தேவனுக்கே மகிமையுண்டாவதாக

உபாகமம் 33 :28-29

இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக.ஆமென்.

அல்லேலூயா.

தேவனுடைய  ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொள்ளுதல்-திருஷ்டாந்தம்:-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,பஞ்சத்தில் வாடுகிற மக்களுக்கு யோசேப்பு தானியம் விற்கிறதை நாம் பார்க்கிறோம்.இந்த நாளில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம்.

ஏனென்றால்,

நீதிமொழிகள் 11:26

தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.

நீதிமொழிகள் 11:30

நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

நாம் எவ்விதத்தில் அனுதினம் தானியம் சேர்க்கிறோம்.எகிப்தில் யோசேப்பு தானியங்களை சேர்த்து வைத்ததால் எகிப்திலும் மற்றும் தேசங்களிலும் பஞ்சம் வரும் போது அவன் தானியங்களை விற்கிறான்.இவ்விதமாக நாம் ஆத்தும ஆதாயம் செய்வதற்காக தேவன் யோசேப்பை நமக்குத் திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.

மேலும்,

ஆகாய் 1:5 -11

இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.

உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கெடாமலும் போயிற்று.

நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும் மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.

மேற்கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்கு எதைக் காட்டுகிறது என்றால் தேவனுக்காக என்று நாம் எதையும் செய்யாமல் நம் சொந்த தேவைகளுக்காக என்று தேவனுடைய வேலையை செய்வதால் தேவன் நாம் எல்லாவற்றின் மேலும் வறட்சியை அனுப்புகிறார்.

ஆனால்,தேவன் யோசேப்பை மோசே மூலம் எவ்விதம் ஆசீர்வதிக்கிறார்.என்றால்,

உபாகமம் 33:13-17 

யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,

சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,

ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும் நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும்,

நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.

அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்;அவைகளாலே ஜனங்களை ஏகமாய் ஜனத்தின் கடையாந்தரங்களை மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.

இவ்விதமாக கர்த்தர் மோசேயின் மூலம் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்ததை நாம் வாசிக்கிறோம்.இவ்விதமாக தேவன் கொடுத்த ஆசீர்வாதம் யோசேப்புடைய தலையின் மேல் இருந்தது.அதனால் தேவன் சொல்லுகிறார்.

ஆகாய் 2:15-19

இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.

கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனந்திரும்பாமல்போனீர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.

இதனை வாசிக்கிற அன்பான தேவனுடைய ஜனங்களே, தேவன் யோசேப்புக்கு கொடுத்த ஆசீர்வாதங்கள் எல்லாம் அவன் சுதந்தரித்தான்.ஆனால் இஸ்ரவேல் புத்திரரில் யோசேப்பின் சந்ததிகள் ஏன் ஆசீர்வதிக்கபடவில்லை. நம் வாழ்க்கையில் முந்தின காரியங்கள் எல்லாம்  நாம் சிந்திக்கிற நேரமாகும். யோசேப்பு உண்மையுள்ளவனாக, ஒழுக்கமுள்ளவனாக, உபத்திரவத்தின் பாதையிலும் தான் தேவனுக்கு பிரியமான பாதையில் நடந்தான். மேலும், பொறுமை அவனிடத்தில் காணப்பட்டது.

தேவன் அவனை வாழ்வில் பார்வோனுடைய அரண்மனையில் உயர்த்தின போதிலும்,அவனுக்குள் பெருமை காணப்படவில்லை. தன் சகோதரர்களை கண்டபோது அவன் வைராக்கியம் காட்டவில்லை. முன் நடந்தது எல்லாம் தேவனுடைய செயல் என நினைத்துக்கொண்டான். அவனிடத்தில் தாழ்மை காணப்பட்டது.தேவ தயவு அவனுள்ளில் இருந்தது.வீம்பு காணப்படவில்லை, தேவ ஞானம் அவனிடத்தில் இருந்தது அதனால் தேவன் அவனை ஆசீர்வதிக்கிறார்.

ஆனால்,தேவபிள்ளைகளே தேவன் சொல்கிறார்.முந்தின நாட்களில் நடந்ததை ஒன்று சிந்தித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்க்கப்பட்ட நாளிலிருந்து நம்மை தேவன் ஆலயமாக கட்ட அஸ்திபாரம் போட தொடங்குகிறார்.ஆனால் தேவன் கேட்கிறார் களஞ்சியத்தில் விதை தானியம் உண்டோ? திராட்ச செடியும்,அத்திமரமும்,மாதளஞ்செடியும்,ஒலிவமரங்களும் கனிக்கொடுக்கவில்லையே.

பிரியமானவர்களே தேவன் நம்மிடத்தில் தந்த விதை தானியம் நம் உள்ளத்தில் இல்லை ஏனென்றால் நாம் உள்ளத்தை மாம்ச சிந்தைகளும் மற்றும் உலக சிந்தைகளிலும்,உலக கிரியைகளிலும் நம் நேரத்தை பலவிதத்தில் செலவழித்து நாம் ஆலயத்திலிருந்து அவருடைய மகிமையை பார்க்க வேண்டுமென்று ஆராய்ச்சி செய்யாததின் காரணமாகவும்,நம் சிந்தைகள் பல்வேறு திசைகளில் சிதறடிக்கிற காரணத்தாலும்,ஆகாயத்து பறவைகள் அதை பட்சித்து போடுகிறது. மேலும் திராட்ச செடியாகிய, கிறிஸ்துவின் கனி அத்திமரம்,மாதளஞ்செடி,ஒலிவ மரங்கள் இவைகளின் எந்த கனிகளின் கிரியைகளும் நம்மிடத்தில் இல்லாததால் தேவன் நம்மையும், சபைகளையும்,தேசத்தையும் கருக்காயினாலும், விஷப்பனியினாலும், கல்மழையாகிய, வாதையினாலும்,நாம் செய்கிற எல்லா கிரியைகளிலும் அடிக்கிறார்.

ஆதலால்,அருமையான தேவ ஜனமே இந்த நாளில் நாம் யாவரும் தேவனுக்கு பிரியமில்லாத கனியற்ற அந்தகார கிரியைகளுக்கு உடன்படாமல் அவர்களை கடிந்துக்கொண்டு எல்லாவிதச் செத்த கிரியைகளை விட்டு ஆவியின் கனியாகிய சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் நாம் விளங்குவோமானால் நிச்சயமாக தேவன் நம்மை இன்று முதல் ஆசீர்வதிப்பார். நாம் ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.                    

-தொடர்ச்சி நாளை.