவரே நம்முடைய ராஜா, ராஜாவாகிய கிறிஸ்துவின் சிங்காசனத்திற்கு வி ரோதமாக அந்நிய சேவை ஆவிகள் நம்மில் வந்து குடியேறுவதற்காக பொய்க்கு பிதாவாகிய பிசாசானவன் நம்மை வஞ்சித்து உள்ளத்தை கவர்ச்சி எடுக்கபார்க்கிறான். ஆனால் அந்நேரமே நம் உள்ளத்தில் அவர் ஒருவரே வாசம்பண்ண வேண்டும் என்பதற்காக நம்மை யுத்தத்திற்காக ஆயத்தப்படுத்தி, கர்த்தர் யுத்தம் செய்கிறவராக, வெளிப்படுகிறார். ஆதலால் கிறிஸ்து ஒருவரே நம்முடைய வாழ்வில் உயரந்தவரும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாக இருக்கும்படியாக நாம் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.