தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் கர்த்தருக்கு கோபம் உண்டாக்காதபடி ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கென்று திட சாட்சியாக இருக்கவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11சாமுவேல் 24:1-2
கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.
அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேல் மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாக சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான். அப்படியே, ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபை பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும் படிக்கு தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேல் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களை தொகையிடுங்கள் என்றான். அப்பொழுது யோவாப்
11சாமுவேல் 24:3
அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை யோவாப் கூறினாலும் ராஜாவின் வார்த்தை பலத்தது. அப்படியே யோவாபும், இராணுவ தலைவரும் இஸ்ரவேலரை தொகையிட புறப்பட்டு போனார்கள். அப்படியாக
11சாமுவேல் 24:5-8
யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,
அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,
பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,
இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.
மேற்கூறப்பட்ட இடங்களை சுற்றி திரிந்து வந்த பின்பு ஒன்பது மாதமும் இருபது நாளும் ஆன பிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.
பிரியமானவர்களே, நாம் தியனிக்கும் போது தாவீதின் உள்ளம் இஸ்ரவேல் யூதாவை இலக்கம் பார் என்று ஏவப்பட காரணம் இஸ்ரவேல் யூதா என்பவர்களிடத்தில் கர்த்தருக்கு கோபம் மூண்டது. ஆதலால் தேவ ஆராதனைக்கு அவர்களால் அவர்கள் திரும்பி வருவது வரையிலும் பங்குகொள்ள முடிவில்லை . ஆதலால் அந்நாட்கள் வரையிலும் அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கை நஷ்டமடைகிறது. அது போல் கர்த்தர் கோபம் நம்மேல் வராமல் நாம் ஜாக்கிரதையாக காணப்படுவோம். ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.