தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 143:10
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா ஒரு போதும் கோவேறு கழுதையை போல் இருக்க வேண்டாம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் ஆவிக்கேற்ற மாளிகையாக கட்டப்படவேண்டும் என்பதனை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்,
11சாமுவேல் 18:1- 10
தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,
பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.
ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.
அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.
ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.
யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்.
அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழவந்ததினால், அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று.
அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக்கண்டேன் என்றான்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள் மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றக்கதிபதிகளையும் வைத்து, பின்பு ஜனங்களை மூன்று பங்காக பிரித்து; மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கை செருயாவின் குமாரனும், யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கை கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி; நானும் உங்களோடேக்கூட புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான். ஜனங்களோ, நீர் புறப்பட வேண்டாம்; நாங்கள் முறிந்தோடி போனாலும் ஜனங்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; மேலும் எங்களில் பகுதி பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தை பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்; நீரோ எங்களில் பதினாயிரம் பேருக்கு சரி, நீர் பட்டணத்தில் இருந்துக்கொண்டு எங்களுக்கு உதவிச் செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள். அதற்கு ராஜா அவர்களிடம் உங்களுக்கு நலமானதை செய்வேன் என்று சொல்லி., ராஜா ஒலிமுக வாசல் ஓரத்தில் நின்றான்; ஜனங்கள் எல்லாம் நூறு நூறாகவும், ஆயிரமாயிரமாகவும் புறப்பட்டார்கள். பின்பு ராஜா சொன்னது யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று ராஜ கட்டளையிட்டதையெல்லாம் ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள். ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலருக்கு எதிராக புறப்பட்ட பிற்பாடு எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது. அங்கே அப்சலோம் கூட உள்ள இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். அங்கே அன்றைய தினம் இருபதினாயிரம் பேர் மடியதக்கதாய் பெரிய சங்காரம் உண்டாயிற்று. யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; பட்டயம் பட்சித்த ஜனங்களை பார்க்கிலும் காடு பட்சித்த ஜனம் அதிகம். அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின் மேல் ஏறிவரும்போது, அந்த கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலி மரத்தின் கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும், பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று. அதை கண்டு ஒருவன் யோவாபுக்கு அறிவித்தான்; இதோ அப்சலோமை ஒரு கர்வாலி மரத்திலே தொங்கக் கண்டேன் என்றான். பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களை பார்க்கும் போது, நாம் சபையாக ஆவிக்கேற்ற மாளிகையாக கட்டபட்டு கர்த்தரை ஆராதிப்பது சத்துருவோடு எதிர்த்து நின்று யுத்தம் செய்து, தேவனை மகிமைபடுத்தும்போது சத்துரு முறியடிக்கப்படுகிறான். நாம் விழிப்போடு கர்த்தருக்காய் எழும்பி பிரகாசிக்க முடியும். அதுவுமட்டுமல்லாமல் தாவீது சபையை மூன்று பேரிடமாக ஒரே சத்தியத்தின் அனுபவத்தில் தன்னோடேக்கூட நின்றவர்களிடத்தில் பிரித்து கொடுத்து யுத்தத்திற்கு அனுப்புவதும், அதன் பின்பு மக்கள் எதனை விரும்பினார்களோ,அதன்பிரகாரம் அவன் ஒலிமுக வாசலில் நிற்பதும் பார்க்கமுடிகிறது. என்னவெனில் ஒலிமுகவாசல் என்னப்படுவது பிதாவோடு ஐக்கியப்படுதலை காட்டுகிறது.அல்லாமலும் சபையானது விசுவாசிகளால் வளர்ந்து வரும் போது, மூப்பராயிருக்கிறவர்களும் கர்த்தரின் வேலையை சுதந்தரத்தோடு செய்து சபையை வளர்த்தும்படியாக அவர்களிடம் மனதார விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் நாம் பார்க்கும் போது நம்மில் அநேகர் அவ்விதம் கொடுக்காமல் தங்கள் கட்டுக்குள் எல்லாரையும் வைத்து பேரும், புகழும், வருமானமும் வர நினைப்பார்கள்; அப்படிப்பட்ட இடங்கள் நாட்கள் போக போக கடும் வேதனை உண்டாகிக்கொண்டே இருக்கும். ஆனால் அவர்கள் அதனை நினைக்காமல் ஏதோ போராட்டம் என்று சொல்வார்கள். ; அப்படிபட்ட காரியங்கள் வரும் போது அது கர்த்தரால் நேரிடுகிற காரியம் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலும் அப்சலோம் தாவீது ராஜாவை எவ்வளவு துன்பப்படுத்தினாலும், தாவீது தன் மகன் அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று ஜனங்கள் கேட்க அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டான். இதனை பார்க்கும் போது, இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் எவ்வளவு வார்த்தையினால் வேதனைப்படுத்தினாலும், கர்த்தர் நம்மை மெதுவாய் நடத்துகிறார் என்பதும், அவர் நம்மை சீக்கிரத்தில் அழிக்க விரும்பமாட்டார் என்பதும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மிகவும் அநியாயமாக கர்த்தருக்கு விரோதமாக அப்சலோமை போல துணிச்சலோடு எதிர்ப்போமானால் கர்த்தரின் கடும் கோபம் நமக்கு விரோதமாக செயல்படும். மேலும் நாம் ஒரு போதும் கோவேறு கழுதையைப்போல் இருக்க வேண்டாம்; அதனைக் குறித்து
சங்கீதம் 32:9
வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
கோவேறு கழுதையின் மேல் யாத்திரை சென்ற அப்சலோமை, அந்த கழுதை சன்னல் பின்னலான பாதையில் கொண்டு சென்றது போல், நம் ஆத்துமா தவறான பாதையில் நாம் போகாதபடி ஜாக்கிரதையாக ஆவிக்குரிய வாழ்க்கையை அனுதினம் சத்திய பாதையில் கர்த்தரின் சித்தபிரகாரம் நடக்க கற்றுக்கொண்டு நடக்க வேண்டும். அல்லாமலும் அப்சலோமுக்கு துணையாக தாவீதோடு எதிர்த்தவர்கள் சங்காரத்துள்ளாகிறார்கள். ஆதலால் நாம் நல்லவர்களின் வழியிலே நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்; அவர்களோடு கர்த்தரின் பாதையில் நடக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.