தேவனுக்கே மகிமையுண்டாவதாக
11கொரிந்தியர் 3:17
கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவில் கர்த்தருடைய சிங்காசனத்திற்கு மாறான துர் உபதேசத்தை கர்த்தரின் ஆவியினால் அழிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா தாழ்மை தரிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
11சாமுவேல் 18:16-21
அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.
அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
அப்சலோம் உயிரோடே இருக்கையில்: என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.
யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
மேற்கூறிய வசனங்களில் தாவீதின் குமாரனாகிய அப்சலோமை யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அடித்துக்கொன்ற பிறகு யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின் தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள். அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனை காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன் மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்களுக்கு கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்கு குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளதாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்த தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும். மேலும்
11சாமுவேல் 18:19
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.
இந்த வசனத்தில் கர்த்தர் சத்துருக்களின் கையிலிருந்து நீங்கலாக்கி நியாயஞ் செய்தார் என்ற செய்தியை ராஜாவுக்கு கொண்டு போக நான் ஓடட்டுமா என்று அப்சலோம் செத்து போனதை அறிவிக்கும்படி யோவாபிடத்தில் அனுமதி கேட்கிறான். அதற்கு யோவாப் இன்றைய தினம் நீ செய்தியை கொண்டு போகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியை கொண்டு போகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடிபடியினால் நீ செய்தியைக்கொண்டு போக வேண்டாம் என்று சொல்லி, யோவாப் கூஷியை நோக்கி; நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
பிரியமானவர்களே நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய காரியம் என்றவென்றால் தாவீதின் சிங்கானம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக கிரியை செய்கிற அப்சலோமின் ஆவியிலிருந்து விடுதலை பெற்றால் மட்டுமே, சிங்காசனம் நம்மில் நிலைத்திருக்கும். அதற்காக தான் கர்த்தர் நம்மில் இருந்து யுத்தத்தை நடப்பிக்கிறார். அல்லாமலும் புறஜாதிகளின் கிரியைகளும் (துன்மார்க்கம்) நம்மிடத்தில் ஆளுகை செய்யும். இவ்விதமாக மனுஷனுடைய உள்ளத்தில் பல போராட்டங்கள் எழும்பும்; அதனால் மனுஷனுக்குள் ஒரு நாளும் சமாதானம் இல்லாத வாழ்க்கை உண்டாகிறது. ஏனென்றால் நாம் துர் உபதேசத்திற்கு இடம் கொடுக்கிறதால் பொல்லாத ஆவி நம்மை வஞ்சிக்கிறது; அப்போது முழு சபைக்குள்ளும் அந்த ஆவி பகரும்; இதனை சரிசெய்யும்படியாகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மில் உயிர்ப்பிக்கபட்டு, எழும்புகிறார். மேலும் தாவீதின் சிங்காசனத்தின் ஆளுகையை கர்த்தர் அவருக்கு கொடுத்து, பின்பு நம்மில் எழும்புகிற துர்உபதேச போராட்டங்களை, நாம் கர்த்தரின் வசனம் ஏற்றுக் கொண்டு அவருக்காய் நம்மை முழுமையும் ஒப்புக்கொடுக்கும் போது,போராட்டங்களை மாற்றி நம்மை அவரோடு ஒப்புரவாக்குகிறார். இதனை தான்,
எபேசியர் 2:13-16
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் அவருடைய இரத்தத்தினால் ஒப்புரவாக்குகிறார். எப்படியெனில் அதன் பின்பு தான் அப்சலோமின் கிரியைகள் நம்மில் இடம் பெறாதபடி கர்த்தர் காத்துக்கொள்கிறார். என்னவென்றால் வேத வசனம் பிரகாரம் அப்சலோம் ஒரு தூண் நிறுத்தி அவனுக்கு அடையாளமாக வைத்திருக்கிறான் என்று எழுதப்பட்டிருப்பது நம்மில் அந்த ஆவி போராடும்(துர் உபதேசம்) என்பதனை திருஷ்டாந்தபடுத்தபட்டிருக்கிறது. மேலும் அந்த ஆவியை நாம் கர்த்தருடைய ஆவியினால் அடக்கம்பண்ணினால் , அந்த சத்துருவின் கைக்கு தப்புவிக்கப்பட்டு இரட்சிக்ப்படுகிறோம். அதனைகுறித்த தாவீதின்
சங்கீதம் 3:1-8
(தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பாடின சங்கீதம்.) கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)
மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தையினால் கர்த்தரின் சிங்காசனத்திற்கு மாறான துர் உபதேசத்திற்கு நீங்கலாக்கி, கிறிஸ்துவின் ஆவியினால் நாம் இரட்சிக்கபட்டு கர்த்தரோடு சேரும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.