தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 38:21

கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தரின் சிங்காசனம் நீதியாலும், நியாயத்தாலும் நிறைந்திருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தரின் சிங்காசனம் நிலைத்திருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 15:25-37 

ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்.

அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.

பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.

எனக்கு அறிவிக்கிறதற்கு உங்களிடத்திலிருந்து செய்திவருமட்டும், நான் வனாந்தரத்தின் வெளிகளிலே தரித்திருப்பேன் என்றான்.

அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.

தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.

அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.

தாவீது மலையின் உச்சிமட்டும்வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக்கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.

தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடேகூட நடந்துவந்தால் எனக்குப் பாரமாயிருப்பாய்.

நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.

உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்.

அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள்வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்.

அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.

ராஜா சாதோக்கை நோக்கி தேவனுடைய பெட்டியை நகரத்திற்கு திரும்பக் கொண்டு போ; கர்த்தருடைய கண்களில் எனக்கு கிருபைக் கிடைத்ததானால் நான் அதனையும், அதன் வாசஸ்தலத்தையும் பார்ப்பதற்கு திரும்ப வரபண்ணுவார் என்றான்.  மேலும் கர்த்தர் உன் மேல் எனக்கு பிரியமில்லை என்பாராகில், இதோ இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்கு செய்வாராக என்றான்.  பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி  நீ ஞானதிருஷ்டிகாரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், உங்கள் இரண்டு குமாரரும் உங்களோடேக்கூட திரும்பிப் போகட்டும்.  எனக்கு அறிவிக்கிறதற்கு உங்களிடத்திலிருந்து செய்தி வருமட்டும் நான் வனாந்தரங்களின் வெளியிலே தரித்திருப்பேன் என்றான்.  அப்படியாக சதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டு போனார்கள்.  பின்பு தாவீது தன் முகத்தை மூடிக்கொண்டு வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு ஒலிவமலையின் மேல் ஏறினான்; அவனோடிருந்த ஜனங்களும் முகத்தை மூடி அழுதுக்கொண்டு ஏறினார்கள்.   அப்சலோமோடே கட்டுப்பாடு பண்ணினவர்களோடு அகிதோப்பேல்  சேர்ந்திருக்கிறான் என்று அறிவிக்கப்பட்ட போது, தாவீது ராஜா, கர்த்தாவே அகிதோப்பேலின் ஆலோசனையை பயித்தியமாக்கிடுவீரா என்றான்.   பின்பு தாவீது மலையின் உச்சிமட்டும் வந்து அங்கே கர்த்தரை பணிந்துக் கொண்டபோது அற்கியனாகிய ஊசா தன் வஸ்திரத்தை கிழித்துக் கொண்டு, தலையில் புழுதியை போட்டுக் கொண்டு தாவீதுக்கு எதிர்பட்டு வரும் போது, தாவீது ராஜா ஊசாயிடம், நீ என்னோடேக்கூட நடந்து வந்தால் எனக்கு பாரமாயிருப்பாய். ஆதலால் நீ நகரத்திற்கு திரும்பி போய்,அப்சலோமை நோக்கி; ராஜாவே உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன், முன்பு உம்முடைய தகப்பனாருக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; நீ இப்போது உமக்கு ஊழிக்காரன் என்றாயாகில், எனக்காக அகிதோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.  உன்னோடே அங்கு சாதோக்கு, அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடம், ராஜாவின் வீட்டில் என்னென்ன செய்தி பிறக்கிறதோ, அதனை அவர்களிடம் அறிவிப்பாய்.  மேலும் அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்.  நீங்கள் கேள்விப்படுகிற செய்தியை அவர்கள் வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்.  அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாயும், அப்சலோமும் எருசலேமுக்கு வந்தார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்படுகிற விளக்கம், எதற்காக திருஷ்டாந்தபடுத்துவதென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் சிங்காசனத்தில் காணப்படுவதற்கு மாறாக பிசாசனவன் பல உபாய தந்திரங்களை ஒருக்கி மக்களை தன் வசம் இழுத்துக்கொள்ளும் போது தாவீது ஒலிவ மலையில் ஏறுகிறான் என்றால், நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருந்து உள்ளத்தில் தந்திரமான பிசாசுக்கு இடம் கொடாதபடி நாம் ஞானமாய் நடந்துக்கொள்ள வேண்டும்.  அல்லாமலும் தாவீது நடந்துக்கொள்கிற காரியத்தை சிந்திக்க வேண்டும். எப்படியென்றால் கர்த்தரின் பெட்டியையும், ஆசாரியர்களையும் அனுப்பி விட்டு அவன் மட்டும் மலையின் மேல் ஏறுகிறான் என்பதை பார்க்கிறோம். ஏனென்றால் கர்த்தரின் பெட்டி என்பது அவரின் வசனம் எப்போதும் நம்மில் காணப்படவேண்டும்.  ஆனால் நம்முடைய ஆத்துமா எப்போதும் ஒலிவமலையாகிய பிதாவின் (கிறிஸ்து) சந்நிதியில் காணப்பட வேண்டும்.  அப்படியானால் கர்த்தர் நமக்கு தருகிற ஆலோசனை ஆசீர்வாதமாகயிருக்கும்.  மேலும் கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போமானல் அவரின் சிங்காசனம் நீதியால் நிறைந்திருக்கும்.  இப்படியாக நாம் ஒவ்வொரு நாளும் நடந்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.