தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மீகா 22:12-13
யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக.ஆமென்.
அல்லேலூயா.
தேசத்துக்காக சபை திறப்பில் நிற்கவேண்டும் திருஷ்டாந்தம்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கர்த்தர் யோசேப்போடே கூட இருந்து எகிப்தில் செய்த கிரியைகளை நாம் தியானித்துக் கொண்டு இருக்கிறோம்.இவையெல்லாம் நம் வாழ்வில் இயேசு கிறிஸ்து மூலம் தேவன் செய்யும் கிரியைகளை நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். என்னவென்றால் பார்வோனுடைய அரண்மனைக்குள்ளாக யோசேப்பை எழுப்புகிறார்.இந்த யோசேப்பு மூலம் தான் எகிப்தை தேவன் ஆசீர்வதிக்கிறார். மேலும் எகிப்திலும் பஞ்சம் உண்டாகிறது.மற்றும் உலகமெங்கும் எல்லா தேசங்களிலும் பஞ்சம் உண்டாகிறது.தேவன் யோசேப்பை வைத்து பார்வோனிடத்தில் சொன்ன அத்தனை காரியங்களை நிறைவேற்றுகிறதை நாம் பார்க்கிறோம்.
மேலும்,எகிப்து தேசமெங்கும் ஆகாரம் உண்டாயிருந்தது காரணம் என்னவென்றால் இஸ்ரவேலின் சந்ததியை அந்த தேசத்தில் சில முகாந்தரங்களை ஒருக்கி தேவன் அங்கு கொண்டு செல்கிறார் என்பதை பார்க்கிறோம். மேலும் யாக்கோபுடைய மேன்மையை தேவன் வெறுக்கிறார். யாக்கோபு உலக மேன்மைக்காக தான் நேசித்த குமாரனாகிய யோசேப்புக்கு பலவருண அங்கியை தரிக்கிறான்.அதனாலும் அவன் சகோதரர்கள் அவனை வெறுக்கிறார்கள். யாக்கோபுடைய உலக மேன்மையை அழிக்கும் படியாகவே தேவன் யோசேப்பை சகோதரர் கையில் ஒப்புக் கொடுக்கிறார். அவனை துன்மார்க்கர்களாகிய சகோதரர் கையில் ஒப்புக்கொடுத்த காரணம் யாக்கோபு சீர்திருந்த வேண்டும்.சபை எவ்விதத்தில் சீர்திருந்த வேண்டும் என்பதை யோசேப்பை வைத்து தேவன் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். ஆட்டுகுட்டியினுடைய இரத்தத்தால் தோய்க்கப்பட்ட வஸ்திரம் வெண்மையாயிருக்கும் என்பதை தேவன் தெளிவுபடுத்துகிறார்.
அதனை தேவன் எவ்விதத்தில் சபைக்கு வெளிப்படுத்துகிறார் என்றால்,
வெளிப்படுத்தின விசேஷம் 7:13-17
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்
தேவனை சேவிக்கிறவர்கள் யாராக இருந்தாலும் உலகமாகிய உபத்திரவத்திலியிருந்து மீண்டு எடுத்தவர்கள் என்பதையும், உபத்திரவத்தின் பாதையில் கூட நமக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயித்தார் என்பதையும் அதற்கு முன்பாக இவ்விதமாக உபத்திரவத்திலியிருந்து நாம் மீட்கப்பட வேண்டும் என்பதை பழைய ஏற்பாட்டின் பகுதியில் யாக்கோபின் சந்ததி இஸ்ரவேல் கோத்திரத்தில் உள்ள யோசேப்பை தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரியமானவர்களே நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக நமக்கு அடிஸ்தானம் வித்திட்டது தான் பழைய ஏற்பாடு.நாம் அதை கதையாகவோ, சரித்திரமாகவோ நினைக்காதபடி நமக்குள் கிறிஸ்து வாசம் பண்ணுவதற்கு திருஷ்டாந்தபடுத்துவது தான் பழைய ஏற்பாட்டின் புஸ்தகம்.
மேலும்,நாம் எகிப்தின் அடிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே தேவன் அவருடைய ஆகாரமாக தேவ வசனத்தால் நம்மை போஷித்தார் என்பதும்,நம் வாழ்க்கையில் உலகமாகிய உபத்திரவத்தில் நாம் சிக்குண்டு ,உலக கவலைகளிலும்,சிற்றின்ப மயக்கத்திலும் நாம் விழுந்து விடும் போது நமக்கு ஆகார குறைவாகிய தேவ வசனம் நம் உள்ளில் இல்லாத ஒரு பஞ்சம் நேரிடுவதாகவும் ,எகிப்தில் இருக்கும் போதே நம் உள்ளத்தில் சேகரித்த தேவ வசனமாகிய ஆகாரம் நாம் அனைத்தும் இழந்து வெறுமையாக நம் ஆத்மா தொய்ந்து இருக்கும் போது தேவன் அவருடைய வசனத்தால் நம்மை தேற்றுகிறவராகவும் தான் யோசேப்பை வைத்து தேவன் திருஷ்டாந்தப்படுத்தி,மேலும் கானானுக்குள் கடும் பஞ்சம் நேரிடுவதையும் யாக்கோபின் சந்ததியாகிய பத்து கோத்திர பிதாக்களையும் யாக்கோபு தானியத்துக்காக எகிப்திற்கு அனுப்பிவிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.ஆனால் பென்யமீனைஅனுப்பவில்லை.
