தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 36:8
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஆத்தும தாகம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் பேலியாளின் மக்களுக்கு இடங் கொடுக்கக்கூடாது என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 23:8-15
தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.
இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.
இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிடமாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.
இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,
இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.
முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,
தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.
தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் பேலியாளின் கிரியைகள் நம் உள்ளத்தில் அழிக்கப்பட்ட பின்பு நம்முடைய ஆத்துமா பராக்கிரமம் அடையும். பராக்கிரமம் அடைந்து இரட்டிப்பான பெலத்தின் மேல் பெலன் அடையும்படியாக நாம் தேவனை கருத்தோடு தேடுகிறவர்களாக இருக்க வேண்டும். அதற்கு திருஷ்டாந்தப்படுத்தி தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலியின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரனின் தலைவன். இவன் எண்ணூர் பேர்களின் மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானவன். இரண்டாவதாக, அகோயின் குமாரனாகிய தோதாவின் மகன் எலெயாசர் என்பவன், இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்கு கூடின ஸ்தலத்திலே, இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான். பின்பு மூன்றாவதாக ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆசாரியன், சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரை கண்டு ஓடுகிற போது அவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப் போட்டான்; ஆதலால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார். மேலும் முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேரும் அறுப்பு நாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள். பெலிஸ்தலின் தண்டு ரெப்பாயீம் பள்ளதாக்கிலே பாளயமிறங்கின போது தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்போது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது. அப்போது தாவீது பெத்லேமின் ஒலிமுக வாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின் மேல் ஆவல்க்கொண்டு என் தாகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்?
பிரியமானவர்களே, நம் ஆத்துமா பரிசுத்தமாக இருந்து தேவ பெலன் பெற்றால் மட்டுமே திரியேக தேவனுடைய கிரியை நம்மில் வெளிப்பட்டு, நம்மில் எப்போதும் பெல்லாத கிரியைகளையும், உலக ஆடம்பர அலங்காரங்களையும் கொண்டு வந்து உள்ளத்தை இச்சிக்கிற பொல்லாத பெலிஸ்திய ஆவிகளை தேவன் நம்மிடத்திலிருந்து அழித்து நமக்கு பெரிய ரட்சிப்பை கட்டளையிடுவார். மேலும் நாம் அறிந்துக்கொள்ள வேண்டுவது பெலிஸ்திய ஆவிகள் எப்போதும் நம்மை பின் தொடருகிற காரணம் என்னவென்றால் நாம் கர்த்தருக்காக ஆத்துமா ஆதாயம் செய்யாமல் இருக்கும்படியாக நம்மை துரத்தும். ஆதலால் நாம் ஆத்தும ஆதாயம் செய்யும் படியாக, தாவீதை கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தபடுத்தி தாவீது பெத்லேமின் ஒலிமுக வாசலில் இருக்கிற கிணற்றின் மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்கு தண்ணீர் கொண்டு வருகிறவன் யார்? என்கிறான். ஆதலால் நாம் யாவரும் கிறிஸ்துவுக்காக ஆத்தும ஆதாயம் செய்யும்படியாக பெலத்தின் மேல் பெலன் அடைகிறவர்களாக இருக்க வேண்டும். இப்படியாக நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.