தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 19:10 

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இழந்து போனவைகளை கர்த்தரால் மீண்டும் பெற்றுக்கொள்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எல்லாரும் ஒரே இருதயத்தோடு தேவனுக்கு ஆவியோடும், உண்மையோடும் ஆராதனை செய்ய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 19:24-29 

சவுலின் குமாரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.

அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்கொண்டு வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடுகூட வராமல்போனது என்ன என்று கேட்டான்.

அதற்கு அவன்: ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம்போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.

அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.

ராஜாவாகிய என் ஆண்டவனுக்குமுன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமதுபந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்.

அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன் காரியத்தைக்குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் சீமேயி என்பவன் தாவீதை தூஷித்ததையும், பின்பு தாவீதை ராஜாவாக்கும்படி அழைக்க வந்தவனாகவும், தாவீதை கண்டவுடன் தான் செய்த பாவத்தை மன்னிப்புக் கேட்கிறவனாகவும்; அதனால் தாவீது சீமேயை ஆசீர்வதித்து நீ சாவதில்லை  என்று ஆசீர்வதிப்பதையும் பார்க்கிறோம்.  மேலும் சவுலின் குமாரனாகிய மேவிப்போசேத்தும் தாவீதுக்கு எதிர்பொண்டு வந்தான்; ராஜா போன நாள் முதற்கொண்டு, அவன் சமாதானத்தோடு திரும்பி வருகிற நாள் மட்டும் அவன் தன் கால்களைச் சுத்தம் பண்ணவுமில்லை, தன் தாடியை சவரம் பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவும் இல்லை.  அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்க்கொண்டு வருகிற போது ராஜா அவனை பார்த்து; மேவிபோசேத்தே, நீ என்னோடுக்கூட வராமல் போனது என்னென்று கேட்டான்.  அதற்கு அவன் ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானாகிய  நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின் மேல் சேணம் வைத்து அதின் மேல் ஏறி, ராஜாவோடேகூடக் போகிறேன் என்று  அடியேன் சொன்னேன். அவன் ராஜாவாகிய என் ஆண்டவனை பற்றி வீண்பழி சொன்னான்; ஆனால் ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப் போல் இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாய் தோன்றுகிறபடி செய்யும்.  

பின்பு மேவிப்பொசேத் சொன்னது 2 சாமுவேல் 19:28 

ராஜாவாகிய என் ஆண்டவனுக்குமுன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமதுபந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கேட்டபோது மேவிபோசேத் தாவீது ராஜாவோடுக்கூறிய பின் ராஜா அவனிடம் உன் காரியத்தை குறித்து அதிகமாக பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தை பங்கிட்டு க்கொள்ளுங்கள் என்றான்.  என்னவென்றால் முந்தின நாட்களில் மேவிபோசேத்தின் வேலைக்காரன் சீபா தந்திரமாக வந்து தாவீது ராஜாவை ஏமாற்றினான்.  அப்போது ராஜா சீபாவிடம் மேவிபோசேத்திற்குரியது எல்லாம் உன்னுடையது என்றான்.  ஆனால் இப்போது அவன் வஞ்சித்த காரியம் வெளியாகி, அதனை தாவீது மேவிபோசேத்திற்கு சீபாவிடத்திலிருந்து எடுத்து திரும்பக்கொடுக்கிறான்.  

பிரியமானவர்களே கர்த்தர் இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் நாம் கர்த்தராகிய இயேசுவை அறிந்தும் அவரை தேவன் என்று மகிமைபடுத்தாமலும், அவரை ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பது சாத்தானுடைய தந்திரத்தால் நம்மை அவரை விட்டு தூரப்படுத்துகிறான்.  ஆனால் அவர் நம்மை சந்திதக்கும் நாளில் நம்முடைய இருதயம் திறந்து ஒப்புக்கொடுப்போமானால், நாம் இழந்ததை அவர் நமக்கு மீட்டு தருகிறார் என்பதனை நாம் சிந்தித்து, இது வரையில் சாத்தனால் இழந்த சகலத்தையும், ஆவிக்குரிய ஆத்தும பலனை இயேசுவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்பபோம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.