தானியம் வாங்க போகும்போது தங்கள் சகோதரனாகிய யோசேப்பு அங்கு பெரியவனாகயிருந்து பஞ்சத்தால் வாடுகிற மக்களுக்கு தானியம் விற்க்கிறான் என்று தெரியாதபடி தான் போகிறார்கள்.ஆனால் அவர்கள் தானியம் வாங்கப் போகும் போது தங்கள் கைகளில் காணிக்கை கொண்டு போகிறார்கள். ஆனால் யோசேப்புக்கு தன் சகோதரர்கள் அறிய வருகிறது. மேலும் அவர்கள் தாங்கள் யோசேப்புக்கு செய்த துரோகத்தினால் தேவன் இவ்விதமாக தண்டிக்கிறார்.
ஆனால்,மூன்று நாள் எல்லோரையும் காவலில் வைக்க வேண்டுமென்றும், அவர்கள் வேவு பார்க்க வந்தவர்கள் என்றும் உண்மை வெளிப்படும் மட்டும் காவலில் வைக்க கட்டளையிடுகிறான்.
ஆனால்,யோசேப்பின் சகோதரர்கள் சொல்கிறார்கள்.
ஆதியாகமம் 42:13
அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள்.
ஆதியாகமம் 42:14
யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி.
ஆதியாகமம் 42:15-16
உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மையுண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
அவர்கள் எல்லோரையும் மூன்று நாள் காவலில் வைத்தான்.
பின்பு யோசேப்பு சொல்கிறான் நீங்கள் நிஜஸ்தரானால் சகோதரரில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்,, மற்றவர்கள் புறப்பட்டு பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,இளைய சகோதரனை அழைத்துக் கொண்டு வாருங்கள் அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்.நீங்கள் சாவதில்லை என்றான்.அவர்கள் அப்படியே செய்கிறதற்கு இசைந்து,
நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம் மேல் சுமந்தது.அவன் கெஞ்சி வேண்டிக் கொண்ட போது அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும் அவனுக்கு செவிகொடாமற் போனேமே;ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அப்பொழுது ரூபன் அவர்களை பார்த்து இளைஞனுக்கு விரோதமாக பாவம் செய்யாதிருங்கள் என்று நான் சொன்னேன்.நீங்கள் கேட்கவில்லை இப்பொழுது அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்.
ஆதியாகமம் 42:23
யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.
பின்பு யோசேப்பு அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது அவர்களிடத்தில் வந்து அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனை பிடித்து,அவர்கள் கண்களுக்கு முன்பாக கட்டுவித்தான்.
ஆதியாகமம் 42:25-26
பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.
இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் நாம் இயேசுவின் இரத்தத்தால் மீண்டெடுக்கப்பட்ட தேவனுடைய சபையாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.நம்முடைய வஸ்திரம் முழுமையாக இரத்தத்தால் தோய்க்கப்பட்ட வெண்மை வஸ்திரமாக இருந்து சிங்காசனத்தில் இருக்கிறவரை சேவிக்க வேண்டும். மேலும் நம்மை தேவன் முதலில் அழைத்தாரானால் நம் முழு குடும்பமும் இரட்சிக்கப்படுவதற்கு யோசேப்பை போல நாம் காரணமாகயிருக்கவேண்டும். அவன் தன் முழு குடும்பமும் வந்து சேரும்வரை எவ்விதத்தில் செயல்படுகிறான்.நம்முடைய தேவன் நம்மையும் இவ்விதமாக சந்திக்கிறவராயிருக்கிறார்.
நம்முடைய முழு தேசமும் நம்முடைய இரத்தத்திற்கு இரத்தமாகவும்,நம்முடைய மாம்சத்திற்கு மாம்சமானவர்கள் அதனால் முழு ராஜ்யமும் தேவனை அறிந்த அவர் பாதத்தில் வந்து சேர தேவன் நம் ஒவ்வொருவரையும் முன் குறித்திருக்கிறார். அதனால் நம் சுயம் எல்லாம் மாற்றிவிட்டு இந்த பஞ்ச நாட்களில் நம் குடும்பமாகிய அகில உலக மக்களுக்கும் நாம் சேர்த்த தானியத்தை மற்ற யாவருக்கும் பகிர்ந்து கொடுப்போமானால் தேவன் தேசமனைத்தையும் சந்திப்பார். சத்தியத்தின் பாதையில் ஜனங்களை வழிநடத்த அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை.