தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 31:24 

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கென்று திட சாட்சியாக இருக்க வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் ஆத்தும தாகம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11சாமுவேல் 23:16-23 

அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:

கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.

யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்.

இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.

பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

அவன் பயங்கர ரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.

இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.

முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் தாவீது தனக்கு தாகத்துக்கு தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்று கேட்டதற்கு அந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திற்கு துணிந்து  புகுந்து போய், பெத்லகேமின் ஒலிமுக வாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டு வந்த போது, அதனை தாவீது குடிக்க மனதில்லாமல் கர்த்தருக்கென்று ஊற்றிப் போட்டு; கர்த்தாவே தங்கள் பிராணனையும் எண்ணாமல் போய் வந்த அந்த மனுஷரின் இரத்தத்தத்தை குடிக்கும் இந்த செயல் எனக்கு தூரமாயிருப்பதாக, என்று சொல்லி குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரம சாலிகளும் செய்தார்கள்.  அந்த மூன்று பேரில் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனாகிய அபிசாய் பிரதானமானவன்.  அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால்; மூன்று பேரில் பேர்பெற்றவனானான்.  இந்த மூன்று பேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ அவர்களில் தலைவனாகிறான்.  ஆனாலும் அந்த மூன்று பேருக்கு அவன் சமானமானவனல்ல.  அடுத்த பராக்கிரமசாலி யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கையில் வல்லவனாயிருந்தான் அவன் மோவாப் தேசத்தில் இரண்டு வலுமையான சிங்கங்களை கொன்றதுமல்லாமல், உறைந்த  மழை காலத்தில் இறங்கி போய் ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தை கொன்றுப் போட்டான்.  அவன் பயங்கரமான ரூபமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுப்போட்டான்.  அந்த எகிப்தியன் கையில் ஒரு  ஈட்டி இருக்குகையில், இவன் ஒரு தடியைபிடித்து; அவனிடத்தில் போய் அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியை பறித்து பிடித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் குத்திப்போட்டான்.இவைகளை பெனாயா செய்தபடியினால்  மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனானான்.  முப்பது பேரிலும் மேன்மையுள்ளவன்.  ஆனாலும் அந்த மூன்று பேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன் மெய்காவலருக்கு தலைவனாக வைத்தான்.  யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பது பேரில் ஒருவன். அவர்கள்  யாரெனில் 

11சாமுவேல் 23:24-39 

யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,

ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,

பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.

ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,

அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,

பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,

பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,

அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,

சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.

ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,

மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.

கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,

சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,

 அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,

இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,

ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட பகுதிகளில் வாசிக்கிற பராக்கிரமசாலிகள் என்றால் தேவபெலன் தரித்தவர்கள்.  அவர்களை மணவாட்டி சபைக்கு திருஷ்டாந்தபடுத்தி; இப்பொழுது அவரே பராக்கிரம சாலியாக நம் நடுவில் நின்று யுத்தம் செய்து, அவருடைய ராஜ்யத்தின் மகத்துவத்தை  விளங்க செய்து, ஆத்தும ஆதாயம் செய்கிறவராக காணப்படுகிறார்.  மேலும் ஆத்தும ஆதாயம் செய்கிறவராகிய கிறிஸ்து நம்மில் இருந்து பெலிஸ்திய பாளயங்களில் (உலக சபைகள்) மக்கள் உள்ளங்களில் புகுந்து பெலிஸ்தியர் நடுவிலிருந்து ஜனங்களை விடுவித்து இரட்சித்து எடுக்கிறதை திருஷ்டாந்தபடுத்தி காட்டுகிறது மட்டுமல்லாமல்; அவ்விதம் தங்களை அவருக்கென்று தங்கள் பிராணனையும் பார்க்காமல் கர்த்தருக்காய் உண்மையாய் வாழ்கிறவர்கள் மேல் அவர் மிகவும் கருத்துள்ளவராகயிருந்து அவர்களுக்கு ஆபத்து வராமல் பாதுகாக்கிறார்.  மேலும் தேவபெலன் பெற்றவர்கள்; கர்த்தருக்காக ஆதாயப்படுத்தின ஆத்துமாக்களை அவர்களிலிருக்கிற துர்கிரியைகளாகிய துர்உபதேச வாழ்க்கையினின்று விடுவித்து இரட்சிப்பின் பாதையில் நடத்துகிறார்கள்; இதனை தான் இரண்டு வலுமையான சிங்கங்களை கொன்றது என்று திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அல்லாமலும் துர் உபதேசம் எங்கிருந்து புறபடுகிறதோ, அந்த சபையையும் கர்த்தர் நியாயந்தீர்க்கிறார்.  அல்லாமலும் தேவ பெலன் தரித்தவர்கள் ஆதாயப்படுத்துகிற ஆத்துமாக்களில் எழும்புகிற பாரம்பரியத்தை,  சத்திய வசனங்களால் நிர்மூலம்பண்ணுகிறார் என்பதனையும் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இவ்விதமாக நாம் திட சாட்சியாக கர்த்தருக்கென்று நம்மை புதுப்பித்து பெலப்படுத்தி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை