தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 7:25
மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவர்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நமக்கு வருகிற சகல துன்பங்களையும், உபத்திரவத்தையும் சகித்து நன்மையை (இரட்சிப்பு) சுதந்தரிப்போம் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்ன என்னவென்றால்
2 சாமுவேலை 17:1-5
பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
அவன் விடாய்த்தவனும் கை தளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போய், அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன்; அப்பொழுது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால், நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி,
ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப்பண்ணுவேன், இப்படிச் செய்ய நீர் வகைதேடினால், எல்லாரும் திரும்பினபின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான்.
இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய சகல மூப்பரின் பார்வைக்கும் நலமாய்த் தோன்றினது.
ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான்.
மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் அகிதோப்பேல் அப்சலோமிடம் சேர்ந்து அவனுக்கு ஆலோசனைக்கொடுத்த பின்பு, இஸ்ரவேலர் உப்பரிகையின் மேல் அப்சலோமுக்கு கூடாரத்தை போட்டார்கள். அந்த கூடாரத்தில் அப்சலோம் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசிக்கிறான். அதன் பின்பு அகிதோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம் பேரை தெரிந்துக்கொண்டு எழுந்து இன்று இரவு தாவீதை பின் தொடர்ந்து போகட்டும். அவன் விடாய்த்தவனும், கை தளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போய் அவனை திடுக்கிடப்பண்ணுவேன்: அப்போது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாம் ஓடி போவதினால் நான் ராஜா ஒருவனை மட்டும் வெட்டி ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாய் திரும்ப பண்ணுவேன், இப்படி செய்ய நீர் வகை தேடினால், எல்லாரும் திரும்ப பின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான்க. இந்த வார்த்தைகள் அப்சலோமுக்கும், இஸ்ரவேலரின் சகல மூப்பரின் கண்களுக்கும் நலமானபடி தோன்றினது. ஆகிலும் அப்சலோம்; அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு அவன் வாய்மொழியை கேட்போம் என்றான்.
அப்போது ஊசாய் அப்சலோமிடத்தில் வந்த போது
2 சாமுவேல் 17:6
ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப்பிரகாரமாக அகிப்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படிசெய்வோமோ? அல்லவென்றால், நீ சொல் என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளின் பிரகாரம் அகிதோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால், நீ சொல் என்றான். அதற்கு ஊசாய் அப்சலோமை பார்த்து இந்த விசை அகிதோப்பேல் சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
மேலும் அவன் சொன்னது 2 சாமுவேல் 17:8-14
மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.
இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.
அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.
ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபாமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.
அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.
ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப்போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.
மேற்கூறிய வசனங்களில் நாம் தியானிக்கும் போது அப்சலோமும், இஸ்ரவேலர் எல்லாரும் அகிதோப்பேலின் ஆலோசனையை பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள். இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரபண்ணும் பொருட்டு, அகிதோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்கு கர்த்தர் கட்டளையிட்டார்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்நப்படுத்துகிறார்; என்னவென்றால் தாவீது உப்பரிகையின் மேல் ஏறி சாத்தானுடைய வஞ்சகத்தால் தன் வாழ்க்கையில் வஞ்சிக்கபட்டு விழுந்து விடுகிறான். மேலும் அவன் குமாரன் அப்சலோமும் உப்பரிகையின் மேல் ஏறி அகிதோப்பேலின் ஆவியால் வஞ்சிக்கப்பட்டு விழுகிறதை பார்க்கிறோம். ஆகையால் இதனை நிவிர்த்தி செய்யும்படியாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உப்பரிகையின் மேல் பிசாசினால் பல விதத்தில் சோதிக்கப்பட்டாலும் அவர் பிசாசினால் வஞ்சிக்கப்படாதபடி வெற்றிப்பெறுகிறார் என்பதும், மேலும் பிசாசை துரத்தி விடுகிறதையும் பார்க்கிறோம். ஆதலால் கர்த்தராகிய இயேசுவுக்கு மாத்திரமே சாத்தானை ஜெயிக்கமுடியும் என்பதனை நமக்கு விளக்கிக்காட்டும்படியாக நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின், ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, அவருடைய ராஜ்யம் நம்மில் வந்தால் மட்டுமே நாம் பரிசுத்தத்தில் வளர முடியும். இவ்விதம் பரிசுத்தமான வாழ்க்கைக்கு கர்த்தர் உப்பரிகையை நமக்கு திருஷ்டாநதப்படுத்துகிறார். மேலும் கிறிஸ்துவின் ஆவியில்லாமல் நாம் பரிசுத்தத்தை காத்துக்கொள்ள முடியாது. எப்படியெனில் பிசாசானவன் நம்மை பல ஆசைகள் காட்டி கீழே தள்ளிப்போடுவான். ஆதலால் நாம் எப்போதும் கர்த்தருக்கு பயந்து பரிசுத்தமாக வாழவேண்டும். அப்படியானால் நமக்கு எதிராக வருகிற சதியை கர்த்தர் முறியடிப்பார். மற்றும் நமக்கு விரோதமாக எழும்புகிற நல்ல ஆலோசனையை கர்த்தர் அபத்தமாக்கி, நம்மை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.