தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 74:3

நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக ஆமென். அல்லேலூயா,

தேவனுக்கு ஊழியம் செய்வது யார் ?கர்த்தராகிய இயேசு கிறிஸ்து:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,நம்முடைய ஆத்மீக வாழ்க்கையில், தேவசித்தம் செய்வோமானால் கர்த்தர் நினைத்ததை நம் வாழ்க்கையில் நிறைவேற்றுவார்.நம் வாழ்க்கை சந்தோசமாக மாறும். இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். என்னவென்றால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டர்கள் தேவனுடைய வேலையை செய்ய உண்மையாக ஒப்புக் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.நம்மை மீண்டெடுத்த இயேசுவின் இரத்தம், தேவனுக்கு ஊழியம் செய்ய, நம்மைத் தாழ்த்தி கொடுக்க வேண்டும்.

எபிரெயர் 9:14

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

மேலும் பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான். அந்த சொப்பனம் நதியண்டையில் அவன் நின்றுகொண்டிருக்கும் போது அழகும், புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்து புல் மேய்ந்தது.

ஆதியாகமம் 41:3-7

அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.

அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.

மறுபடியும் அவன் நித்திரை செய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.

பின்பு, சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.

சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.

காலமே பார்வோன் மனம் கலங்கி சொப்பனத்தின் அர்த்தத்தை அறியும்படியாக பலபேரை அழைத்தனுப்பினான் மந்திரவாதிகள்,சாஸ்திரிகள் என்பவர்களை அழைத்தாலும் அவர்களால் சொப்பனத்தின் அர்த்தம் பார்வோனுக்கு சொல்லக்கூடாமற் போயிற்று.

அப்பொழுது பானபாத்திரக்காரனுக்கு தான் செய்த குற்றம் நினைவில் வந்தது அது என்னவென்றால் யோசேப்பு பானபாத்திரக்காரன் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை சொல்லிவிட்டு, நீ வாழ்வடைந்திருக்கும் போது என் காரியத்தை பார்வோனுக்கு அறிவித்து,இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்க வேண்டும் என்று சொல்லியிருந்தான்.

அப்பொழுது நினைவில் வந்தவுடன் தான் செய்த குற்றம் இன்னதென்று உணர்ந்து முன் நடந்த காரியங்களை பார்வோனிடத்தில் சொல்ல

ஆதியாகமம் 41:14

அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.

யோசேப்பு பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்,தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.

பார்வோன் எகிப்தின் ராஜாவும் யூதருக்கு ராஜா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நம் இருதயம் பார்வோனின் இருதயமா இருக்கிறதா,நம் வாழ்வில் எகிப்தின் கிரியைகள் இருக்கிறதா என்பதே வாசிக்கிற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் நன்றாக தன்னைத்தானே சோதித்து அறியவேண்டும். பார்வோனுக்குக் காண்பித்த சொப்பனம் நமக்கும்,நம்முடைய குடும்பத்துக்கும்,நம்முடைய சபைக்கும்,நம் தேசத்துக்கும் என்று நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய தேவன் நம் ஆத்துமாவை மரண பாதளத்திலிருந்து விடுவித்து எடுக்கும்படியாகவே தன் ஜீவனை நமக்காகக் தந்து,நம் ஆத்துமா தேவனுடைய ஜீவனை பெற்று,நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

ஆனால் ,தேவன் காண்பித்த சொப்பனம் நதியோரத்தில் நிற்கும்போது ஏழு கொழுமையான பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்து கொண்டிருந்தது. ஆனால் இளைத்ததும் அவலட்சணமான ஏழு பசுக்கள் அவைகளின் பின் ஏறி வந்து அந்த கொழுமையான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது.

இதே போல் தான் ஒரு தாளிலிருந்து ஏழு நல்ல கதிர் ஓங்கி வளர்ந்தது,அதின் பின் சாவியான ஏழுகதிர்,அது          கீழ்காற்றினால் தீய்ந்ததான கதிர்கள் முளைத்து நல்ல கதிர்களை விழுங்கிபோட்டது.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் நாம் தேவனுடைய நல் உபதேசத்தில் வளர்ந்து நம் ஆத்துமா கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்து இருக்கும் போது,மேலும் பூரண வளர்ச்சியோடு நாம் இருக்கும் போது நம் வாழ்வில் உலகத்தின் ஆவிக்கு இடம் கொடுப்போமானால், உலக கிரியை,மாம்ச செயல்,உலக சிற்றின்பங்களுக்கு இடம் கொடுத்தால் கீழ்காற்றினால் தேவன் நம் ஆத்துமாவை இளைப்படைய செய்து பெற்றுக் கொண்ட பூரண பலனை முழுமையும் அழித்து நம் அக்கிரமத்தால் நம் வாழ்வில் முழு சந்தோஷத்தையும் இழந்து மிகவும் பஞ்சமும்,நாம் பரிபூரணமாக இருந்த அத்தனை வருஷங்களும் மறக்கப்பட்டு போகும் என்பதை தேவன் சொப்பனத்தில் நமக்கு வெளிப்படுத்துகிறார்.

அதைத்தான் யோசேப்பு சொப்பனத்தின் அர்த்தம் சொல்லுகிறதை பார்க்கிறோம்.

ஆதியாகமம் 41:29-32

எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்.

அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.

வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம்.

இந்தக் காரியம் தேவனால் நிச்சயப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.

இவ்விதமாக நடக்கபோகிற காரியத்தை தேவன் தேசத்தை ஆளுகிற பார்வோனுக்கு சொப்பனத்தில் காண்பிக்கிறார்.

அதனால் ,யோசேப்பு சொல்லுகிறான்.

ஆதியாகமம் 41:33

ஆகையால் விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.

இவை எல்லாம் தேவன் எதற்காக திருஷ்டாந்தபடுத்துகிறார் என்றால்,

யோவான் 6:27

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் எல்லா ராஜ்யங்களிலும்,தேசங்களிலும் தேவ வசனம் கிடைக்க கூடாத பஞ்சம் வரும் என்றும் அதற்காக தேவன் விவேகமும் ஞானமும் உள்ள ஒருவர் யாரென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை நமக்குள் சேகரித்து வைக்கிறவராகவும், நமக்காக நம் தேவன் அவரே ஆயத்தப்படுத்தியிருக்கிறார். நம்முடைய பஞ்சகாலமாகிய இந்த நாட்களிலும் அவர் நமக்கு தாராளமாக நல்கி தருகிறார் என்பது தெரிய வருகிறது அதனால் தான்,

நீதிமொழிகள் 2:1-5

என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

நீதிமொழிகள் 8:11- 12

முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.

ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.

ஞானம் என்பது தான் கிறிஸ்து அவர் நம்மிடத்தில் விவேகத்தோடே வாசம் பண்ணுவார்.

அவ்விதமாக நாம் அவருக்கு முழு உள்ளத்தையும் ஒவ்வொருவரும் கொடுப்போமானால் எந்த பஞ்சமும் நமக்கு வந்தாலும் நாம் பயப்பட வேண்டாம். நமக்குள்ள எல்லா ஆகாரத்தையும் அவர் கட்டாயமாக நமக்கு தந்து அனுதினமும் நம்மை போஷித்து,கிருபையால் ர்சீரவதித்து நம்மை நிலைக்கப் பண்ணுவார். நாம் ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. 

 -தொடர்ச்சி நாளை.