தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 66:16
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் உள்ளம் உடைந்து நொறுங்கி தேசத்திற்காக ஜெபிப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய கை ஒருபோதும் தேவனுக்கு விரோதமான செயலில் ஓங்கி நிற்கக்கூடாது என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 21:1-14
தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.
அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.
ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்.
அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லையிலெங்கும் நிலைக்காதபடிக்கு, அழிந்துபோக எவன் எங்களை நிர்மூலமாக்கி எங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தானோ,
அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மேரேப் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
அவர்களைக் கிபியோனியர் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிப்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேரும் ஒருமிக்க விழுந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்புக்காலத்தின் முந்தினநாட்களிலே அவர்கள் கொன்றுபோடப்பட்டார்கள்.
அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது,
தாவீது போய், பெலிஸ்தர் கில்போவாவிலே சவுலை வெட்டினபோது, பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடப்பட்டதும், கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார் அங்கே போய்த் திருட்டளவாய்க் கொண்டுவந்ததுமான சவுலின் எலும்புகளையும், அவன் குமாரனான யோனத்தானின் எலும்புகளையும், அவர்களிடத்திலிருந்து எடுத்து,
அங்கே இருந்து அவர்களைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து,
சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டுள்ளவைகள் என்னவென்றால் தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் இருந்தது. அப்பொழுது தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு கர்த்தர் சொன்னது என்னவென்றால் கிபியோனியரைக் கொன்று போட்ட சவுலுக்காகவும், இரத்தபிரியரான அவன் வீட்டிற்காகவும் இது உண்டாயிற்று என்றார். அப்போது தாவீது ராஜா: கிதியோனியரை அழைப்பித்தான். அவர்களோ இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும் இஸ்ரவேல் புத்திரருக்காகவும், யூதா புத்திரருக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகை தேடினான். ஆகையால் தாவீது கிபியோனியரை பார்த்து; நான் உங்களுக்கு செய்ய வேண்டியது என்ன?நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படி நான் செய்ய வேண்டிய பிராய சித்தம் என்ன என்று கேட்டதற்கு; கிபியோனியர் தாவீது ராஜாவிடம் சவுலோடும், அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கும் காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும், பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனை கொன்றுப்போட வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கு இல்லை என்றார்கள். அப்படியானால் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ராஜா கேட்டதற்கு; கிபியோனியர் சொன்னது இஸ்ரவேலில் எங்கும் நிலைக்காதபடிக்கு, அழிந்து போக எவன் எங்களை நிர்மூலமாக்கி எங்களுக்குப் பொல்லாப்பு செய்ய நினைத்தானோ; அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துக்கொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே, நாங்கள் அவர்களை தூக்கிப்போட எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்றதற்கு; தாவீது ராஜா அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று சொல்கிறான். ஆனாலும் தாவீதும், யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் குமாரனாகிய மேவிபோசேத்தை தப்ப விட்டு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்கு பெற்ற இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் ஆதரியேலுக்கு பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து கிபியோனியர் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களை கர்த்தருடைய சமூகத்தில் மலையின் மேல் தூக்கிப் போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழு பேரும் ஒருமிக்க விழுந்தார்கள். வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்பு காலத்தின் முந்தின நாட்களிலே அவர்கள் கொன்றுப்போடப்பட்டார்கள். அப்போது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டு புடவையை எடுத்துக்கொண்டு போய், அதை பாறையின் மேல் விரித்து, அறுப்பு நாளின் துவக்கம் முதற்க்கொண்டு வானத்திலிருந்து அவர்கள் மேல் மழை பெய்யும் மட்டும் ஆகாயத்து பறவைகளானாலும், இரவில் காட்டு மிருகங்களாகிலும் அதன் மேல் விழ வெட்டாதிருந்தாள். சவுலின் மறுமனையாட்டி இதனை செய்தாள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்ட போது, தாவீது போய் கில்போவா மலையிலே சவுலை வெட்டின போது, பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடபட்டதும், யாபேசின் மனுஷர் அங்கே போய் திருட்டளவாய் கொண்டு வந்ததுமான சவுலின் எலும்புகளையும், அவன் குமாரனான யோனத்தானின் எலும்புகளையும் அவர்களிடத்திலிருந்து எடுத்து, அங்கேயிருந்து அவர்களை கொண்டு வந்து, தூக்கிப்போடபட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து, சேலா ஊரிலிருக்கிற அவனுடைய தகப்பனுடைய கீசின் கல்லறையிலே அடக்கம் பண்ணுவித்தான். ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள். அதற்கு பிறகு தேவன் தேசத்திற்காக செய்யப்பட்ட வேண்டுதல்களையெல்லாம் கேட்டருளினார்.
