தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 6:54
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் உலக ஆசை இன்பங்களை விட்டு நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் இழந்து போனவைகளை கர்த்தரால் மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 19:30- 37
அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்துவந்தான்.
பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான்.
ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான்.
பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது தாவீது ராஜா மேவிப்போசேத்திடம் நீயும், சீபாவும் நிலத்தை பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் போது மேவிப்போசேத் ராஜாவிடம், என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும் போது, சீபாவே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான். கிலேத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிருந்து வந்து, யோர்தான் மட்டும் ராஜாவை வழி விட்டனுப்ப, அவனோடேக்கூட யோர்தான் துறைமட்டும் கடந்து வந்தான். பர்சிலா எண்பது வயது சென்ற கிழவனாயிருந்தான். ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்கும்மட்டும் அவனை பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான். ராஜா பர்சிலாவை நோக்கி நீ என்னோடேக் கூட கடந்து வா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான். அதற்கு பர்சிலா ராஜாவை நோக்கி; நான் ராஜாவோடே வர , நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்? அவன் எண்பது வயதானதால் நலமானது, தீமையானது தனக்கு தெரியாது என்றும், புசித்தாலும், குடித்தாலும் அது வாய்க்கு ருசிகரமாயிருக்காது என்றும், சங்கீதக்காரர், சங்கீதகாரிகளுடைய சத்தத்தை இனி கேட்க முடியாது என்றும் ராஜாவிடம் சொல்லி விட்டு, ராஜாவோடே கொஞ்ச தூரம் மட்டும் வருவேன்; இப்படியிருக்க இந்த பெரிய உபகாரத்தை எனக்கு செய்ய வேண்டியது என்ன; நான் என் தகப்பன் தாய் கல்லறையிலே அடக்கம்பண்ணும்படி திரும்ப போகட்டும் என்று சொல்லி விட்டு உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய ஆண்டவனோடேகூட வரட்டும்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்யும் என்றான்.
பிரியபானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தர் நம்மிடத்தில் வரும்படியாக ஆயத்தத்தோடு எதிர்கொண்டு போக வேண்டும்; அப்போது அவர் நம்மை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பார் என்பதனை
ஆதியாகமம் 14:17-20
அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
மேற்கூறிய வசனத்தில் ஆபிரகாம் கர்த்தருக்கு எதிர்கொண்டு போனதும், கர்த்தர் அவனை அப்பமும், திராட்ச ரசமும் கொடுத்து ஆசீர்வதிப்பதையும் பார்க்கிறோம். இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் கிறிஸ்துவின் மாம்சமும், இரத்தமும் நாம் புசித்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதாகும். இதற்காகதான் மேவிப்போசேத் தாவீதிடத்தில், ராஜா என்னிடத்தில் வந்தது போதும்; சீபாவாகிய வேலைக்காரனே உலக பொருட்களாகிய நிலபுலன்களையெல்லாம் எடுத்துக்கொள்ளட்டும் என்கிறான். ஏனென்றால் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதே அதன் நோக்கமாக இருக்கிறது . அல்லாமலும் தாவீது ராஜா பர்சிலாவை பராமரிப்பேன் என்பதன் கருத்து கர்த்தருக்கு சித்தமானால் கிருபையினால் நாளைக்கு தியானிப்போம். இவ்விதமாக உலக ஆசைகளை இழந்து நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியும், என்பதை உணர்ந்து ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.