தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நான் யூதா வம்சத்தாரைப் பலப்பபடுத்தி யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென். அல்லேலூயா.
கர்த்தர் நினைத்ததை நம்முடைய ஆத்துமாவில் நடப்பிக்கிற தேவன்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நம் ஆத்துமா எவ்விதத்தில் பரிசுத்தமாக காக்க வேண்டும் என்று சில காரியங்களை தியானித்தோம். ஆத்துமா பரிசுத்தமாகயிருக்குமானால் நம்முடைய ஆவி, சரீரம் இவையும் பரிசுத்தமாக காக்க முடியும்.மேலும் நம்மோடு தேவன் எப்போதும் கூட இருப்பார்.அதை தான் யோசேப்பின் வாழ்விலும் கர்த்தர் அவனை சோதித்து அறிந்து அவனை உயர்த்துகிறதை பார்க்க முடிகிறது.
ஆதியாகமம் 39:23
கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
சங்கீதம் 1:1-3
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
மேலும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக அவனுடைய பானபாத்திரக்காரின் தலைவனும்,சுயம்பாகிகளின் தலைவனும் குற்றம் செய்ததின் காரணமாக ராஜா கடும் கோபம் கொண்டு இருவரையும் யோசேப்பு காவல் வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல் பண்ணிவித்தான்.
அவர்கள் இருவரையும் விசாரிக்கும்படி தலையாரிகளின் அதிபதி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்.அவன் அவர்களை விசாரித்து வந்தான் அவர்கள் அநேக நாள் காவலில் இருந்தார்கள்.
நாம் ஒன்று சிந்திக்கவேண்டும் நம் ஆத்மா தேவனால் மீட்கப்பட்டால் எப்படி காக்க வேண்டும்.
இங்கு பார்க்கும்போது பானபாத்திரக்காரனின் தலைவனும்,சுயம்பாகிகளின் தலைவனும்,யோசேப்பும் சிறைச்சாலையில் இருக்கிறதை பார்க்கிறோம். ஆனால் எகிப்து ராஜாவுக்கு பானபாத்திரக்காரனும், சுயம்பாகியுமாகிய அவ்விரண்டு பேரும் ஒரே இராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்.
மறுநாள் காலமே யோசேப்பு இருவரையும் விசாரிக்க போயிருக்கும்போது அந்த இருவரும் கலங்கியிருந்தார்கள்
அப்பொழுது யோசேப்பு அந்த இருவரிடமும் உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான் அதற்கு அவர்கள் சொப்பனம் கண்டோம் அர்த்தம் சொல்கிறவனில்லை என்று அவர்கள் சொன்னபோது
யோசேப்பு சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
பானபாத்திரக்காரன் கண்ட சொப்பனத்திலே ஒரு திராட்சச் செடி அவனுக்கு முன்பாக இருப்பதாகவும்,அந்த திராட்சச் செடியிலே மூன்று கொடிகள் இருப்பதாகவும்,அது துளிர்க்கிறதாகவும், அதில் பூக்கள் மலர்ந்திருந்ததாகவும், அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
பார்வோனுடைய பாத்திரம் அவன் கையில் இருந்தது. அவன் அந்தப் பழங்களை பறித்து,அவைகளை பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து,அந்த பாத்திரத்தை பார்வோனுடைய கையிலே கொடுப்பதாக சொப்பனத்தை சொன்னான்.
அதற்கு யோசேப்பு சொன்ன அர்த்தம் என்னவென்றால்
ஆதியாகமம் 40:12-13
அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம்.
மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;
இந்த காரியம் நம் உள்ளத்தின் ஆத்துமாவின் செயல்களை காட்டுகிறது.என்னவெனில் நம்முடைய வாழ்வில் எகிப்தின் செயல்கள் இருக்குமானால் நாம் சரிரத்திற்கு அதிகாரி பார்வோன். நம்முடைய இருதயம் பார்வோனின் பாத்திரம் ஆனால் அவன் முன்னால் கண்ட திராட்சச்செடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதின் மூன்று கொடிகள்,மூன்று நாளைக்குள் அவர் தேவாலயத்தை நம்முடைய இருதயத்தில் எழுப்புவார். ஆனால் அந்தப் பாத்திரம் பார்வோனுடைய கரத்தில் இருக்கிறது என்பதை தேவன் நமக்கு விளக்கிக் காட்டுகிறார். என்னவெனில் இந்த சொப்பனம் யோசேப்பு எகிப்து சிறையில் இருக்கும் போது அங்குள்ள பானபாத்திரக்காரன் இந்த சொப்பனத்தை காண்கிறான்.
