தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 148:14
அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தமான கிறிஸ்துவின் அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய ஆத்துமாவை இரட்சித்த கர்த்தரை ஆத்துமாவில் போற்றி புகழ்ந்து பாடி மகிமைப்படுத்தும்படியாக தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 1:37-46
கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டவனோடே எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான்.
அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் குமாரன் பெனாயாவும், கிரேத்தியரும் பிலேத்தியரும் போய், சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டுபோனார்கள்.
ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.
பிற்பாடு ஜனங்களெல்லாரும் அவன் பிறகாலே போனார்கள்; ஜனங்கள் நாகசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரத்தக்கதாக மகா பூரிப்பாய்ச் சந்தோஷித்தார்கள்.
அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் போஜனம்பண்ணி முடிந்தபோது அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காளசத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.
அவன் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
யோனத்தான் அதோனியாவுக்குப் பிரதியுத்தரமாக: ஏது, தாவீதுராஜாவாகிய நம்முடைய ஆண்டவன் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரன் பெனாயாவையும், கிரேத்தியரையும் பிலேத்தியரையும் அவனோடே அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றினார்கள்.
ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்; நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டுப் போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான்.
அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறான்.
மேற்கூறிய வசனங்களின்படி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா தாவீது ராஜா, தன் குமாரனாகிய சாலொமோனை தன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினதற்காக கர்த்தரை மகிமைப்படுத்திக்கொண்டு சொன்னது என்னவென்றால் கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டவனோடே எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சிங்காசனத்தை பார்க்கிலும் சாலொமோனுடய சிங்காசனத்தை பெரிதாக்குவாராக என்றான். அப்படியே
1இராஜாக்கள் 1:38,39
அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் குமாரன் பெனாயாவும், கிரேத்தியரும் பிலேத்தியரும் போய், சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டுபோனார்கள்.
ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டவர்கள் சாலொமோனை தாவீதுடைய கோவேறு கழுதையின் மேல் ஏற்றி, கீகோனுக்கு நடத்திக் கொண்டு போனார்கள். அப்பொழுது ஆசாரியனாகிய சாதோக்கு தைலக் கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டு போய், சாலொமோனை அபிஷேகம் பண்ணினான். அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாம் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்த; ஜனங்களெல்லாம் அவன் பிறகாலே போய், எக்காளங்களை ஊதும் போது, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரதக்கதாக மகா பூரிப்பாய்ச் சந்தோஷித்தார்கள். அதோனியாவும், அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் ஜனங்களும் போஜனம் பண்ணி முடிந்த பின்பு அதனை கேட்டார்கள்; யோவாப் எக்காள சத்தத்தை கேட்ட போது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான். அவன் பேசிக்கொண்டிருக்கையில் ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்போது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்திக் கொண்டு வருகிறவன் என்று சொல்ல; யோனத்தான் சொன்னது, தாவீது ராஜா சாலொமோனை ராஜாவாக்கினாரே. ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயவையும், கிரேத்தியரையும் பிலேத்தியரையும் அவனோடே அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் ஏற்றினார்கள். ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனை கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்; நகரமெல்லாம் முழங்கதக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டு போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான். அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான்.
பிரியமானவர்களே, மேற்க்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகள் திருஷ்டாந்தத்தோடு கூறப்பட்டிருக்கிறது என்னவென்றால், நம்முடைய ஆத்துமாவை கர்த்தர் இரட்சித்து, அந்த ஆத்துமா கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படும் போது, கர்த்தருடைய வசனம் நம்மில் வெளிப்படும். அதுவுமட்டுமல்லாமல் நம் உள்ளம் அதிரதக்கதாக கர்த்தருடைய வல்லமை நம்மேல் வரும். கர்த்தர் மகா ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேக்கூட கொண்டு வருவார். இவ்விதமாக மரித்து கிடந்த நம்முடைய ஆத்துமாவை, கர்த்தர் எழுந்திருக்கப்பண்ணி, மகா பூரிப்பாக்குகிறார். பிரியமானவர்களே கர்த்தர் நம் ஆத்துமாவை அபிஷேகிக்கிறதை கர்த்தர் சாலொமோனை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். நம்முடைய அபிஷேகத்தில் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், சாலொமோனை ராஜா தன்னுடைய கோவேறு கழுதையின் மேல் ஏற்றி சென்று அபிஷேகம் பண்ண சொல்கிறார். இதன் கருத்தை நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்சலோமும் கோவேறு கழுதையில் தான் ஏறுகிறான்; அது அவனை சன்னல் பின்னலான பாதையில் கொண்டு செல்கிறது; அவன் மாட்டிக்கொண்டு அழிந்து போகிறான். கர்த்தர் சொல்கிறது; நீங்கள் கோவேறு கழுதையைப் போல் இருக்க வேண்டாம் என்று சொல்கிறதை வாசிக்க முடிகிறது. ஆதலால் கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், அவர் சாந்தகுணமுள்ளவராய் கழுதையின் மேலும், கழுதைகுட்டியாகிய மறியின் மேலும் ஏறிவருகிறார். ஆதலால் நாம் பெற்றுக்கொள்கிற அபிஷேகம், ஒரு போதும் நாம் விழுந்து போகாதபடி காக்க வேண்டுமானால் கிறிஸ்துவினால் பரிசுத்தமாய் நடந்து, அந்த பரிசுத்தமான கிறிஸ்துவின் அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் விழுந்து போகாதபடி, நம்மை காத்துக்கொள்ளும்படியாக கர்த்தர் சில எடுத்துகாட்டுகளோடு விளக்குகிறார் இவற்றில் நாம் ஜாக்கிரதையோடு இருந்து நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.