தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 26:27
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவ சித்தம் செய்யாதவர்களோடு சேரக்கூடாது
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.. அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
11சாமுவேல் 17:1 5-22
பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.
இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாய்த் தாவீதுக்கு அறிவிக்கும்படிக்குச் செய்தி அனுப்பி: நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளிலே தங்கவேண்டாம்; ராஜாவும் அவரோடிருக்கிற சகல ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்குத் தாமதம் இல்லாமல் அக்கரைப்படவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.
யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.
ஒரு பிள்ளையாண்டான் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாய்ப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனுஷன் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு, அதன்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள்.
அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடிக்காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
இவர்கள் போனபிற்பாடு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக் கடந்துபோங்கள்; இன்னபடி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள்.
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை.
மேற்கூறப்பட்ட வனங்களில் கர்த்தர் தாவீதுக்காக ஊசாய் மூலம் அகிதோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்க கட்டளையிட்டார் என்பதனை குறித்து பார்த்தோம். ஊசாய் அப்சலோமிடத்தில் ஆலோசனைக் கூறின பின்பு சதோக், அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: அகிதோப்பேல் அப்சலோமுக்கும், இஸ்ரவேல் மூப்பருக்கும் இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னான்; நானோ நான் இன்னபடி ஆலோசனை சொன்னேன் என்று சொல்லி, அவர்களிடம் நீங்கள் சீக்கிரமாய் தாவீதுக்கு அறிவிக்கும்படி செய்தி அனுப்பி; நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளிலே தங்க வேண்டாம்; ராஜாவும் அவரோடிருக்கிற ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்கு தாமதம் இலலாமல் அக்கரைப்பட வேண்டும் என்று சொல்ல சொல்லுங்கள் என்றான். யோனத்தானும், அகிமாசும்,தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு இன்றோகேல் அண்டையில் நின்றுக் கொண்டிருந்தபோது, ஒரு வேலைக்காரி போய் அதை அவர்களுக்கு சொன்னாள். அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப் போனார்கள். ஒரு பிள்ளையாண்டான் அவர்களை கண்டு அந்த காரியத்தை அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் பாகூரிலிமிருக்கிற ஒரு மனுஷன் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். அவன் முற்றத்தில் இருந்த கிணற்றில் இறங்கினார்கள். வீட்டுக்காரி ஒரு பாயை விரித்து, காரியம் வெளிப்படாதபடி,அதன் மேல் நொய்யை பரப்பினாள். அப்சலோமின் சேவகர் அங்கு வந்து அகிமாசும், யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ, வாய்க்காலுக்கு அப்பாலே போய் விட்டார்கள் என்றான். இவர்கள் தேடி காணாதே போய், எருசலேமுக்கு திரும்பினார்கள். இவர்கள் போன பின்பு கிணற்றிலிருந்து ஏறி வந்து தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி சீக்கிரமாய் ஆற்றை கடந்து போங்கள்:இன்னபடி அகிதோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள். அப்படியே தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் எழுந்து ஆற்றை கடந்து போனார்கள்;பொழுது விடிகிறதற்குள்ளே கடவாதவன் ஒருவனும் இல்லை. அகிதோப்பேல் தன் ஆலோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டு தன் கழுதையின் மேல் சேணம் வைத்து ஏறி, தன் வீட்டுக்கு போய் வீட்டுகாரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுக் கொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்ததைகளை நாம் தியானிக்கும்போது தேவனுடைய தாசனாகிய தாவீது தன் காரியங்களை குறித்து எப்படி ஆலோசனை பண்ணி சாதோக்கையும், அகமாசையுத், ஊசாயையும் எருசலேமுக்கு அனுப்பி வைத்தானோ அப்படியே கர்ததர் காரியத்தை வாய்க்க செய்கிறார். மேலும் கர்த்தர் தம்முடைய தூதர்களை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை காத்துக்கொள்வதை திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் தம்முடைய பிள்ளைகளுக்கு விரோதமாக செயல்படுகிறவர்களை கர்த்தர் எப்படிப்பட்ட தண்டனையோடு நிர்மூலம்பண்ணுகிறரார் என்பதனை வாசிக்க முடிகிறது. ஆதலால்
பிரியமனவர்களே நாம் தேவனுக்கு சித்தம் செய்யாதவர்களோடு, எந்த தொடர்பும் வைக்காமல் நம்மை காத்துக்கொள்ள வேண்டும்; அப்படியிருந்தால் நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்ள முடியும். இவ்விதம் நாம் ஒவ்வொருவரும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.