தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 1:19
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமா பின்மாறாமல் ஜாக்கிரதையாகயிருப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் வேசித்தன ஆவிக்கு இடம் கொடுக்கக்கூடாமல் இருக்க வேண்டும் என்பதனை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 4:1- 2
ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாயிருந்தான்.
அவனுக்கு இருந்த பிரபுக்கள்: சாதோக்கின் குமாரனாகிய அசரியா பிரதான மந்திரியாயிருந்தான்.
மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளில் சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாயிருந்தான். மேலும் அவனுக்கு இருந்த பிரபுக்கள்:
1இராஜாக்கள் 4:3-19
சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான்.
யோய்தாவின் குமாரன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாயிருந்தார்கள்.
நாத்தானின் குமாரன் அசரியா மணியகாரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான்.
அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனீராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.
ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும் வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள்.
அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருந்தான்.
தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.
ஏசேதின் குமாரன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோகோவும் எப்பேர் சீமையனைத்தும் இவன் விசாரிப்பில் இருந்தது.
அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.
அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும் யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.
இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.
அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.
ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களில் எழுதபட்டுள்ள இஸ்ரவேலும் யூதாவும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். மேலும் நதிதொடங்கி பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லை மட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுக் கொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்கு க் காணிக்கைகளைக் கொண்டு வந்து அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை சேவித்தார்கள். இவைகள் என்னவெனில் நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்பின் களிகூருதல் என்றால் உள்ளான மனுஷனில் நம் ஆத்துமா கிறிஸ்துவுக்காக தங்களை ஆயத்தப்படுத்தும் போது நமக்குள் கிறிஸ்து களிகூருகிறார். நாம் கிறிஸ்துவை சேவிக்கும்படியாக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தியது தான் சாலொமோன் கர்த்தரிடம் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தை கேட்டுக்கொண்டபடியினால் கர்த்தரும் ஞானத்தை அருளுகிறார். அதென்னவெனில் ஞானமாகிய கிறிஸ்து நம்மை நியாயம் விசாரிப்பதற்கு வருகிறார் என்கிற திருஷ்டாந்தம். அவ்விதம் இரட்சிப்பை அடைந்தவர்களின் ஆத்துமா பின் வாங்குகிற காரியம் தான் பெலிஸ்தியர் தேச வழியாய் எகிப்தின் எல்லை மட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுக்கொண்டிருந்தான். அதென்னவெனில் இரட்சிக்கப்பட்டு தங்களை சுயம் வெறுத்தவர்கள், பெலிஸ்திய கிரியைகளினால் உலக ஆடம்பர அலங்காரத்துக்குள்ளாகி, பின்பு தங்கள் ஆத்துமா விரும்புகிற படி மாம்ச இச்சைகளை செய்து, தங்கள் மனம் போன வாழ்க்கை செய்து பாவத்துக்குள்ளாகி எகிப்தாகி விடுகிறார்கள். அவர்களை கர்த்தர் ஆளுகை செய்யும் போது, அவர்கள் கர்த்தருக்கு தங்களை மீண்டும் காணிக்கையாக்குவார்கள் என்பதும், அவ்விதமாக கர்த்தரை சேவிப்பார்கள் என்பது தான் சாலொமோனின் திருஷ்டாந்தம். ஆதலால்
பிரியமானவர்களே, நம்மில் யாராவது பின்வாங்கி எகிப்தில் இருந்து, முந்தின காரியங்களையெல்லாம் விட்டு, தேவனோடு செய்த உடன்படிக்கையை மறந்து, தங்கள் மாம்சமும் மனதும் விரும்பினதை செய்தால், தங்களில் இருக்கிற பின்மாற்றத்தை உணரந்துக்கொண்டு; இதனை வாசிக்கும் அன்பான சகோதர, சகோதரிகளே, இப்பொழுதே நம்மை காணிக்கையாய் அர்பணித்து, அவருக்கு சேவை செய்யும்படியாக ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.