தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 29:18

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்குள் தீர்க்கதரிசனம் வெளிப்பட்டால்  அவருடைய ஆலோசனையில் நம்முடைய ஆத்துமா காக்கப்படும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கர்த்தரின் பரிசுத்த பந்தியில் மட்டும் புசிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 1:11-18 

அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா?

இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.

நீ தாவீது ராஜாவினிடத்தில் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள்.

நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.

அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயதுசென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான்.

அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.

இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை.

மேற்கூறிய வசனங்களில் அதோனியா ராஜா ஆவேன் என்று சொன்னதை கேள்விபட்ட நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்கு தெரியாமல் ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா? இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும் படிக்கு, நீ வா, உனக்கு  நான் ஆலோசனை சொல்லுவேன்.  நீ தாவீது ராஜாவிடத்தில் போய்; ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்கு பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தில் வீற்றிருப்பான் என்று நீர் உமதுஅடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள், என்று சொல்லி  நானும் உனக்கு பின் வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.  அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவினிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்கு பணிவிடை செய்துக்கொண்டிருந்தாள்.  பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள் என் ஆண்டவனே, என் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரை கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே என்று சொல்லி, ஆனால் இதோ அதோனியா ராஜாவாகிறான், என் ஆண்டவனாகிய நீர் அதை அறியவில்லை என்றும், அவன்

 1இராஜாக்கள் 1:19-21 

அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.

ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவன் இன்னான் என்று தங்களுக்கு அறிவிக்கவேண்டும் என்று இஸ்ரவேலர் அனைவரின் கண்களும் உம்மை நோக்கிக் கொண்டிருக்கிறது.

அறிவியாமற்போனால் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய பிதாக்களோடே படுத்துக்கொண்டபின்பு, நானும் என் குமாரனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றாள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை பத்சேபாள் ராஜாவினிடத்தில் பேசிக்கொண்டிருக்கையில் நாத்தான் தீர்க்கதரிசி அங்கு வருகிறான். 

பிரியமானவர்களே கர்த்தர் தெரிந்துக்கொண்டவன் யாரென்றால் பத்சேபாள் தாவீதுக்கு பெற்ற சாலொமோன்.  அந்த சலொமோன் தான் தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பான் என்று கர்த்தர் ஆணையிட்டிருந்தும், அதோனியா நான் ராஜாவாவேன் என்று சொல்லி விருந்துக்கொடுக்கிறதை பார்க்கிறோம்.  ஆதலால் ராஜாவிடம் ஆணையுறுதியை பெலப்படுத்தும் படியாக பத்சேபாள் தாவீதினிடத்தில் சென்று காரியங்களை கூறும் போது தீர்க்கதரிசியாகிய நாத்தான் அங்கு வெளிப்படுகிறான்.  இவை என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் வருவார் என்பதற்காகவும், நமக்குள் கிறிஸ்து தீர்க்கதரிசியாக செயல்பட்டு அந்நிய கிரியைகள் செயல்படாதபடியாக அவர் ஆலோசனைக்காரராக இருந்து நம்மை காக்கிறவர். இதன் விளக்கங்களை வரும் நாட்களில் கர்த்தருக்கு சித்தமானால் தியானிப்போம். இவ்விதமாக நம்மில் தீர்க்கதரிசியாக கிறிஸ்து வெளிப்பட்டு அந்நிய ஆவிகளிலிருந்து தப்புவித்துக்கொள்ளும்படியாக  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.