தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 சங்கீதம் 16:5 

 கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய கை ஒருபோதும் தேவனுக்கு விரோதமான செயலில் ஓங்கி நிற்க கூடாது. 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் பொல்லாத எண்ணங்கள் எழும்பாதபடி நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

IIசாமுவேல் 20:11-13 

யோவாபுடைய வாலிபரில் ஒருவன் செத்தவனண்டையிலே நின்று, யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதின் பட்சத்தில் இருக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போவானாக என்றான்.

அமாசா நடுவழியிலே இரத்தத்திலே புரண்டு கிடந்தபடியினால், ஜனங்கள் எல்லாரும் தரித்துநிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவனண்டையில் வருகிறவர்கள் எல்லாரும் தரித்துநிற்பதைக் கண்டு, ஒரு வஸ்திரத்தை அவன்மேல் போட்டான்.

அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பிற்பாடு, எல்லாரும் கடந்து, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் தொடர, யோவாபுக்குப் பின்சென்றார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் அமாசா யோவாபால் கொல்லப்பட்ட பின்பு,  யோவாபும், அபிசாயையும் சேபாவை பின்தொடர்ந்தார்கள்.  யோவாபுடைய வாலிபரில் ஒருவன் செத்தவனண்டையிலே நின்று யோவாபின்மேல் பிரியபடுகிறவன் எவனோ, தாவீதின் பட்சத்தில் நிற்பவன் எவனோ, அவன் யோவாபை பின்பற்றி போவானாக என்றான்.  அமாசா நடுவழியிலே இரத்தத்தில் புரண்டு கிடந்தபடியினால், ஜனங்கள் எல்லாரும் தரித்து நிற்கிறதை யோவாப் கண்டு, அவனை வழியிலிருந்து இழுத்து வயலிலே போட்டான்.  அவன் வழியிலிருந்து எடுத்துப் போட்ட பின்பு அவனண்டையில் வருகிறவர்கள் எல்லாரும் தரித்து நிற்கிறதை கண்டு, ஒரு வஸ்திரத்தை அவன் மேல் போட்டான்.  அவனை வழியிலிருந்து எடுத்துப் போட்ட பிற்பாடு எல்லாரும் யோவாபுக்கு பின்சென்றார்கள்.  பின்பு யோவாப் 

11சாமுவேல் 20:14,15 

அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேல்மட்டாகவும், பேரீமின் கடைசிமட்டாகவும் வந்திருந்தான்; அவ்விடத்தாரும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.

அவர்கள் போய் பெத்மாக்காவாகிய ஆபேலிலே அவனை முற்றிக்கைபோட்டு, பட்டணத்திற்கு எதிராகத் தெற்றுவரைக்கும் கொத்தளம் போட்டார்கள்; யோவாபோடே இருக்கிற ஜனங்கள் எல்லாரும் அலங்கத்தை விழப்பண்ணும்படி அழிக்க எத்தனம்பண்ணினார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களை பார்த்தால் சேபாவை முற்றுகைப்போட்டு யோவாபும், அவனோடேக்கூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் அலங்கத்தை விழபண்ணும்படி  அழிக்க எத்தனம் பண்ணினார்கள்.  அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு கேளுங்கள், கேளுங்கள் நான் யோவாபோடே பேசவேண்டும்;அவரை இங்கே கிட்ட வரசொல்லுங்கள் என்ற போது யோவாப் சமீபத்தில் வருகிறான்.  அப்பொழுது அந்த ஸ்திரீ; நீர் தானா யோவாப் என்று கேட்க; அவன் நான் தான் என்று சொன்னான்.  அதற்கு அவள் நான் சொல்லும் வார்த்தையை கேளும் என்று சொல்ல, அவன் கேட்கிறேன் என்றான். அவள் சொன்னது பூர்வத்திலே ஆபேலிலே விசாரித்தால் வழக்குகள் தீரும் என்பார்கள்.  இஸ்ரவேலிலே நான் சமாதானமும், உண்மையுள்ளவளாய் இருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்க பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்க வேண்டியது என்ன என்றாள்.  அதற்கு யோவாப் சொன்னது; விழுங்க வேண்டும், அழிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு தூரமாயிருப்பதாக.  அப்படியல்ல பிக்கிரியின் குமாரன் சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாக தன் கையை ஓங்கினான்; அவனை மாத்திரம் ஒப்புக்கொடுப்பீர்களானால் பட்டணத்தை விட்டு போவேன் என்றான்.  அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபை பார்த்து சொன்னது அவன் தலை மதிலின் மேலிருந்து உம்முடத்திலே போடப்படும் என்று சொல்லி, அவள் ஜனங்களிடத்தில் போய் புத்தியாய் பேசினதினால், அவர்கள் பிக்கிரியின்.  குமாரனாகிய சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடத்தில் போட்டார்கள்.  அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; அவரவர் பட்டணத்தை விட்டு கலைந்து தங்கள் தங்கள் கூடரங்களுக்குப் புறப்பட்டு போனார்கள்.  யோவாபும் ராஜாவினிடத்திற்கு போகும்படி எருசலேமுக்கு திரும்பினான்.  பின்பு யோவாப் 

11சாமுவேல் 20:23-26

யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்.

அதோராம் பகுதிகளை வாங்குகிறவனும், அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும்,

சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.

 யயீரியனாகிய ஈராவும் தாவீதுக்குப் பிரதானியாயிருந்தான்.

 மேற்கூறப்பட்டவர்கள் ராஜாவுக்கு முக்கியமானவர்களாயிருந்தார்கள்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டவர்கள் நம்மடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் திருஷ்டாந்தத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.  என்னவென்றால் இரத்தத்தில் புரண்டவன் கொலைசெய்யப்பட்டவன் என்பதும், நம்முடைய பாவத்தால் நம் ஆத்துமா கர்த்தரால் கொலைசெய்யப்படும் என்பதும், அதனை அநேகர் பார்க்கும் வண்ணமாக கர்த்தர் அவர்களை வெட்கப்படுத்துவார் என்பதும், அது சபையில் நம்முடைய உள்ளத்தில் கிடக்கிறது என்றும், அந்த கொல்லப்படுதலுக்கு காரணமான  பொல்லாத மனுஷனை கர்த்தர் எங்குயிருந்தாலும் அழிக்க வகைதேடுவார் என்பதும், ஆனால் நமக்காக பரிந்து பேசுகிற பரிசுத்த ஆவியானவர் பரிந்து பேசுகிறவராக வெளிப்படுகிறார் என்றாலும், அந்த மனுஷனுடைய வாழ்வில் மீண்டும் அது தலையெடுக்கும் என்பதால் கர்த்தர் நம்முடைய பிராணனுக்கு சேதம் வருத்தாமல் உயர்ந்து நிற்கிற பொல்லாத எண்ணங்களை ஊக்குவிக்கிற தலையை கர்த்தர் துண்டிக்கிறார்.  ஏனென்றால் நாமெல்லாரூம் இஸ்ரவேலின் சுதந்தரம் அழிக்காதபடி கர்த்தர் நம்மை நிறுத்திக்கொள்வார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  இவ்விதமாக போராட்டம் மேற்கொண்டு கிறிஸ்துவினால் வெற்றிபெற்றவர்கள் கர்த்தரின் பங்காகிவிடுகிறார்கள்.  இப்படியாக நாம் புதிய எருசலேமாக மாறும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.