தேவனுக்கே மகிமையுண்டாவதாக
பிரசங்கி 7:12
ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் வேசித்தன ஆவிக்கு இடம் கொடுக்கக் கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய விண்ணப்பம் கர்த்தருக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 3:15-28
சாலொமோனுக்கு நித்திரை தெளிந்தபோது, அது சொப்பனம் என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துசெய்தான்.
அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.
நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.
இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.
அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்.
என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்தபோது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்.
அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.
அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,
ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.
அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.
அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.
ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.
மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் சாலொமோனிடம் சொப்பனத்தில் பேசின பின்பு எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதான பலிகளை செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்து செய்தான். அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் அவனுக்கு முன்பாக வந்து நின்று சொன்னக்காரியம் என்னவென்றால் இருவரும் ஒரே வீட்டில் குடியிருந்ததாகவும், இருவரும் ஒரே வீட்டில் குடியிருக்கும் போது ஆண் பிள்ளையை பெற்றெடுத்ததாகவும், ஒரு ஸ்திரீ பெற்றெடுத்த மூன்றாம் நாளில் அடுத்த ஸ்திரீ பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் அந்த வீட்டுக்குள் இல்லை என்பதும் கூறப்பட்டது. முதலில் வந்து சொன்ன ஸ்திரீ, இராத்திரி தூக்கத்திலே தன் பிள்ளையின் மேல் புரண்டு படுத்ததினால் அது செத்துப்போயிற்று. ஆனால் அவள் ராஜாவாகிய சாலொமோனிடம் சொன்னது உமது அடியாள் நித்திரை பண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து என் மார்பிலே கிடத்தி விட்டாள். என் பிள்ளைக்கு பால்கொடுக்க காலமே நான் எழுந்திருந்த போது, அது செத்து கிடந்தது; பொழுது விடிந்த பின் நான் அதை உற்று பார்க்கும் போது, அது நான் பெற்ற பிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள். அதற்கு மற்ற ஸ்திரீ அப்படியல்ல உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள். இவ்விரண்டு பேரும் உன் பிள்ளை, என் பிள்ளை என்று வாதாடின காரணத்தால் ராஜா சொல்கிறது ஒரு பட்டயத்தை கொண்டு வாருங்கள்; அப்பொழுது பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டு வந்தார்கள். அப்பொழுது ராஜா உயிரோடிருக்கும் பிள்ளையை பிளந்து, பாதியை இவளுக்கும், பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான். அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையினுடைய தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்து விடும் என்றாள். மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம் பிளந்து போடுங்கள் என்றாள். அப்பொழுதுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல் அவளுக்கே கொடுத்து விடுங்கள்; அவளே அதின் தாய் என்றான். ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு நியாயம் விசாரிக்க தேவன் அருளிய ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு அவனுக்கு பயந்தார்கள்.
பிரியமானவர்களே, கர்த்தர் இதனை எதற்காக திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்றால், முந்தின பல நாட்களுக்கு முன்பு நாம் இஸ்ரவேலர்கள் நடுவில் வேசிகளின் ஆவி இப்பொழுதும் குடியிருக்கிறது என்று தியானித்தோம். ஆதலால் இந்நாளில் கூறப்படுவது ஒரே வீட்டில் இரண்டு வேசிகளான ஸ்திரீகள் குடியிருப்பதும், இவர்கள் இரண்டு பேரும் ஆண் பிள்ளையை பெற்றார்கள் என்றும் கூறப்படுவது நம்முடைய ஆத்துமாவை காட்டுகிறது. என்னவென்றால் நம்முடைய உள்ளத்தில் பிறக்கிற இரண்டு வித எண்ணங்கள், என்னவென்றால் அகோலாள் என்பதற்கு சமாரியா புறஜாதியின் கிரியைகள்; அகோலிபாள் என்பதற்கு எருசலேம். இங்கு மனந்திரும்புதல் இல்லாத செத்த கிரியைகள் வேசியின் ஆவிகள். இவைகள் விக்கிரகத்தை பின்பற்றுகிறவர்களை குறித்து திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. ஆனால் அகோலாளை காட்டிலும், அகோலிபாள் அதிகமாக வேசித்தனம் செய்கிறதாக திருஷ்டாந்தம் காட்டுகிறது. ஏனென்றால் எருசலேம் என்றால் கிறிஸ்துவின் பிள்ளைகள் என்று வெளிவேஷமாக நடந்து சத்திய வசனத்திற்கு கீழ்ப்படியாமல் உள்ளத்தில் பல உலக ஆசை இச்சை, அலங்காரங்களை செய்கிறதால், அகோலாளை காட்டிலும், அகோலிபாளின் கிரியைகளை கர்த்தர் கடுமையாக தண்டிக்கிறார். ஆதலால்
எசேக்கியல் 23:36-49
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.
அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
அன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.
இதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக்கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,
சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது; என் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.
அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.
விபசாரங்களில் கிழவியானவளைக்குறித்து அவள் இன்னும் தன் வேசித்தனங்களைச் செய்வாளோ என்றேன்.
பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்; இந்தப்பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள்.
ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும், இரத்தஞ்சிந்தும் ஸ்திரீகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும் நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தைவரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால் வெட்டிப் போடுவார்கள்; அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன்.
உங்கள் முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் நரகலான விக்கிரகங்களைச் சேவித்த பாவங்களைச் சுமந்து, நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை தியானித்து, நம்முடைய ஆத்துமா ஞானமடைந்து புதிய எருசலேமாக மாறும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.