தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1சாமுவேல் 2:12

ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பேலியாளின் மக்களுக்கு உள்ளத்தில்  இடம் கொடுக்க கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் கிறிஸ்து பாடகராக எழும்புகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 11சாமுவேல் 23:1-7

தாவீதுடைய கடைசி வார்த்தைகள்: மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்:

கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.

இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.

என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?

பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக்கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.

அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான்.

மேற்கூறப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் பிரகாரம், தாவீது தன்னுடைய வாழ்க்கையில் மேன்மையாய் உயர்த்தப்பட்டு,யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய் பாடின தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. 

பிரியமானவர்களே தாவீது என்பதனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்தி, தாவீதைக் கொண்டு பேசுகிறார். இஸ்ரவேலின் தேவனும், இஸ்ரவேலின் கன்மலையுமானவர் உரைத்ததாவது, நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார்.  அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப் பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். இவை நம்முடைய உள்ளத்தில் கிறிஸ்து எவ்விதம் எழுந்தருளுகிறார் என்றும், நம்முடைய உள்ளத்தில் கிறிஸ்து தேவனுடைய வார்த்தையால் மகிமைப்படுகிறார் என்பதும், என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணபட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும், எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்க  செய்கிறார் என்றார். ஆதலால் கிறிஸ்துவினால் உண்டாகிற எல்லா ரட்சிப்பும், அவரை குறித்ததான வாஞ்சையும் நிறைவேறுகிறபடியால் நம்மில் இருந்த பேலியாளின் மக்களாகிய பொல்லாத குணங்கள் கையினால் பிடிக்கக்கூடாததாய் எறிந்துபோடப்பட வேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.  அவைகளை தொடப்போனால் அவர்கள் கிருபையில் நிறைந்தவர்களாக  இருந்தால் தான் அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும்.  பிரியமானவர்களே இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் முழுமையான வளர்ச்சி அடைய வேண்டும்.  அப்போது தான் பேலியாளின் கிரியைகள் நம்மிலிருந்து அக்கினியால் அழிக்கப்படும். அப்படியானால்  பராக்கிரமசாலியாகிய  கிறிஸ்துவோடு இசைந்து வாழமுடியும்.  இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.