இதன் அர்த்தம் யோசேப்பால் சொல்லப்படுகிறது என்னவென்றால் யோசேப்பின் நாட்களில் நடக்கப் போகிற காரியங்களை குறித்தும் மேலும் இஸ்ரவேலர் பார்வோனின் அடிமையில் இருப்பார்கள் என்றும் தேவன் தம்முடைய ஊழியக்காரனாகிய மோசே,ஆரோன் என்பவர்களால் பார்வோனின் கரத்தில் அடிமைகளாக இருந்த பாத்திரங்களாகிய இஸ்ரவேலரை மீண்டு எடுப்பார். என்பதை குறித்தும் மேலும் கடைசிநாட்களில் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் தம்முடைய குமாரன் மூலம் புது உடன்படிக்கையாகிய இரத்தத்தால் மூன்று நாளில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை கட்டி எழுப்புகிறார் என்பது திருஷ்டாந்தபடுகிறது.
ஆனால், யோசேப்பு சொப்பனத்தின் அர்த்தம் சொல்லி விட்டு அவன் பானபாத்திரகாரனிடம் சொல்லுகிறான் நீ வாழ்வடைந்து இருக்கும் போது என்னை நினைத்து என் மேல் தயவு வைத்து என் காரியத்தை பார்வோனுக்கு அறிவித்து,இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக வேண்டும்.
யோசேப்பு எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய் கொண்டுவரப்பட்டதையும் சிறையில் இருப்பதற்கான குற்றம் தான் செய்யவில்லை என்று சொல்லுகிறான்.
இதன் அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு தான் கண்ட சொப்பனத்தை சொல்கிறான்.
மூன்று வெள்ளை கூடைகள் தலையின் மேல் இருப்பதாகவும் சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேல் கூடையில் இருந்தவைகளை பறவைகள் வந்து பட்சித்தது.
ஆதியாகமம் 40:18-19
அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம்.
இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.
இதன் காரணம் என்னவெனில் தலையின் மேல் வைத்த கூடைகள் தன்னை பெரியவனென்று காட்டுகிறதையும், மேலும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் மாம்சத்தின் கிரியைகள் இருக்கக்கூடாது என்றும்,மாம்ச சிந்தை மரணம் என்பதையும்,மேலும் நம் இருதயம் உயர்த்தப்படாமல் தன்னை தாழ்த்துகிறவர்களாக இருக்க வேண்டும். ஆனால். சுயம்பாகியின் .கூடை தலையின் மேல் இருந்ததை தேவன் காட்டுகிறார். மேலும் மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை என்றும், அவ்விதம் உள்ளவர்கள் பார்வோனின் சேனையை தேவன் அழித்தது போல் அழிப்பார் மற்றும் பார்வோனுடைய கையில் ஒப்புக் கொடுத்து விடுவார் என்பதும் நமக்குத் தெரிய வருகிறது.
எசேக்கியல் 31:10-11
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்துபோனபடியினாலும்,
நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.
யோசேப்பு சொப்பனத்தின் அர்த்தம் சொன்னபிறகு,
ஆதியாகமம் 40:20
மூன்றாம்நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,
ஆதியாகமம் 40: 21-23
பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.
சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.
ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.
ஆனால் இந்த சொப்பனம் யோசேப்புடைய வாழ்வில் தேவன் எகிப்தில் அவனை உயர்த்த போகிறார் என்பதையும் நமக்கு விளக்கிக் காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் எகிப்தில் நாம் அடிமைப்பட்டு வாழும் போது,நம்முடைய ஆத்ம வாழ்வின் மூன்றுவித காரியங்களை காட்டுகிறது.ஒன்று நாம் தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்களாகவும், மற்றொன்று இடிந்து கிடக்கிற அலங்கங்களை கட்டி எழுப்புகிறவர்களாகவும்,இவை இரண்டும் இல்லாவிட்டால் நம்முடைய ஆத்துமா விழுந்து கிடக்கிற அனுபவித்தையும் காட்டுகிறது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்கள் இதனை வாசித்து தியானிக்கிறவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆவிக்குரிய துளிர்விட்டு வளருகிற வாழ்க்கையை தெரிந்து கொண்டு தேவனுக்கேற்ற பிரியமான வேலையை செய்ய முன்வருவோம். ஜெபிப்போம்.
கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.