தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 19:21

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் தேவனுக்குரிய எண்ணங்கள் வெளிப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தமான கிறிஸ்துவின் அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

1இராஜாக்கள் 1:47-53  

ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.

பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என் சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.

அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லாரும் அதிர்ந்து எழுந்திருந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள்.

அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.

இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.

அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்துகொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான்.

அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன் வீட்டிற்குப் போ என்றான்.

மேற்கூறப்பட வசனங்களில் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின் மேல் விற்றிருந்த பிறகு, ராஜாவின் ஊழியக்காரரும், தாவீது ராஜாவாகிய ஆண்டவனை வாழ்த்துதல் செய்ய வந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை, உம்முடைய நாமத்தை பார்க்கிலும் பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தை பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்.  அப்பொழுது ராஜா தம்முடைய கட்டிலின் மேல் குனிந்து பணிந்து கொண்டார். பின்னும் ராஜா தன் குமாரனை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்க செய்த இஸ்ரவேலின் தேவனாகிய  கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செய்தார் என்று அதோனியாவின் விருந்தாளிகள் எல்லாம் அறிந்தவுடன் அதிர்ச்சியடைந்து அவரவர் தங்கள் வழியே போய் விட்டார்கள்.  அதோனியா சாலொமோனுக்கு பயந்ததினால் எழுந்து போய் பலிபீடத்தின் கொம்புகளை பிடித்துக்கொண்டான்.  அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்கு பயப்படுகிறான் என்றும், இதோ அவன் பலிபீடத்துக்கொம்புகளை பிடித்துக் கொண்டு, ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானை பட்டயத்தாலே கொன்றுப் போடுவதில்லை என்று எனக்குஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.  அப்பொழுதுஅவன் யோக்கியன் என்று விளங்க நடந்துக்கொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப் போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்பு காணப்படுமெங்கில் அவன் சாக வேண்டும் என்றான்.  மேலும் அவனை பலிபீடத்திலிருந்துக் கொண்டு வர ராஜா ஆட்களை அனுப்ப; அவன் வந்து ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்.  சாலொமோன் அவனைப் பார்த்து உன் வீட்டுக்கு போ என்றான். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் நம்முடைய ஆத்துமா பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட பின்பு நம் உள்ளத்தில் நான் தான் என்ற பொல்லாத எண்ணங்களும், சிந்தனைகளும் அதுவரையிலும் ஆளுகை செய்ய நினைத்தாலும், கர்த்தராகிய இயேசுவின் வல்லமை பெரிதாயிருப்பதினால் அப்படிப்பட்ட செயல்கள் நம்மை விட்டு மாறிப்போகும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு விளக்குகிறார். மேலும் நம்மிலும் பல நேரங்களில் நான் பெரியவன், நான் தான் எல்லாம் என்ற நினைப்புகள் உள்ளத்தில் எழும்புகிறது உண்டு.  ஆனால் கிறிஸ்து வெளிப்படும் போது, அந்த பொல்லாத எண்ணங்கள் தலை உயர்த்தமுடியாமல் மடங்கி விழும்; அதுதான் அதோனியாவை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  மேலும் அவ்விதமான பொல்லாத எண்ணங்களை கர்த்தர் நம்மை விட்டு துரத்துகிறார்.  இவ்விதமாக நம் உள்ளத்தில் பொல்லாத எண்ணங்களும், சிந்தனைகளும் எழும்பாதபடி கிறிஸ்துவுக்குரிய எண்ணங்களும், சிந்தைகளுக்குமாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.