தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 25:5
ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மிலே கர்த்தரின் சிங்காசனம் நிலைத்திருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் கிறிஸ்து ஒருவரே நம்முடைய ராஜாவாக இருக்கவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 15: 22-24
அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.
சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடேகூட இருந்து சுமக்கிற சகல லேவியரும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; ஜனங்கள் எல்லாரும் நகரத்திலிருந்து கடந்துதீருமட்டும், அபியத்தார் திரும்பிப்போயிருந்தான்.
மேற்கூறிய வசனங்களில் கித்தியனாகிய ஈத்தாய் தாவீது ராஜாவிடம் நான் மரித்தாலும், உயிரோடிருந்தாலும் உம்மோடு இருப்பேன் என்று சொன்னதினால் ராஜா நீ நடந்து வா என்று சொன்னதும், ராஜாவும் ஜனங்களும் நடந்து போனார்கள்; ராஜா கீதரோன் ஆற்றை கடந்தான். ஜனங்கள் எல்லாரும் வனாந்திர வழியாய் நடந்து போனார்கள் சாதோக்கு தேவனுடைய பெட்டியை அவனோடேகூட இருந்து சுமக்கிற லேவியர் எல்லாரும் பெட்டியை அங்கே வைத்து போனார்கள்; தேசத்தார் மிகவும் அழுதார்கள். ஜனங்கள் எல்லாரும் நகரத்திலிருந்து கடந்து தீருமட்டும் அபியத்தார் திரும்பிபோயிருந்தான்.
மேலும்,
2 சாமுவேல் 15:25
ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்.
மேற்கூறப்பட்டவைகளின் விளக்கம் என்னவென்றால்; திருஷ்டாந்தமாக கர்த்தருடைய பெட்டி என்பது கர்த்தரின் வசனம்; கர்த்தராகிய இயேசு தம்முடைய சிங்கானசத்தை வேறு எந்த பொல்லாங்கானும் வஞ்சித்து எடுக்காதபடியும், கர்த்தர் அவருடைய துதியை வேறு யாருக்கும் கொடுக்கமாட்டார் என்பதும் நிச்சயம். ஆதலால் அப்சலோம் எப்ரோனிலே ராஜாவாகும்படி ஜனங்களை தன் வசப்படுத்திக்கொண்டதை அறிந்தவுடன், தன் ஜனங்களும், சாதோக்கும், கர்த்தரின் பெட்டியை சுமக்கிற சகல லேவியருமாக செல்வதை பார்க்க முடிகிறது. கர்த்தரின் சிங்காசனம் நம்மில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் ஜாக்கிரதையாகயிருந்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் நிர்விசாரமாகயிருப்போமானால் சபிக்கப்பட்ட சத்தான் வஞ்சித்து விடுவான். ஆதலால் நாம் எப்போதும் கர்த்தரின் சிங்காசனம் நம்மில் நிலைத்திருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.