தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 31:23, 24
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
கிறிஸ்துவின் சிங்காசனம் என்றைக்கும் நிலைக்கும்படியாக தூஷணநாமத்தை நம் உள்ளத்திலிருந்து முழுமையும் அகற்றுவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளிலே நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சுத்தமான இருதயமும், நல்மனசாட்சியும், மாயமற்ற விசுவாசமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது
1இராஜாக்கள் 2:36-46
பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக் கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.
நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாகவே சாவாய்; அப்பொழுது உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்றான்.
சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாள் எருசலேமிலே குடியிருந்தான்.
மூன்று வருஷம் சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர் இரண்டுபேர் மாக்காவின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்துக்கு ஓடிப்போனார்கள்; உன் வேலைக்காரர் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்.
அப்பொழுது சீமேயி எழுந்து, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து, தன் வேலைக்காரரைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப் போனான்; இப்படிச் சீமேயி போய், தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.
சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்குப் போய், திரும்பிவந்தான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
ராஜா சீமேயியை அழைப்பித்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிற நாளிலே சாகவே சாவாய் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்குத் திடச்சாட்சியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?
நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன? என்று சொல்லி,
பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாப் பொல்லாப்பையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின்மேல் திரும்பப்பண்ணுவார்.
ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி,
ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.
பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து அவனை நோக்கி நீ எருசலேமிலே உனக்கு ஒருவீட்டை கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல் குடியிரு. நீ வெளியே போய் கீதரோன் ஆற்றை கடக்கும் போது சாகவே சாவாய்; அப்பொழுது உன் இரத்தபழி உன் தலையின் மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துக் கொள் என்றான். சீமேயி ராஜாவை பார்த்து நல்ல வார்த்தை என்று சொல்லி, சாலொமோனிடம் ஆண்டவன் சொன்னபடியே உமது அடியேன் செய்வேன் என்று சொல்லி சீமேயி அநேக நாள் எருசலேமிலே குடியிருந்தான். மூன்று வருஷம் சென்ற பின்பு சீமேயின் வேலைக்காரர் இரண்டு பேர் மாக்காவின் குமாரன் ஆகீஸ் என்னும் காத் ராஜாவினிடத்தில் ஓடிப் போனார்கள். இந்த காரியம் சீமேயி அறிந்தவுடன், அவன் எழுந்து, கழுதையின் மேல் சேணம் வைத்து தன் வேலைக்காரரை தேட காத் ஊரிலிருக்கிற ஆகீஸிடத்திற்கு போனான். அங்கேயிருந்து வேலைக்காரரை கொண்டு வந்தான். சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்கு போய், திரும்பி வந்தான் என்று ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்ட போது, ராஜா சீமேயியை அழைப்பித்து தான் சொல்லியிருந்த காரியங்களை எல்லாம் சீமேயினிடத்தில் கூறி; கர்த்தரின் ஆணையையும், நான் உனக்கு கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன? என்று சொல்லி; பின்னும் ராஜா சீமேயியை பார்த்து; நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு செய்ததும், உன் மனதுக்கு தெரிந்திருக்கிறதுமான எல்லா பொல்லாப்பையும் அறிந்திருக்கிறாய். ஆகையால் கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின் மேல் திரும்ப பண்ணுவார். மேலும் ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்கு கட்டளைக் கொடுத்தான்; அவன் வெளியே போய், அவன் மேல் விழுந்து அவனைக் கொன்றுப் போட்டான். ராஜ்யபாரம் சாலொமோனுடைய கையிலே உறுதிப்பட்டது.
பிரியமானவர்களே நம்முடைய இருதயம் கிறிஸ்துவில் ஸ்திரப்பட வேண்டுமாகில், இருதயத்தில் உள்ள கசப்பான எண்ணங்களும், பொல்லாத சிந்தனைகளும், மற்றவர்களை தூஷித்தலும் அகற்றப்பட்டு கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதனை திருஷ்டாந்தப்படுத்தி தான் தாவீது ராஜாவாக இருந்த போது சீமேயி கடுமையாக தூஷிக்கிறான். ஆனால் தாவீது யோர்தான் ஆற்றண்டை வந்த போது சீமேயியும் எதிர்கொண்டு வந்ததில் ஒருவனாயிருந்ததால், அப்போது ராஜவிடத்தில் கொஞ்சம் இரக்கம் பெற்றிருந்தான்; அதனால் ராஜா அவனை கொல்லவில்லை. ஆனாலும் தன் குமாரனுக்கு ராஜ்யபாரம் கொடுத்துவிட்டு, சொன்னதில் ஒரு காரியம் சீமேயி, ராஜாவுக்கு விரோதமாக தூஷித்த காரியம். ஆதலால் ராஜாவாகிய சாலொமோன் சில கட்டளை சீமேயிக்கு கொடுக்கிறான். ஆனால் கட்டளையை கைக்கொள்வேன் என்று சொல்லியும் மீறி நடந்ததின் காரணமாக அவன் கொல்லப்படுகிறான். இதன் கருத்து தான் தூஷண நாமத்திற்கு நம்முடைய உள்ளத்தில் ஒரு போதும் செயல்பட இடம் கொடுக்கக்கூடாது. அதனை அழித்துவிடுவதே கர்த்தருடைய செயலாயிருக்கிறது. ஆதலால் நாம் உள்ளத்திலிருக்கிற தூஷணத்தை முற்றிலும் அகற்றி, கிறிஸ்துவின் சிங்காசனம் என்றைக்கும் நிலைத்திருக்கும்படியாக ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.