தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 14:5,6
அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எல்லாரும் ஒரேஇருதயத்தோடு தேவனுக்கு ஆவியோடும், உண்மையோடும் ஆராதனை செய்ய வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம் எல்லாருடைய இருதயத்தையும் கர்த்தர் ஒரு மனுஷனுடைய இருதயமாக்குகிறார் என்பதனை தாவீதைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தி விளக்கினதை நாம் தியானித்தோம். பின்பு நாம் தியானிக்க போகிற வசனம் என்னவென்றால்
11சாமுவேல் 19:14-18
இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பிவாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்மட்டும் வந்தபோது, யூதா கோத்திரத்தார் ராஜாவுக்கு எதிர்கொண்டுபோய், ராஜாவை யோர்தானைக் கடக்கப்பண்ண கில்கால்மட்டும் வந்தார்கள்.
பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான்.
அவனோடே பென்யமீன் மனுஷர் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவும், அவனோடேகூட அவனுடைய பதினைந்து குமாரரும், அவனுடைய இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாய்க் கடந்துபோனார்கள்.
அவர்கள் ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரையிலே வந்தது; அப்பொழுது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,
மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேல் பிரபுக்களும், இஸ்ரவேல் ஜனங்களும் தாவீதை தங்களுக்கு ராஜாவாயிருக்கும்படி அழைத்தனுப்பினதை பார்க்கிறோம். அப்போது ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான் மட்டும் வந்த போது, யூதா கோத்திரத்தார் ராஜாவுக்கு எதிர்க்கொண்டு போய், ராஜாவை யோர்தானை கடக்க கில்கால் மட்டும் வந்தார்கள். பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூட தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டு போனான். அவனோடு கூட பென்யமீன் மனுஷர் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவும், அவனோடுகூட அவனுடைய குமாரர்கள் பதினைந்து பேரும், இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாய் கடந்துபோய், ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரை வந்தது; அப்போது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தனை கடக்க போகிற ராஜாவுக்கு முன்பாக தாழ விழுந்து
11சாமுவேல் 19:19, 20
ராஜாவை நோக்கி: என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக.
உமது அடியானாகிய நான் பாவஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்.
மேற்கூறபட்டிருக்கிற வார்த்தைகளாய் சீமேயி தான் செய்த பாவத்தை உணர்ந்து தாவீதிடத்தில் மன்னிப்பு கேட்கும் போது; செருயாவின் குமாரன் அபிசாய்; தாவீது ராஜாவினிடத்தில் சீமேயி செய்த அக்கிரமத்தை நினைப்பூட்டுகையில், தாவீது அபிசாயை பாரத்து
11சாமுவேல் 19:22-23
அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் சத்துருக்களாகிறதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,
ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
மேற்கூறப்பட்ட வசனங்கள் என்னவென்றால் சீமேயி தான் தாவீது ராஜாவுக்கு செய்த துரோகத்தை நினைத்து மன்னிப்பு கேட்கிறேன் என்றதால் தாவீது மன்னிக்கிறார் என்பதனை விளக்கி காட்டி திருஷ்டாந்தபடுத்துவது, கர்த்தருக்கு விரோதமாய் நாம் எத்தனை துரோகம் விரோதமாக செய்தாலும் நாம் உணர்ந்து மனவேதனையோடு மன்னிப்பு கேட்டால், அவர் இரக்கமுள்ளவராதலால், அவர் நம்முடைய பாவத்தை மன்னித்துவிட்டு, நம்மை சேர்த்துக்கொள்வார் என்பது நிச்சயமாக விளங்குகிறது. மேலும்
பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வதற்கு திருஷ்டாந்தப்படுத்தி இஸ்ரவேல் புத்திரர் தாவீது ராஜாவுக்கு எதிர் கொண்டு போய் ராஜாவை யோர்தானை கடக்க பண்ண கில்கால் மட்டும் வந்தார்கள் என்பது; நாம் அவரோடு ஐக்கியபடுவதற்கு நாம் அன்று வரையிலும் செய்த பாவம் அக்கிரமம் எல்லாம் மன்னிப்பு கேட்டு, தேவ வசனபிரகாரம் சுத்திகரிக்கப்பட்டு ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது; நாம் அவரோடுகூட பாவத்திற்கு மரித்து; அவரோடுகூட நீதிக்கு பிழைக்கிறோம்; அந்த நாள் உள்ளத்தில் வெளிப்படும் இடம் தான் கில்கால். கில்கால் என்பது எகிப்தின் நிந்தையை புரட்டிப்போட்ட இடம். எப்படியென்றால் இஸ்ரவேல் எல்லாரும் விருத்தசேதனம் பண்ணின பின்பு கர்த்தர், எகிப்தின் நிந்தையை புரட்டி போட்டேன் என்கிறார். இதற்கு அடையாளமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோர்தானில் இறங்கி யோவானால் ஞானஸ்நானம் பெற்று எழும்புகிறார் என்பது நமக்கு தேவன் தந்த மாதிரி. அப்படியாக நாம் ஞானஸ்நானம் பெற்று, ஆத்மாவில் உயிர்பிக்கப்பட்டு தேவனுக்கு ஆராதனை செய்வது தான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உள்ள இருதய விருத்தசேதனம். அப்போது தான் எல்லாருக்கும் ஒரே இருதயமாகும்; அப்போது நாம் எல்லாரும் ஒரே இருதயத்தோடு ஆராதனை செய்வோம். இவ்விதமான கிருபைக்காக கத்தரிடத்தில் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.