தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 26:2
சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் சத்திய வசனத்திற்கு கீழ்படிய வேண்டும்.
கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவில் கர்த்தருடைய சிங்காசனத்திற்கு மாறான துர் உபதேசத்தை கர்த்தரின் ஆவியினால் அழிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அதற்கு திருஷ்டாந்தம் தான் தாவீதின் குமாரரான அப்சலோம் ராஜாவாகிறதற்கு ஆசைக்கொண்டதால் இஸ்ரவேலரை தன் வசமாக்கி கொள்கிறான். மேலும் தாவீதுக்கு விரோதமாக செயல்படுகிறதால் அழிக்கபட்டு போகிறான். அடுத்தபடியாக தாம் தியானிப்பது என்னவென்றால்,
11சாமுவேல் 18:22-28
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.
தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,
கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான்; அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாய் வந்தால், அவன் வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் ஓடி கிட்டவரும்போது,
ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
மேலும் ஜாமங்காக்கிறவன்: முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் குமாரன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
மேற்கூறிய வசனங்களில் அப்சலோம் கொல்லபட்ட செய்தியை தாவீது ராஜாவுக்கு அறிவிக்கும்படி அகிமாஸ் யோவாபிடம் கேட்டதற்கு அவனை போகவேண்டாம் என்று சொல்லி கொண்டு கூஷியை அனுப்பிவிடுகிறான். பின்னும் அகிமாஸ் யோவாபிடம், கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமா என்று கேட்டதற்கு ; யோவாப்; என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கையில் நீ ஓட வேண்டியது என்ன என்றான்? அதற்கு நான் எப்படியானாலும் ஓடுவேன் என்றான்; அப்படியே அகிமாஸ் சமமான பூமிவழியாயோடி முந்திக்கொண்டான். அப்போது தாவீது இரண்டு ஒலிமுக கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின் மேல் நடந்து, தன் கண்களை ஏறெடுத்து, ஒருமனிதன் தனியே நடந்து வருகிறதை கண்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்போது ராஜ ஒருவன் தனியே வந்தால் அவன் வாயில் நல்ல செய்தி இருக்கும் என்று ஓடி கிட்ட வரும்போது; ஜாமங்காக்கிறவன் வேறொருவன் ஓடி வருகிறதை கண்டு வாசல் காக்கிறவனிடம் கூறும்போது; ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டு வருகிறவன் என்றான். மேலும் ஜாமங்காக்கிறவன் சொல்கிறான் முந்தி வருகிறவனுடைய ஓட்டம் சாதோக்கின் குமாரன் அகிமாசுடைய ஓட்டம் போல் இருக்கிறது என்று சொல்லும் போது, ராஜா அவன் நல்லமனுஷன், நல்ல செய்தி கொண்டு வருகிறான் என்றான். பின்பு அகிமாஸ் வந்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கி; ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு விரோதமாக தன் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றான். அப்போது ராஜா
11சாமுவேல் 18:29
அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
மேற்கூறிய வார்த்தைகளை அகிமாஸ் சொல்லும் போது ராஜா அவனிடம் நீ அங்கே போய் நில் என்று சொல்ல, அவன் அங்கே போய் நின்றான். பின்பு கூஷி வந்து
11சாமுவேல் 18:31
இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாயெழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.
மேற்கூறிய வார்த்தைகளை கூஷி சொல்ல, ராஜா
11சாமுவேல் 18:32-33
அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை ராஜா கேட்டவுடன், தன் மகன் அப்சலோம் செத்துப்போனான் என்று அறிந்து மிகவும் கலங்கி, மேல் வீட்டிற்குள் ஏறிப் போய் அழுதான்.
பிரியமானவர்களே நமக்கு எவ்வளவோ துன்பங்கள் வந்தாலும், சில காரியங்களை நாம் நம்மை விட்டு அகற்ற நினைக்க மாட்டோம். இதனை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தி தான் தாவீது தன் குமாரனால் மிகவும் கஷ்டபடுகிறான். ஆனாலும் அவன் மகன் என்ற ஒரு எண்ணம் உள்ளத்தில் பதிந்திருக்கிறது. அதுபோல் நம்முடைய வாழ்க்கையில் மாம்சத்தால் வந்த சில காரியங்களை நாம் மாற்ற நினைக்க மாட்டோம். இதன் விளக்கம் என்னவென்றால் நமக்குள் இருக்கிற கேட்கிற செய்கிற துர்உபதேசங்கள் நம்மை விட்டு விலக்காமல் இருக்கிறதால், கர்த்தர் நம்மை விட்டு விலகி போகிறபடியினால், நாம் அநேக கஷ்டங்களை அடைவோம்; ஆனாலும் துர்உபதேசங்களை விட்டுவிடமாட்டோம், பின்பு கர்த்தர் நம்மில் யுத்தம் செய்து அதனை அகற்றுகிறார். கிறிஸ்துவின் சிங்காசனத்திற்கு மாறாக இருக்கிற துர்கிரியைகளை அழித்து, கர்த்தரின் சத்திய வார்த்தைகளுக்கு கீழ்படியும்படி ஒப்புகொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.