பிரியமானவர்களே, முன்னாள் கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிக்கும் போது நமக்கு உள்ளத்தில் ஒரு புது திருப்பம் வரவேண்டும். என்னவென்றால் தாவீது கர்த்தருடைய சித்தம் செய்துக்கொண்டு வந்தான் என்பதும், ஆனால் அவன் வாழ்க்கையில் நடந்த தவறுதலினால் கர்த்தர் அவனை தண்டித்தும், மீண்டும் அவன் கர்த்தரின் பாதையில் நடக்கிறான். மேலும் அவனால் செய்யப்பட்ட யுத்தம் எல்லாம் வெற்றியாக தான் இருந்தது. ஆனால் இங்கு நாம் வாசிக்கும் போது தாவீது ராஜாவாகின பின்பு மூன்று வருஷம் ஓயாமல் பஞ்சம் வந்து கொண்டிருந்தது. இதன் காரணம் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தபட்டிருப்பது சவுல் ராஜாவாக இருந்த காலங்களில் நடந்த தப்பிதங்கள் கர்த்தர் மறந்து விடவில்லை என்பதனை நமெல்லாரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதன்கருத்து என்னவென்றால் கர்த்தரால் அபிஷேகம் பண்ணபட்ட கர்த்தரின் ஊழியக்காரர்களால், சபையில் யாருக்காவது இடறல் உண்டாக்கி, அவர்கள் ஆத்துமா அழிந்து போவதற்கு காரணமாயிருந்தவர்களின் குடும்பத்திலே கர்த்தர் கோபமாகி பிராயசித்தம் (கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிப்பு)பண்ண சொல்கிறார். ஏனென்றால் ஒரு ஆத்துமா அழிந்து போவதற்கு நாம் காரணமாயிருந்தால், நம்மை இரத்தபிரியர் என்று சொல்கிறார். அல்லாமலும் புறஜாதிகளில் மீந்திருக்கிறவர்களுக்காக கர்த்தர் இரக்கம் கொண்டு, துரோக செயல் செய்தவர்கள் நடுவில் நின்று நியாயஞ் செய்கிறார் என்பது தெரிய வேண்டும். இந்த காரியத்திலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டுவது என்னவென்றால் இந்த நாட்களில் நம்முடைய,தேசம் கொடுமையும், கொள்ளை நோயும் வாதையும், அதன் காரணமாக எங்கும் பஞ்சமும் வந்துக்கொண்டிருக்கிறது.
பிரியமானவர்களே இதற்கு காரணம் யார்? நம் தேசத்தில் தேவனுடைய கோபம் வருவதற்கு காரணம் யார்? ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். மேலும் பொய்யான உபதேசங்கள், தேவனுடைய பரலோகத்துக்குரிய வார்த்தைகளை குறித்து பேசும் போது உலக ஆசீர்வாதத்தை குறித்ததான உபதேசங்கள். கர்த்தருடைய சபைகளில் கிறிஸ்துவின் சத்திய உபதேசம் காணப்பட வில்லை. பொய்யான பிசாசால் செய்கிற அற்புதங்கள், காசு பணத்திற்காக கள்ள தீர்க்கதரிசனங்கள். ஒருவருக்கொருவர் அன்பில்லாமை, மாறி மாறி வைராக்கியம் காட்டுதல், வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாமை, நீதிமானை துன்மார்க்கன் என்றும் துன்மார்க்கனை நீதிமான் என்றும் ஜனங்கள் தீர்ப்பு கூறுதல் இன்னும் சொல்லப்போனால் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆதலால் இந்நாட்களில் இருக்கிற தேவ கோபத்திலிருந்து தேசம் மீட்கபட கண்ணீர் விட்டு மட்டும் ஜெபிப்பது கர்த்தருக்கு செய்கிற துரோகம்; இது மாய்மால கண்ணீர்.
பிரியமானவர்களே நம் ஒவ்வொருவராலும் எத்தனை ஆத்துமாக்களின் ஆத்துமா மரணத்திற்கு காரணமாக நாம் இருந்தோமோ என்று உணர்ந்து, உள்ளம் உடைந்து, நொறுங்கி, இரத்தம் வியர்வையாக சிந்தி, கர்த்தரின் பாதம் எல்லாரும் ஒன்று போல் விழுவோமானால் சில வேளை நம் தேவன் தேசத்திற்கு இரங்கி வேண்டுதலை கேட்பார் என்பதில் மாற்றமில்லை. இவ்விதமாக நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.