தேவனுக்கே மகிமையுண்டாவதாக

Iகொரிந்தியர் 10:21

நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கர்த்தரின் பரிசுத்த பந்தியில் மட்டும் புசிக்க வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டிசபையாகிய நாம் விர்த்தாப்பியர் ஆகும் போதும், அனுதினம் புது அபிஷேகம் பெற்றுக்கொள்கிறவர்களாகவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது

 1இராஜாக்கள் 1:5-7 

ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.

அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.

அவன் செருயாவின் குமாரனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனைபண்ணிவந்தான்; அவர்கள் அவனிடத்திலிருந்து அவனுக்கு உதவிசெய்துவந்தார்கள்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில்  ஆகித்திற்கு பிறந்த அதோனியா நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னை தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும், குதிரை வீரரையும் தனக்கு முன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பதித்தான்.  அவனுடைய தகப்பன்: நீ இப்படி செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துக் கொள்ளவில்லை.; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்கு பின்பு அவனுடைய தாய் அவனைப்பெற்றாள்.  செருயாவின் குமாரனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனைப் பண்ணி வந்தான்; அவர்கள் அவனிடத்திலிருந்து அவனுக்கு  உதவி செய்து வந்தார்கள்.  மேலும்

 1இராஜாக்கள் 1:8 

ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.

மேற்கூறப்பட்டவர்கள் அதோனியாவுக்கு உடந்தையாக இருக்கவில்லை.  அதோனியா இன்ரோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும், கொழுத்த ஜந்துக்களையும்  அடித்து ராஜாவின் குமாரராகிய தன் சகோதரரெல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.  தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பராக்கிரமசாலிகளையும், தன் சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை. 

பிரியமானவர்களே, நாம் விர்த்தாப்பியரானால் பெற்றுக்கொள்கிற அபிஷேகம், பரிசுத்தமும், உண்மையும், நேர்மையுமாய்  இரட்டிப்பான வரம் உள்ளதாக காணப்பட வேண்டும்.  ஏனென்றால் அதோனியா நான் ராஜா ஆவேன் என்று சொல்லி தன்னைத்தான் உயர்த்திக்கொள்கிறான் என்றால் நம்மில் வருகிற பலவீனத்தை கர்த்தர் திருஷ்டந்தப்படுத்துகிறார். ஆதலால் தன்னை தான் உயர்த்துகிறவன் எதிராளியாகிய பிசாசானவன்; அப்படிப்பட்ட எண்ணங்கள் எழும்பாதபடி நம்மை எப்போதும் தாழ்த்துகிறவர்களாக இருக்க வேண்டும்.  இந்த காரியத்தில் நாம் மிகவும் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல நம்முடைய ஆத்துமா சீக்கிரத்தில் தள்ளாடிபோகாதபடி கிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.  இல்லையென்றால் நாம் சீக்கிரத்தில் விழுந்து போவோம், நம்மை தாங்குவார் யாரும் இருக்காது.  நம்முடைய உள்ளம் சீக்கிரத்தில் வஞ்சிக்கபடும். நாம் விசுவாசத்தில் பலவீனமடைந்து விடுவோம்.  கிறிஸ்துவுக்கு மாறான  பிசாசின் பந்தியில் புசிப்போம்.   ஆதலால் நாம் எப்போதும் நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் கறைதிரை இல்லாதபடி ஜாக்கிரதையோடு காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.