தேவனுக்கே மகிமையுண்டாவதாக

பேதுரு 2:4,5

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் ஆவிக்கேற்ற மாளிகையாக கட்டப்படவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவ சித்தம் செய்யாதவர்களோடு சேரக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

 11சாமுவேல் 17:24-29 

தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.

அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும், செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.

இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்.

தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,

மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும்பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும்,

தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.

மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளில் அகிதோப்பேல் நான்று செத்தான் என்று பார்க்கிறோம்.  பின்பு தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும்,அவனுடைய எல்லா ஜனங்களோடேக்கூட யோர்தானை கடந்தான்.  அப்சலோம் யோவாபுக்கு பதிலாக அமாசாவை இராணுவ தலைவனாக்கினான்.  இந்த அமாசா இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.  இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கிறார்கள்.  தாவீதி மக்னாயீமில் சேர்ந்த போது அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் பேருள்ள நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானாகிய அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கிலேயாத்தியனாகிய பர்சிலாவும், மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும் பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும்,  தேனையையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்கு கொண்டு வந்தார்கள்: அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும், இளைப்பும், தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படியாக செய்தார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தை நாம் தியானிக்கையில் ராஜாவின் ஸ்தானத்திற்காக யுத்தம் நெருங்குகிறதை பார்க்கிறோம்.  ஆனால் ஆவிக்குரிய யுத்தத்திற்கு இது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது; என்னவென்றால் நம்மில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நீதியாலும் நியாயத்தாலும் சிங்காசனம் நிறைந்திருக்க வேண்டும்  ஆனால் அதற்கு மாறாக பொல்லாத ஆவியானது நம்மை பாதாளத்தில் தள்ளி போடும்படியாக அநீதியாலும், அநியாயத்தாலும் நிறைக்கும் படியாக உள்ளத்தை எழுப்பிக்கொண்டிருக்கும்.  இந்த காரியங்களில் கர்த்தருடைய கிருபையால் நாம் நிறையப்பட வேண்டுமானால்; நம்முடைய உள்ளான மனுஷனில் பரிசுத்தம் நாம் பெற வேண்டும். மேலும் பரிசுத்த வாழ்க்கைக்கேற்ற தூய உள்ளம் பெற்றுக்கொள்ள கர்த்தரின் நீதியாலும், நியாயத்தாலும் நிறையப்பட வேண்டும்.  அதற்காக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தி யுத்தத்திற்கு தாவீது மக்னாயீமில் வந்திருக்கும் போது அங்கு கிடைக்கிற தாராளமான பொருட்களை பார்க்கிறோம்.  இவைகள் ஆவிக்குரிய பலன்களுக்கான திருஷ்டாந்தம்.  ஆதலால் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில்  நமக்கு அவசியமான கிருபைகளை கர்த்தர் தந்து ஆவிக்கேற்ற மாளிகைகளாக கட்டபட நீதி நியாயத்தால் நிறைந்து, சத்துருவோடு போராடி வெற்றி எடுக்கும்படி கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.