தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 119:10
என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கர்த்தரின் சித்தத்திற்கு அவருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் தேவனுக்குரிய எண்ணங்கள் வெளிப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 2:1-10
தாவீது மரணமடையும் காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு.
நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,
மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.
செருயாவின் குமாரனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்த காரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள கச்சையிலும் தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே.
ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து, அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு.
கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.
மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது ராஜா மரணமடையும் நாள் சமீபித்த போது, தன் குமாரனாகிய சாலொமோனுக்கு கட்டளையிட்டு சொன்னதாவது; நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன் கொண்டு புருஷனாயிரு. நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும் எல்லாவற்றிற்கும் புத்திமானாயிருப்பதற்கும், கர்த்தர் என்னை குறித்து; உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்கு தங்கள் வழியைக் காத்துக் கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கதக்க புருஷன் உனக்கு இல்லாமற் போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையை திடப்படுத்துவதற்கும், மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும் படிக்கு அவருடைய காவலை காப்பாயாக. செருயாவின் குமாரனாகிய யோவாப் , இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்த காரியத்தினால் தனக்கு செய்த குற்றத்தை அறிந்திருக்கிறாயே; யோவாப் அவர்களை கொன்று, சமாதான காலத்திலே யுத்தக்காலத்து இரத்தத்தை சிந்தி, யுத்த காலத்து இரத்தத்தை தன் அரையிலுள்ள கச்சையிலும், தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே. ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து , அவனுடைய தலைமயிர் சமாதானமாய் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு என்று ராஜா சொல்கிறார். மேலும் கீலேத்தியனான பர்சிலாவின் குமாரருக்கு தயை செய்வாயாக, அவர்கள் உன் பந்தியில் சாப்பிடுகிறவர்களுடனே இருப்பார்களாக. உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக ஓடிப்போகையில் அவர்கள் என்னை ஆதரித்தார்கள். அல்லாமலும் தாவீது சொன்னது பென்யமீனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்கு போகிற வழியிலே கொடிய தூஷணமாய் என்னை தூஷித்தான்; ஆனாலும் யோர்தானிலே அவன் எனக்கு எதிர்க்கொண்டு வந்தபடியினால் நான் உன்னை பட்டயத்தாலே கொன்று போடுவதில்லை என்று கர்த்தர் மேல் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்தேன்.பின்னும் தாவீது சாலொமோனிடம் சொல்வது என்னவென்றால் நீ அவனை குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்க பண்ண; நீ அவனுக்கு செய்ய வேண்டியது அறிவாய் என்றான். பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகள் என்னவென்றால் நாம் அபிஷேகம் பண்ணபட்டால் ஒவ்வொருவரும் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் கர்த்தரை சேவித்து உண்மையாய் நடந்துக்கொள்ள வேண்டுமென்பதும், அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொண்டு நம்முடைய ஆத்துமாவுக்கு காவல் வைத்துக்கொள்வதும், கர்த்தருடைய பரிசுத்த பந்தியில் பங்குக் கொள்ள வேண்டுமென்றும் கர்த்தர் கூறுகிறது மட்டுமல்லாமல் நாம் என்றைக்காவது கர்த்தருக்கு விரோதமாக தூஷித்திருந்தோமானால், அவர் நிச்சயமாக நம்மை பாதாளத்தின் வேதனைக்குட்படுத்தி, பழிக்குப்பழி வாங்கி நீதியை சரிகட்டுகிறவராயிருக்கிறார். மேலும் மற்றவர்களுக்கு சமாதானத்துக்குரிய காரியங்களை செய்யாமல் இரத்தபழிக்குள்ள செயல்களோடு நடப்போமானால்; கர்த்தர் நம்முடைய சமாதானத்தை எடுத்துப் போடுகிறார். ஆதலால் நாம் எப்போதும் கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்து, அவர் சித்தப்படி செய்து நடப்போமானால் கர்த்தர் நம்மை என்றன்றைக்கும் காத்துக்கொள்வார். இவ்விதமாக கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுபோம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.