தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11கொரிந்தியர் 10:4,5

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் பொல்லாத எண்ணங்கள் எழும்பாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் முதிர்வயதிலும் அதிகமாக பராமரிக்கிற தேவன் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 11 சாமுவேல் 20:1-8 

அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.

தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.

பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனுஷரை மூன்று நாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூட வந்து இருக்கவேண்டும் என்றான்.

அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்தகாலத்திலே வராமல் தாமதித்திருந்தான்.

அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.

அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள்.

அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் நாம் தியானிக்கும் போது தாவீது ராஜாவை, இஸ்ரவேலரும், யூத ஜனங்களும் ஒருவருக்கொருவர் எங்களுக்கு ராஜாவினிடத்தில் பங்கு அதிகமாக உண்டு என்ற பேச்சு எழுப்பினதில் யூதா ஜனங்களின் பேச்சு பலத்தது. அப்போது தற்செயலாய் பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனான சேபா என்னும் பேருள்ள ஒரு பேலியாளின் மனுஷன் அங்கு இருந்தான்.  அவன் எக்காளம் ஊதி: தாவீதிடத்தில் எங்களுக்கு பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்கு சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே நீங்கள் அவரவர் கூடரங்களுக்குப் போய் விடுங்கள் என்றான்.  அப்போது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி பிக்கிரியின் குமாரனை பின்பற்றி போனார்கள். யோர்தான் தொடங்கி எருசலேம் மட்டுமுள்ள யூத மனுஷர் எல்லாரும் தங்கள் ராஜாவை சார்ந்திருந்தார்கள்.  தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டுக்கு வந்த போது, வீட்டை காக்கும்படி வைத்துப் போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான்.  ஆனால் அவன் அவர்களிடத்தில் அவர்கள் சாகிற மட்டும் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள் மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள் போல் இருந்தார்கள்.  பின்பு ராஜா  அமாசாவை பார்த்து; நீ யூதா மனுஷரை மூன்று நாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூட என்னிடத்தில் வந்திருக்க வேண்டும் என்றான்.  ஆனால் அமாசா யூத ஜனங்களை அழைக்க போய் வர தாமதித்திருந்தான். அப்போது தாவீது அபிசாயைப் பாரத்து அப்சலோமைப் பார்க்கிலும்; பிக்கிரியின் குமாரன் சேபா இப்பொழுது நமக்கு பொல்லாப்பு செய்வான்; அவன் அரணான பட்டணங்களுக்குள் வந்தடைந்து தப்பிப்போகாதபடி   நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு அவனை பின் தொடர்ந்து போ என்றான். அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, சேபாவை பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள்.  அவர்கள் கிபியாவிலே பெரிய கல்லண்டையிலே வந்த போது, அமாசா எதிர்பட்டு வந்தான்; யோவாபோ தான் உடுத்தியிருந்த தன் சட்டையின் மேல் ஒரு கச்சையை கட்டிக்கொண்டிருந்தான்;  அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையில் தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது. பின்பு யோவாப் செய்த காரியம்

 11சாமுவேல் 20:9,10 

அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினால் அவன் தாடியைப் பிடித்து,

 தன் கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனபிரகாரம் அமாசா செத்துப்போனபின்பு யோவாபும், அவன் சகோதரன் அபிசாயும் சேபாவை பின் தொடர்ந்தார்கள்.

  பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி சொல்வது என்னவென்றால் இஸ்ரவேல், யூதா ஜனங்கள் தாவீதை ராஜாவாக தங்களுக்குள் ஏற்றுக்கொள்வதை சேபா விரும்பாமல் இஸ்ரவேலரை தாவீது ராஜாவை விட்டு துரத்திவிடுகிறான் என்றால், அது பிசாசின் கிரியை என்பதும், நம்மில் ராஜாவாகிய கிறிஸ்து வந்து வசிப்பதற்கு நாம் இடம் கொடுக்காமல் இருக்கும்படியாக சேபாவின் ஆவி நம்மை கர்த்தரை விட்டு தூரப்படுத்தி; நம்முடைய உள்ளத்தில் பல துர் எண்ணங்கள் பிசாசு கொண்டு போட்டு, நம்முடைய ஆத்துமாவை அழித்து பாழாக்கி வலுசர்ப்பத்தின் தாபரஸ்தலம் ஆக்கி விடும்.  ஆதலால் ராஜா கிறிஸ்துவின் சபையை கூடி வர செய்கிறார்; சபை கூடி கர்த்தருடைய சத்திய வசனத்தால் கர்த்தரை ஆராதிக்கும் போது, கர்த்தர் அந்த பொல்லாத ஆவியை நம்மை விட்டு அகற்றுவார். ஆனால் இங்கு  பார்க்கும் போது சபை ஆராதனை கூடி வருவது தாமதமாவதற்கு காரணமாயிருக்கிறான் அமாசா.  ஆதலால் தாவீது தன் சேவகர்களை அனுப்புகிறான். காரணம் பொல்லாதவர்களின் கூட்டம் பட்டணத்தில் வந்து தங்கியிருக்கக்கூடாது என்பதற்காக தாவீது முந்திக் கொள்கிறான்.  ஆதலால் தாவீது அனுப்பின சேவகனாகிய யோவாப் அமாசாவை வழியில் வைத்தே காணும் போது தான் கட்டி வைத்திருந்த கச்சையின் உறையிலிருந்து பட்டயம் விழுவது அவனுக்கு ஒரு அடையாளமாக இருந்ததால் அவன் அவனை பிடித்து சகமாயிருக்கிறாயா என்று விசரித்தது போல் தன் வலது கையினால் தாடியை பிடித்து முத்தஞ் செய்யும் படி , அமாசா பட்டயத்திற்கு எச்சரிக்கையாயிராத போது, யோவாப் அவனை குடல்கள் தரையிலே சரிந்து போகத்தக்கதாய், வயிற்றிலே ஒருகுத்தாக குத்தி,அவன் செத்துப்போகிறான் என்றால், இப்படிப்பட்ட பிசாசின் கிரியைகள்  நம்மில் தொடந்து கிரியை செய்ய விடாதபடி; நாமும் முந்திக்கொள்வோமானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பட்டயத்தை நமக்குள் அனுப்பி நிர்மூலம் பண்ணுகிறார்.  அப்படியானால் மட்டுமே நம்மில் தேவனுடைய ராஜ்யம் வந்து தங்கும்.  ஆதலால் நாம் இந்த வசனங்களை நன்றாக தியானித்து நம்மில் தோன்றுகிற பொல்லாத எண்ணங்களை நம்மை விட்டு விலக்கும்படியாக ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.