தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 1:14 

இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் விர்த்தாப்பியராகும் போதும் அனுதினம் புது அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன் விலைக்கிரயமாக்குகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

1இராஜாக்கள் 1:1-4 

தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.

அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ராஜசமுகத்தில் நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவோம் என்று சொல்லி,

இஸ்ரவேலின் எல்லையிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.

அந்தப் பெண் வெகு அழகாயிருந்தாள்; அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடைசெய்தாள்; ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை.

மேற்கூறிய வசனங்களில் தாவீது ராஜா வயது சென்ற விர்தாப்பியனான போது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.  அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ராஜ சமுகத்தில் நின்று, அவருக்கு பணிவிடை செய்யவும், ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு பெண்ணை ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு தேடுவோம் என்று சொல்லி இஸ்ரவேலின் எல்லையிலெங்கும் அழகான ஒரு பெண்ணை தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாகை கண்டு ராஜாவினிடத்தில் கொண்டு வந்தார்கள்.  அந்த பெண் வெகு அழகாயிருந்தாள்.அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்தாள்.  அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்கு பணிவிடை செய்தாள்; ஆனலும் ராஜா அவளை அறியவில்லை.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிக்கும்போது கர்த்தர் திருஷ்டாந்தபடுத்திருப்பது,  ராஜரீக அபிஷேகம் பெற்றவர்கள் விருத்தாப்பியராகும் போது, அபிஷேகம் தணிந்து போகும் என்பதனையும், நாம் பெற்றிருந்த அபிஷேகம் அனலாக தொடர்ந்து இருக்காது என்பதால், புது அபிஷேகம் பெற்று  அனல் மூட்டினால், நம் வாழ்வில் ஆத்துமா மரணமடையாமல் காக்கமுடியும் என்பதனையும், பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஊழியஞ் செய்கிறவராயிருப்பார் என்பதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  பிரியமானவர்களே ஆதலால் ஒவ்வொருவரும் பெற்ற அபிஷேகம் அனுதினம் புதுபிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.