தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 66:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தரின் சபையின் நிழலில் நம்முடைய ஆத்துமாவை பரிசுத்த பந்திக்காக ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பின் மாறாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 4:22-34
நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,
கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுக்கப்பட்ட பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாம்.
நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது.
சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.
சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்.
மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,
குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்.
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.
அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.
அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.
சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.
மேற்கூறிய வசனங்களில் சாலொமோனுக்கு செல்லும் சாப்பாடுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும், கலைமான்களையும் வெளிமான்களையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுக்கப்பட்ட பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாம். நதிக்கு இப்புறத்திலுள்ள நிப்சா தொடங்கி,ஆசா மட்டுமுள்ளவை எல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜ்யங்களையும் ஆண்டு வந்தான்; அவனை சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது. சாலமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயர்செபா மட்டும் யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்ச செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தி்ன் நிழலிலும் குடியிருந்தார்கள். சாலொமோனுக்கு நாலாயிரம் இரத குதிரைலாயங்கும், பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள். முந்தின நாளில் எழுதப்பட்டுள்ள மணியகாரரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தன் தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து குதிரைகளுக்கும், ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின் பிரகாரம் அவைகள் இருக்கும் இடத்தில் கொண்டு வருவார்கள்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்வைகளின் கருத்துக்கள் என்னவென்றால், திருஷ்டாந்தமாக கூறுவது நாம் கர்த்தருக்கு புசிப்புக்கேற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும்; அப்போது தான் கர்த்தர் நம்மை முழுமையும், நம்மில் இருக்கிற உலக ராஜ்யங்களை ஆண்டுக்கொண்டு, நமக்குள் சமாதானத்தினால் நிறைப்பார். அப்போது நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் சபையாக அவருடைய நிழலின் கீழ் குடியிருப்போம். மேலும் கர்த்தரின் பரிசுத்த பந்திக்கு உரிய சகல ஆயத்தங்களாலும், சபை கூடி வருகிற அத்தனை ஜனங்கள் திருப்தியாக புசிக்கவும் ஏற்ற ஆகாரத்தை கர்த்தருடைய சித்தப்பிகாரம் கொடுத்து கர்த்தருடைய ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.