தேவனுக்கே மகிமையுண்டாவதாக
Iபேதுரு 4:14
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பரிசுத்தத்திலும், உண்மையிலும், நீதியிலும் விளங்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தரின் சிங்காசனம் நீதியாலும், நியாயத்தாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
IIசாமுவேல் 16:1-8
தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.
ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்து போன போது மேவிப்போசேத்தின் காரியகாரனாகிய சீபா பொதிகளை சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டு வந்து, அவனை சந்தித்தான், அவைகளில் இருநூறு அப்பங்களும், நூறு வற்றலான திராட்சபழ குலைகளும், வசந்த காலத்து பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்ச ரசமும் இருந்தது. ராஜா சீபாவைப் பார்த்து இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு; சீபா சொன்னது, கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும், பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்தவர்கள் குடிக்கிறதற்குமே என்றான். அப்பொழுது ராஜா உன் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு அவன் எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனாருடைய ராஜ்யபாரத்தை என் வசமாய்த் திரும்ப பண்ணுவார்கள் என்றான். அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்று ராஜா சொன்னதற்கு; சீபா ராஜாவாகிய என் ஆண்டவனே உம்முடைய கண்களில் தயை கிடைக்க வேண்டும் என்று பணிந்துக் கேட்டுக் கொள்கிறேன் என்றான். தாவீது ராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, சவுல் வீட்டு வம்சத்தானாகிய கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு தாவீதை தூஷித்து நடந்து வந்து சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும், இடது புறமாகவும் நடக்கையில், தாவீது ராஜாவின் மேலும், அவன் ஊழியக்காரரின் மேலும் கற்களை எறிந்தான். சீமேயி அவனை தூஷித்து: இரத்த பிரியனே; பேலியாளின் மனுஷனே, தொலைந்து போ, தொலைந்து போ, சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தபழியைத் திரும்ப பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக் கொடுத்தார்; இப்போதும் நீ உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தபிரியரான மனுஷன் என்றான். இவ்விதமாக தாவீது ராஜா சீமேயினால் தூஷிக்கப்படுகிறான்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தரால் யார் அபிஷேகிக்கப்படுகிறார்களோ, அவர்களுக்கு விரோதமாக பல பொறாமைகள் எழும்பும் என்பதும், பொறாமை என்பது பிசாசு என்பதும், அந்த பொறாமை கர்த்தரின் பிள்ளைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் செயல்பட்டு கொண்டிருக்கும் என்பதும், மேலும் சத்துருக்கள் வீட்டிற்குள்ளேயும் இருப்பார்கள் என்பதும், மேலும் யாருக்கு நன்மை செய்கிறார்களோ அவர்களே கர்த்தரின் பிள்ளைகளுக்கு விரோதமாக துணிச்சலோடு தீமை செய்வார்கள் என்பதும், மற்றும் அவர்களால் அவர்கள் தூஷிக்கப்படுவார்கள் நிந்திக்கப்படுவார்கள் என்பதும் உண்மையாக விளங்கும். இதுவுமட்டுமல்லாமல் தாவீது மேவிபோசேத்திற்காக சீபாவிடத்தில் முழு காரியங்களையும் ஒப்படைக்கிறான். ஆனால் அதே மேவிபோசேத் தாவீதுக்கு விரோதமாக இஸ்ரவேலின் ராஜ்யபாரத்திற்காக ஆசைப்படுகிறான். இவ்விதமாக இரண்டு பக்கத்திலும் தாவீது நெருக்கப்பட்டு நிந்திக்கபடுகிறான். இப்படியாகதான் நம்மில் உள்ள கிறிஸ்துவின் சிங்காசனத்தை கவிழ்க்கும் படியாக சத்துரு தந்திரமாக செயல்படுவான். அதினால் நாம் எப்போதும், பரிசுத்தத்திலும், உண்மையிலும், நீதியிலும் மாறாமல் நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.