தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 92:15
அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் முதிர்வயதிலும் அதிகமாக பராமரிக்கிற தேவன்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவில் உலக ஆசை இன்பங்களை விட்டு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுவோம் என்பதனை குறித்து தியானிப்போம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11சாமுவேல் 19:38-41
அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
ராஜா கடந்து, கில்கால்மட்டும் போனான்; கிம்காம் அவனோடேகூடக் கடந்துவந்தான்; யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி ஜனமும், ராஜாவை இக்கரைப்படுத்தி வந்தபின்பு,
இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதாமனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்.
மேற்கூறிய வசனங்களின் படி தாவீது ராஜா, அதிக வயது சென்றவனாயிருந்த பர்சிலாவிடம் நான் உன்னை பராமரிப்பேன் என்று சொன்னதற்கு பர்சிலா உமது அடியானாகிய கிம்காம் உம்மோடேக்கூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்கு செய்யும் என்றதற்கு ராஜா என்னோடேக்கூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ வேண்டிக்கொள்வதை எல்லாம் நான் அவனுக்கு செய்வேன். ஜனங்கள் எல்லாரும் யோர்தனை கடந்த போது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து தானும் கடந்து போனான். அவனோ தன்னிடத்திற்கு திரும்பி போய்விட்டான். ராஜா கடந்து கில்கால் மட்டும் போனான்; கிம்காம் அவனோடேக்கூட கடந்து வந்தான். யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி ஜனமும் ராஜாவை இக்கரை படுத்தின பின்பு இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவிடம் எங்கள் சகோதரராகிய யூதா மனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்து வந்து, உம்முடைய வீட்டார் அனைவரையும், அவருடைய ஜனத்தார் யாவரையும் யோர்தானை கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள். அப்போது யூதா மனுஷர்
11சாமுவேல் 19:42
அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளால் யூதா மனுஷர் தாவீதிடத்தில் தாங்கள் நடந்துக்கொண்ட விதத்தை இஸ்ரவேல் மனுஷரிடத்தில் சொல்கிறதை பார்க்கிறோம். ஆனால் இஸ்ரவேல் மனுஷரோ
11சாமுவேல் 19:43
இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச்சொன்னவர்கள் நாங்களல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.
மேற்கூறிய வசனங்களில் கூறப்பட்டவைகள் இஸ்ரவேல் புத்திரர்கள் யூதா மனுஷரிடத்தில் பத்து பங்கு அதிக உரிமை உண்டு என்கிறார்கள். ஆனால் இருவரில் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது. பிரியமானவர்களே பர்சிலா அதிக வயதானதால் தாவீது அவனை பராமரிப்பேன் என்று சொல்கிறது என்னவென்றால் திருஷ்டாந்தத்தோடு; எப்படியென்றால் கர்த்தர் அவரோடுகூட இருக்கிறவர்களை முதிர் வயதானாலும் மிகவும் பராமரிக்கிற தேவன்;அதனைக் குறித்து
ஏசாயா 46:3,4
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனத்தின் கருத்துகளை நாம் தியானிப்போமானால், கர்த்தர் நம்மை தாங்குவார், சுமப்பார், தப்புவிப்பார் என்பதில் மாற்றமில்லை. மேலும் கர்த்தர் அவர்கள் கேட்கிறதை எல்லாம் கொடுக்கிறவராயிருக்கிறார். அல்லாமலும் தாவீது ராஜா இஸ்ரவேலருக்கும் யூதா மனுஷருக்கும் ராஜாவாக வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கமாயிருக்கிறது. ஆனால் யூதாவின் பேச்சு பலத்ததாயிருக்கிறது. இதன் கருத்து என்னவென்றால் இஸ்ரவேலுடைய உள்ளத்தில் யூதனாகிய கிறிஸ்துவின் கிரியை வெளிப்படும்பொருட்டாக நம் ஒவ்வொருவருடைய இருதயமும் கிறிஸ்துவின் ஆவியினால் விருத்தசேதனம் உண்டாக வேண்டும் என்பதற்காக கர்த்தர் இதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் இதனை வாசிக்கிற கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நம் எல்லாருடைய உள்ளமும் கிறிஸ்து வெளிப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.