தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1கொரிந்தியர் 6:20
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன் விலைக்கிரயமாக்குகிறார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் கர்த்தரின் பலிபீடமாக எழும்ப வேண்டும் என்பதனை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11சாமுவேல் 24:20-25
அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி,
ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.
அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,
அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்த பின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.
ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்.
அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.
மேற்கூறப்பட்டிருக்கிற கர்த்தருடைய வார்த்தையின் படியே தாவீது எபூசியனாகிய அர்வானாவின் களத்திற்கு போனான். அர்வானா ஏறிட்டு பார்க்கும் போது: ராஜாவும், அவன் ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதை கண்டு, அர்வானா எதிர்க்கொண்டு போய் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, ராஜாவாகிய ஆண்டவன் தன்னிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு தாவீது: வாதை ஜனத்தை விட்டு நிறுத்தப்பட கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டும்படி இந்த களத்தை உன் கையிலே கொள்ள வந்தேன் என்றான். அர்வானா தாவீதிடம், ராஜவாகிய ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு உம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக என்றான். பின்பு அவன் இதோ தகனபலிக்கு மாடுகளும்,விறகுக்கு போரடிக்கிற உருளைகளும், மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி, அர்வானா ராஜா யோக்கியமாய் அதை எல்லாவற்றையும் ராஜாவுக்கு கொடுத்த பின்பு, அர்வானா ராஜாவிடம் உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான். அதற்கு ராஜா அப்படியல்ல, நான் இலவசமாய் வாங்கி என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகன பலி செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று தாவீது சொல்லி அந்த களத்தையும், மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்கு கொண்டான். அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். அப்போது கர்த்தர் தேசத்துக்காக செய்யப்பட்ட வேண்டுதலை கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை தியானிக்கும் போது, புறஜாதிகள் மேல் கர்த்தர் மிகுந்த நோக்கம் உள்ளவராக காணப்படுகிறார். நாமெல்லாரும் புறஜாதிகளாயிருந்த நம்மை அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்டுக்கொண்டார். அப்படியாக புறஜாதிகளின் உள்ளம் கிறிஸ்துவின் சொந்த நிலமாக்குகிறார் என்பதனை கர்த்தர் தாவீதைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தி, அவர் இலவசமாக அல்ல விலைக்கிரயமாக ஒவ்வொருவரையும் அவருடைய இரத்தத்தால் சொந்தமாக்குகிறார். இதன் திருஷ்டாந்தத்திற்கே கர்த்தர் தாவீது வைத்து நமக்கு தெளிவுப்படுத்துகிறார். அதன் பின்பு தான் தேசத்திற்காக செய்யப்பட்ட வேண்டுதலை கர்த்தர் கேட்டருளி இஸ்ரவேலருக்குள்ளே இருந்த வாதை நிறுத்தப்படுகிறது. இப்படியாக நாம் நம்மை கர்த்தருக்காய் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.