தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 24:15 

துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் தாபரஸ்தலமாக விளங்கி, நம்மில் புது பாடல் வெளிப்படுவது திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கரத்தரின் சபையின் நிழலில் நம்முடைய ஆத்துமாவை பரிசுத்த பந்திக்காக ஆயத்தப்படுத்தி கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

1இராஜாக்கள் 4:29-34 

தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.

சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.

அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.

அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.

லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.

சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும், புத்தியையும், கடற்கலை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.  மேலும் சகல கிழகத்தி புத்திரரின் ஞானத்தையும், எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.  அல்லாமலும் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல் தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும் மற்றும் எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான். என்னவெனில் சுற்றிலும் இருந்த  எல்லா ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பெரியதாயிருந்தது.  அவன் மூவாயிரம் நீதிமொழிகளையும்  சொல்லி  ஆயிரத்து ஐந்து பாட்டுகளையும் பாடினான். லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்க்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்பு பூண்டுவரைக்குமுள்ள மரமுதலாகிய தாபரங்களை குறித்தும், மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், மச்சங்கள் ஆகிய  இவைகளைக் குறித்தும் வாக்கியங்களை சொன்னான்.  சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தை கேட்கிறதற்கு வந்தார்கள். 

பிரியமானவர்களே, நம்முடைய உள்ளத்தில் ஞானமாகிய கிறிஸ்து வெளிப்படுவதற்கு திருஷ்டாந்தம் தான் சாலொமோன்  என்பதையும், எல்லா மனுஷ ஞானத்தை காட்டிலும் கிறிஸ்துவின் ஞானம் சிறந்ததாயிருந்தது என்பதும், இந்த ஞானத்தோடுக்கூட புத்தியாகிய பரிசுத்த  ஆவியானவர் வெளிப்படுவார் என்பதும், கடற்கரை மணலத்தனை மனோவிருத்தியையும்; இந்த மனோ விருத்தி என்பது எல்லா நுணுக்கமான காரியங்கள் ஆராய்ந்தறிகிற தன்மையுமாயிருந்தது.  இவ்விதமாக ராஜாவாகிய சாலொமோனில் கிறிஸ்து வெளிப்பட்டு மூவாயிரம் நீதிமொழிகளையும், ஆயிரத்து ஐந்து பாட்டுகளும் பாடப்படுகிறது. இந்த நீதி மொழிகளும், பாடல்களும் கர்த்தராகிய கிறிஸ்து, வசனங்களில் கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்பு பூண்டு வரைக்குமுள்ள மரமுதலானவைகளை நம்முடைய ஆத்துமாவின் வளர்ச்சி குன்றியிருக்கிறையும் வளருகிறதையும் எடுத்து காட்டுகாட்டி போதித்து நடத்துகிறார் அதுவுமல்லாமல் நம் ஒவ்வொருவருடைய நாவிலும் புது பாட்டு தருகிறார்.  மேலும் மிருகங்கள், பறைவைகள், ஊரும் பிராணிகள், மச்சங்கள் இவைகளையும் நம்முடைய ஆத்துமாவின் பலனை குறித்து காட்டுகிறார்.  இப்படியாக அவருடைய ஞானம் அளவிடமுடியாதவைகளாக எல்லா ஞானத்தை கட்டிலும் சிறந்ததாக விளங்குகிறார்.  இப்படியாக வேத வசனம் ஆராய்ந்து முடியாத கருத்துக்களோடு  கர்த்தர் வெளிப்படுகிறார்.  இதனை அறிந்துக்கொள்ளும்படி நானாஜாதிக்காரரும் அவரிடத்தில் வருகிறார்கள்.  இவ்விதமாக கிறிஸ்துவின் கீர்த்தி நம்மில் வெளிப்பட்டு, நானா ஜாதிகளும் கர்த்தரிடத்தில் வரும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.