தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 10:39

தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஜீவனை இழந்து, நித்திய ஜீவனைப்பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் சத்திய வசனத்திற்கு கீழ்படிய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

2 சாமுவேல் 19:1-5  

இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.

ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று.

யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.

ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது ராஜா தன் மகனாகிய அப்சலோம் செத்து போனதினால் துக்கத்தோடே மேல் வீட்டில் ஏறி சத்தமிட்டு என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமே என்று அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.  மேலும் ராஜா தன் மகனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்.  அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று.  யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள் போல ஜனங்களெல்லாம் அந்நாளில் திருட்டளவாய் பட்டணத்திற்குள் வந்தார்கள்.  ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, தன் மகனுக்காக அழுது அலறிக்கொண்டிருந்தான்.  அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய், இன்று உம்முடைய ஜீவனையும்  உம்முடைய குமாரர், குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று உம்மை பகைக்கிறவர்களை சிநேகித்து, உம்மை சிநேகிக்கிறர்களை பகைக்கிறீர் என்று விளங்குகிறது.  

மேலும் யோவாப் சொன்னது  2 சாமுவேல் 19 :6,7 

அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.

இப்போதும் எழுந்திருந்து வெளியே வந்து, உம்முடைய ஊழியக்காரரோடே அன்பாய்ப் பேசும்; நீர் வெளியே வராதிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதில்லை என்று கர்த்தர்மேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நேரிட்ட எல்லாத் தீமையைப்பார்க்கிலும், அது உமக்கு அதிக தீமையாயிருக்கும் என்றான்.

மேற்கூறப்பட்ட  வார்த்தைகளினால் யோவாப் தன் வருத்தத்தை ராஜாவுக்கு அறிவித்த உடன்  ராஜா எழுந்து போய் ஒலிமுக வாசலில் உட்கார்ந்தான்; ராஜா ஒலிமுக வாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்க்பட்ட போது ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரொவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களுக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று; அவர்கள் ராஜா; நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கி விட்டார், அவர்தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மைத தப்புவித்தார்.  இப்போதோ அப்சலோமுக்கு தப்ப தேசத்தை விட்டு ஓடிப்போனார்.  நமக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணி வைத்த அப்சலோம் யுத்தத்திலே செத்தான்; இப்போதும் ராஜாவை திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக்கொண்டார்கள்.  

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால் கர்த்தரின் சிங்காசனத்தில் அநீதியின் கிரியைகளை கர்த்தர் அழிக்கிறார்.  இவ்விதமாக நம்முடைய முந்தின மாம்ச சந்ததியாகிய பாரம்பரியம் அழிக்கப்பட்டு போனாலும் நாம் அநேக நேரங்களில் அதனை நினைத்து அழுகிறவர்களாயிருக்கிறோம்.   ஏனெனில் கர்த்தர் சபையை பரிசுத்தப்படுத்தும்படியாக சில உபத்திரவங்களை நம்மை விட்டு விலக்கும் போது; சில நேரத்தில் அது நம்மிலிருந்து பிறந்த பிள்ளையாக இருக்கலாம்; ஆனால் தேவனுடைய ராஜ்யத்தின் கட்டுமான பணிக்காக தேவன் நமக்கு நன்மை செய்யும் போது, நாம் அதனை சிந்திக்காமல், நம்முடைய உபத்திரவத்தை போலவும் நினையாமல் ஏதோ மனம் கலங்குகிறோம்; அப்படியிருப்பது தேவனுக்கு பிரியமல்லாதது.  ஆதலால் தேவ ராஜ்யத்திற்காக எல்லாவற்றையும், நம் சொந்த ஜீவனை இழந்தால் மட்டுமே நித்திய ஜீவன் நமக்கு கிடைக்கும்.  ஆதலால் நித்திய ஜீவனைப்பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.