தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எசேக்கியல் 37:24,25 

என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,

நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டிசபையாகிய நம்மெல்லாருடைய இருதயத்தையும் கர்த்தர் ஒரு மனுஷனுடைய இருதயமாக்குகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஜீவனை இழந்து, நித்திய ஜீவனைப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 19:11-14 

இப்படி இஸ்ரவேலர் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவனுக்குக் கேள்வியானபடியினால், தாவீதுராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?

நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.

நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான்.

இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பிவாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவை இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம் அழைத்து வர வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவனுக்கு கேள்வியானபடியால், தாவீது ராஜா சாதோக், அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்திற்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதரின் மூப்பரோடே பேசி, ராஜாவை தம்முடைய வீட்டுக்கு அழைத்து வர நீங்கள் மற்றவர்களுக்கு பிந்தி போவானேன்? என்று சொல்லி, நீங்கள் என்னுடைய சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவை திரும்ப அழைத்தவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.  நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும், என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப்  பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைதலைவனாயிராவிட்டால், தேவன் அதற்கு சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்கு செய்ய கடவர் என்று சொல்ல சொன்னான்.  இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும், ஒரு மனுஷருடைய இருதயத்தை போல் இணங்க பண்ணினதால் அவர்கள் ராஜாவுக்கு, நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் அப்சலோம் மரித்த பின்பு தாவீதை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கும்படி மனதை ஜனங்கள் திருப்பிக்கொண்டார்கள் என்பதை அறிந்துக் கொள்கிறான்.  இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் நம்முடைய வாழ்வில் பாரம்பரியம் அழித்தால், தாவீதின் சிங்காசனமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மில் நிலைத்திருக்க  முடியும்.  நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை களைந்து விட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது , அவர் நம்மோடுகூட வருவார் என்பதையும், எப்போதும் நம்மோடு கூட இருப்பார் என்பதையும், நம் எல்லாருடைய இருதயத்தையும் அவருடைய இருதயம் போலாக்கி ஒன்றாக இணங்க பண்ணுவார் என்பதையும், கிறிஸ்து நம்முடைய மணவாளனாகவும், நம்மெல்லாரும் அவருடைய மணவாட்டி சபையாகவும், நம்மை அவரோடு சேர்த்துக்கொள்வார் என்பதும், நாமெல்லாரையும் அவரோடுகூட சகோதரர் ஆக்குகிறார் என்பதும், நாம் அவருடைய எலும்பும், அவருடைய மாம்சமுமாயிருக்கிறோம் என்பதனை தெளிவுப்படுத்துகிறார்.  மேலும் தாவீது ராஜாவை கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தபடுத்தி, இந்த வார்த்தைகளால் நாம் அவரோடு இணைக்கப்பட்டு, இஸ்ரவேலாகிய நமக்கு ராஜாவாகவும், நம்முடைய வாழ்வில் ராஜாதி ராஜாவாகவும் அவரை ஸ்தோத்தரித்து மகிமைபடுத்தி, அவர் பாதத்தில் பணியும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.