தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 14:9
கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் எழும்புகிற இராட்சத ஆவிகளை கர்த்தரால் அழிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உள்ளம் உடைந்து நொறுங்கி தேசத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11சாமுவேல் 21:15-22
பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடேகூட அவன் சேவகரும் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள்; தாவீது விடாய்த்துப்போனான்.
அப்பொழுது முந்நூறு சேக்கல்நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்தான்.
செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.
அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம் நடந்தது; ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.
பெலிஸ்தரோடு இன்னும் வேறொரு யுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
இன்னும் ஒரு யுத்தம் காத் ஊரிலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் கைகளில் அவ்வாறு விரல்களும் அவன் கால்களில் அவ்வாறு விரல்களும், ஆக இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; இவனும் இராட்சத பிறவியாயிருந்து,
இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனான சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் அவனை வெட்டினான்.
இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் பெலிஸ்தர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் செய்தார்கள். அப்போது தாவீதும், அவன் சேவகரும் போய் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணினார்கள்; தாவீது விடாய்த்து போனான். அப்போது முந்நூறு சேக்கல் நிறை வெண்கலத்தை பிடிக்கிறவனும், புது பட்டயத்தை அரையிலே கட்டிக் கொண்டவனுமாகிய இஸ்பிபெனோப் என்னும் இராட்சதன் ஒருவன் தாவீதை வெட்ட வேண்டுமென்றிருந்தான். அப்போது அபிசாய் தாவீதிக்கு உதவியாக வந்து பெலிஸ்தனை வெட்டிக்கொன்று போட்டான். பின்பு தாவீதின் மனுஷர் இஸ்ரவேலின் விளக்கு அணைந்து போகாதபடி, நீர் எங்களோடே யுத்தத்திற்கு வரவேண்டாம் என்று ஆணையிட்டு சொன்னார்கள். அதன் பின்பு பெலிஸ்தரோடு கோபிலே யுத்தம் நடந்தது. மேலும் மேற்கூறப்பட்டவர்களில் நாலு பேரும் காத்தூரிலே இராட்சதனுக்கு பிறந்தவர்கள். இவர்கள் தாவீதின் கையினாலும், அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
பிரியமானவர்களே, கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் நம் எல்லாருடைய உள்ளத்திலும் இராட்சத ஆவிகள் உண்டு; இது நம்மை விடாய்த்து போக பண்ணும். ஆதலால் நாம் சபை ஒருமித்து கூடும் போது நம்மில் இருக்கிற இராட்சத ஆவிகளோடு கர்த்தர் யுத்தம் பண்ணி அதனை ஜெயிக்கிறார். அவ்விதம் நாம் நடந்தால் இஸ்ரவேலின் விளக்கு அணையாமல் (கிறிஸ்து) பாதுகாக்கப்படும். இவ்விதம் இராட்சத ஆவிகள் அழிக்கப்பட்டால் கர்த்தர் தேசத்தில் சமாதானத்தை கட்டளையிடுவார்; ஜனங்கள் மீட்கப்படுவார்கள். அப்படியானால் நம் உள்ளத்திலும் கிறிஸ்துவை சுதந்தரிக்க முடியும். இவ்விதாக நாம் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.