தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 48:9

என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் கர்த்தரின் பலிபீடமாக எழும்ப வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் கர்த்தருக்கு கோபம் உண்டாக்காதபடி ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11சாமுவேல் 24:9-19 

யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும், நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.

அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.

ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.

அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

 காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.

மேற்க்கூறிய வசனங்களில் யோவாப் இஸ்ரவேல் யூதா ஜனங்களை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்.  தொகையை இலக்கம் பார்த்ததில் இஸ்ரவேலிலே பட்டயம் உருவ தக்க யுத்த சேவகர் எட்டு லட்சம் பேர் இருந்தார்கள். யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.  இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது.  அப்போது தாவீது கர்த்தரை நோக்கி; நான் இப்படி செய்தபடியால் பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கி விடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.  தாவீது அதிகாலமே எழுந்திருந்த போது, தாவீதின் ஞானதிருஷ்டிகாரனாகிய காத் திடத்தில் கர்த்தருடைய வார்த்தையாவது 

11சாமுவேல் 24:12-13 

நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.

மேற்கூறப்பட்ட காரியங்களை கர்த்தர் காத் திடத்தில் சொன்னதை, காத் தாவீதிடத்தில் சொல்லிவிட்டு, இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டு போக வேண்டும் என்பதை நீர் யோசித்து பாரும் என்று சொன்னதால் தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்.  இப்போதும் நாம் கர்த்தரின் கையில் விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையில் விழாதிருப்பேனாக என்றான்.  அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்த காலம் வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம் பேர் செத்துப்போனார்கள்.  தேவ தூதன் எருசலேமை அழிக்க தன் கையை  அதின் மேல் நீட்டின போது கர்த்தர் அதின் மேல் மனஸ்தாபப்பட்டு; சங்கரிக்கிற தூதனை நோக்கி போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்.அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான். ஜனங்களை உபாதிக்கிற தூதனை தாவீது கண்ட போது, அவன் கர்த்தரை நோக்கி நான் பாவஞ்செய்தேன்; நான் தான் அக்கிரமம் பண்ணினேன்: இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாகயிருப்பதாக என்று விண்ண்ப்பம் பண்ணினான்.  அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றான்.  காத்துடைய வார்த்தையின்படிய கர்த்தர் கற்பித்தப்பிரகாரம் போனான்.  

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டிருக்கிற வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் தாவீது ஜனங்களை எண்ணினது தேவனுடைய பார்வைக்கு பொல்லாப்பாயிருந்தது.  ஆனால் அவ்விதம் எண்ணும்படியாக தாவீதின் உள்ளம் ஏவப்பட்டது கர்த்தருடைய திட்டமாயிருந்தது.  காரணம் என்னவென்றால் கர்த்தர் ஜனங்களோடு கோபமாயிருந்தார்; அது மட்டுமல்லாமல் எபூசியனாகிய  அர்வனாவின் களத்தில் அவர் பலிபீடம் கட்டும் திட்டமாகயிருந்தார் என்று தெரிகிறது.  இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் புறஜாதிகள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைப்பார்கள் என்பதாய் ஏசாயாவில் எழுதப்பட்டுள்ளது.  அதனைக் குறித்து 

ரோமர் 15:9-12  

 புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.

மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.

மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.

மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.

மேற்க்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளை தியானிக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, புறஜாதிகளாகிய நம்முடைய உள்ளத்திலிருந்து எழும்புகிறார் என்பது குறிப்பிடதக்கது.  அல்லாமலும் 

அப்போஸ்தலர் 15:14-20 

தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.

அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.

எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,

நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.

ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,

விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.

ஆதலால் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் களத்திற்கு நேராக தன் கையை நீட்டும் போது கர்த்தர் மனஸ்தாபப்பட்டு போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்.  அப்போது கர்த்தருடைய தூதன் அந்த களத்திற்கு நேரே நிற்கிறான்;  தாவீது தான் பாவமன்னிப்பு எடுக்கிறான், கர்த்தர் பலிபீடம் கட்டும்படி சொல்கிறார். இவை புறஜாதிகளாகிய  நம் உள்ளத்தில் பலிபீடம் கட்டும் போது தேவ கோபம் நம்மை விட்டு மாறும்; அந்த பலிபீடம் தான் கிறிஸ்து. இவ்விதமாக கர்த்தருக்காய் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.