தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எரேமியா 51:45
என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் தன் தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளுதல்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மில் தீர்க்கதரிசனம் வெளிப்பட்டால், கர்த்தரின் ஆலோசனயால் நம் ஆத்துமா காக்கப்படும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 1:22-24
அவள் ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான்.
தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.
நாத்தான்: ராஜாவாகிய என் ஆண்டவனே, அதோனியா எனக்குப்பின் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் சொன்னதுண்டோ?
மேற்க்கூறப்பட்டிருக்கிற கர்த்தரின் வார்த்தையில் பத்சேபாள் ராஜஸ்தானத்தை குறித்து ராஜாவிடம் பேசிக்கொண்டிருக்கையில், தீர்க்கதரிசியாகிய நாத்தான் அங்கு வந்திருக்கிறார் என்று ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான். நத்தான்; ராஜாவாகிய என் ஆண்டவனே அதோனியா ராஜாவாகி என் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பான் என்று நீர் சொன்னதுண்டோ? என்று கேட்டு பின்பு அவன் அதோனியா கொடுத்த விருந்தைக்குறித்து ராஜாவிடம் சொல்கிறது
1இராஜாக்கள் 1:25-27
அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.
ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாத்தான் தாவீது ராஜாவிடம் சொல்ல; தாவீது ராஜா பிரதியுத்தரமாக பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அப்போது அவள் ராஜ சமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்பாக நின்றாள். அப்போழுது ராஜா அவளிடம் சொன்னது; உன் குமாரனாகிய சாலொமோன் எனக்கு பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்கு செய்து தீர்ப்பேன் என்பதை என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
பிரியமானவர்களே தாவீதின் சிங்காசனத்தில் சாலொமோனை ராஜாவாக்குகிறார் என்றால், அவன் பத்சேபாள் தாவீதுக்கு பெற்ற குமாரனாயிருக்கிறான். அது திருஷ்டாந்ததோடு கர்த்தர் விளக்குகிறார் என்பதால், அது நம் ஆத்துமா புஜாதிகளினின்று விடுதலையாகி, கிறிஸ்துவோடு ஒப்புரவாகுதலும், அவரோடேக்கூட உன்னதங்களில் உட்காரவும் செய்கிறார்; இதனைக் குறித்து
எபேசியர் 2:4-8
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் நாம் தியானிக்கும் போது பத்சேபாளுடைய ஆத்தும இரட்சிப்பை குறிக்கிறது. ஆதலால் நாம் யாவரும் நம்முடைய ஆத்துமாவை குறித்த பாரம் உடையவர்களாக இருந்து, அவரவர் தன் தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.