தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 47:6,7 

தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவினால், நம்மை இரட்சித்த கர்த்தரை எப்போதும் போற்றி புகழ்ந்து  பாடி மகிமைபடுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் தன் தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளுதல் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 இராஜாக்கள் 1:31-36  

அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீதுராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.

பின்பு தாவீதுராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்.

அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள்.

அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.

அதின் பின்பு அவன் நகர்வலம் வந்து, என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.

அப்பொழுது யோய்தாவின் குமாரன் பெனாயா ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் தாவீது ராஜா தன்னுடைய ஸ்தானமாகிய சிங்காசனம் சாலொமோனுக்கு என்று சொல்லி தீர்த்த பின்பு, பத்சேபாள் தரை மட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்று வாழ்த்துகிறதை பார்க்க முடிகிறது.  அவ்விதமான வாழ்த்துதல் என்பது, நம் ஆத்துமா கிறிஸ்துவின் சுதந்தர வீதத்தில் பங்கடைந்தால், அவர் நம்முடைய  ஆண்டவர் என்பதும், அவரை நாம் எப்போதும் போற்றி புகழ்கிறவர்களாகவும், வாழ்த்தி வணங்குகிறவர்களாகவும், துதித்து மகிமைப்படுத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதன் திருஷ்டாந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  

பின்னும் நாம் தியானிக்கும் போது தாவீது ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும, யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்று சொன்னபோது, அவர்கள் ராஜாவினிடத்தில் பிரவேசித்தார்கள்.  அப்போது ராஜா அவர்களை நோக்கி; நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரை கூட்டிக்கொண்டு என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறு கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, அவனை கீகோனுக்கு அழைத்து போங்கள் என்றான்.  பின்பு ராஜா சொன்னது அங்கே ஆசாரியனாகிய சாதோக்கு, தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ண கடவர்கள்; பின்பு எக்காளம் ஊதி ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள் என்றான்.  இதனை நாம் கருத்தில் கொண்டு, கிறிஸ்து ஆசாரியராகவும், தீர்க்கதரிசியாகவும் நம்மில்  பிரவேசிக்கும் போது, நம் ஆத்துமாவுக்கு சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் தந்து,  அது இரட்சிப்பினால் களிகூரும்படி செய்கிறார் என்பதனயும், அப்போது நமக்குள் கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட்டு அவர் சிங்காசனத்தில் உட்காருகிறார் என்பதனையும் நமக்கு கர்த்தர் தெளிவுப்படுத்துகிறார் என்பதனை நாம் புரிந்துக்கொண்டு, கிறிஸ்துவை வாழ்த்த வேண்டும் என்பதன் திருஷ்டாந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  அப்படியாக கிறிஸ்து சிங்காசனத்தில் வீற்றிருந்து கர்த்தரின் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பார் என்பதும், இவ்விதமாக இஸ்ரவேலின் மேலும், யூதாவின் மேலும் தலைவனாயிருக்கிறார்.  

அப்படியே யோய்தாவின் குமாரனாகிய பெனாயா ராஜாவுக்கு பிரதியுத்தரமாக; ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே செய்வாராக என்கிறான். இதன் கருத்து பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரான் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் யோவான் 6:44 -ல் கூறுகிறார்.  மேலும் நாம் கர்த்தரை எப்போதும் போற்றி பாடி புகழ்கிறவர்களாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.