தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 50:23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய விண்ணப்பம் கர்த்தருக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்துவின் சிங்காசனம் என்றைக்கும் நிலைத்திருக்க, தூஷண நாமம் நம்மிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது
1இராஜாக்கள் 3:1-4
சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.
அந்நாட்கள்மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், ஜனங்கள் மேடைகளிலே பலியிட்டுவந்தார்கள்.
சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.
அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
மேற்கூறிய வசனங்களில் சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங் கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம் பண்ணி, தன்னுடைய அரண்மனையையும், கர்த்தருடைய ஆலயத்தையும், சுற்று மதிலையும் கட்டி தீரு மட்டும் அவன் அவளை தாவீதின் நகரத்தில் கொண்டு வந்து வைத்தான். அந்நாள் மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு ஆலயம் கட்டப்படாததினால் ஜனங்கள் மேடைகளில் பலியிட்டு வந்தார்கள். சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்பு கூர்ந்து தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான். ஆனாலும் அவன் மேடைகளிலே தூபங் காட்டி பலியிட்டு வந்தான். அப்படியே ராஜா பலியிடும்படி கிபியோனுக்கு போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்த மேடையிலே சாலொமோன் ஆயிரம் சர்வாங்க பலிகளை செலுத்தினான். அப்போது கிபியோனிலே கர்த்தர் தரிசனமாகி
1இராஜாக்கள் 3:5
கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கர்த்தர் சொல்லும்போது, சாலொமோன் கர்த்தரிடம்
1இராஜாக்கள் 3:6-10
அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.
இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.
நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.
ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
மேற்கூறப்பட்டிருக்கிற படி சாலொமோன் கேட்ட காரியம் கர்த்தரின் பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தபடியினால் கர்த்தர் சாலொமோனிடம்
1இராஜாக்கள் 3:11-14
ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,
உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.
இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.
உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார்.
மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகள் எல்லாம் கர்த்தர் சாலொமோனிடம் கூறியது, அவன் நித்திரை தெளிந்தபோது, அவன் சொப்பனம் என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளை செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்து செய்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவென்றால், கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை அபிஷேகம் பண்ணுகிறார் என்பதும், அவ்விதம் அபிஷேகம் பண்ணபட்ட ஆத்துமா, கர்த்தரின் கற்பனை கட்டளைகளின் படி நடக்க கவனமாயிருக்க வேண்டும் என்பதும், மேலும் நம்முடைய உள்ளம், கர்த்தருக்கு சர்வாங்க பலி செலுத்துகிற பலிபீடமாக இருக்கும் என்பதும்,அந்த பலிபீடத்தில் அதிகமாக கர்த்தருக்கு ஸ்தோத்திரபலி செலுத்துகிறதுமாக இருந்தால் கர்த்தர் நம்மிடத்தில் தரிசனத்தில் பேசுகிறார். அல்லாமலும் நாம் அவரிடத்தில் கேட்டு பெற்று கொள்வது என்னவென்றால், தேவ ஞானமாகிய கிறிஸ்துவுக்காக விண்ணப்பம் பண்ணுவோமானால் அது கர்த்தருக்கு உகந்ததாயிருக்கும். இதன் காரியம் என்னவென்றால் கிறிஸ்து ராஜாவாக வருகிறார் என்பதன் திருஷ்டாந்தம் கொடுக்கப்படுகிறது. இதனைக்குறித்த விளக்கம் அடுத்த நாளில் கர்த்தருக்கு சித்தமானால் கிருபையில் தியானிப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.